தமிழில் கணினி செய்திகள்

டெஸ்க்டாப் ஐகான்களை வரிசைப்படுத்த

♠ Posted by Kumaresan Rajendran in
கணினியில் தினமும் பல்வேறு விதமான கோப்புகளை கையாளுவோம். பெரும்பான்மையானோர் பல முக்கியமான கோப்புகளை டெக்ஸ்டாப்பிலேயே வைத்து விடுவார்கள், பல்வேறு விதமான கோப்பு அடைவு கொண்ட பைல்கள் டெஸ்க்டாப்பிலேயே வைத்திருப்போம் இது கணினியின் அழகினை பாதிக்கும். மேலும் ஒரு சில நேரங்களில் சில முக்கியமான கோப்புகளை டெக்ஸ்டாப்பிலிருந்து நீக்கி விடுவோம். இதற்கு பதிலாக டெஸ்க்டாப் ஐகான்களை குறிப்பிட்ட தனித்தனி பகுதிகளாக பிரித்து வைத்துக்கொள்ள முடியும்.

இந்த தனித்தனி பகுதிகளாக பிரிப்பதனால் வேர்ட், பிடிஎப், உலாவி, படங்கள் என தனித்தனி பகுதிகளாக பிரித்து வைத்துக்கொள்ள முடியும். இதற்கு FENCES என்னும் மென்பொருள் வழிவகை செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி 

மென்பொருளை சுட்டியில் குறிப்பிட்ட தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யும் போது மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு ஒகே செய்யவும். பதிவிறக்க சுட்டியானது மின்னஞ்சலுக்கு வரும் அதை பயன்படுத்தி மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். பின் மென்பொருளை கணினியில் நிறுவிக்கொள்ளவும். 

பின் டெஸ்க்டாப்பில் வெற்றிடத்தில் சுட்டியால் ட்ராக் செய்து இழுக்கவும். அப்போது தோன்றும் துணை விண்டோவில் Create Fence Here,  Create Folder Portal Here என்று இருக்கும். இதனை தெரிவு செய்து உருவாக்கி கொள்ள முடியும்.


முதலில் ஒரு கோப்பறையினை உருவாக்கி அதில் குறிப்பிட்ட ஐகான்கள் அனைதையும் இட்டுவிடவும். பின் Create Folder Portal here என்பதை தெரிவு செய்து குறிப்பிட்ட கோப்பறையினை தெரிவு செய்யவும். அப்போது டெஸ்க்டாப்பில் தனியாக வரிசைப்படுத்தப்பட்டிருக்கும்.


இதை வேண்டுமெனில் நீக்கி கொள்ளவும் முடியும்.

கோப்பறையின் நிறங்களை மாற்ற

♠ Posted by Kumaresan Rajendran in
வீட்டில் எப்படி தனித்தனி அறைகளாக  சமையல் அறை, பூஜை அறை என்று வைத்திருக்கிறமோ அதே போன்று கணினியிலும் பாட்டு, படம், வீடியோ என்று ஒவ்வொன்றுக்கும் தனித்தனி கோப்பறைகள் வைத்திருப்போம். பொதுவாக விண்டோஸ் இயங்குதளத்தில் கோப்பறையினை உருவாக்கும் போது அது மஞ்சள் நிறத்தில் மட்டுமே இருக்கும் நாம் விரும்பினால் அதனை வேறு ஒரு நிறத்திற்கு மாற்றிக்கொள்ள முடியும். இதற்கு ஒரு மென்பொருள் உதவுகிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்தில் இருந்து மென்பொருளை பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். பின் கோப்பறையின் மீது வலது கிளிக் செய்து தோன்றும் வரிசையில் Colorize! என்பதை தெரிவு செய்யவும். தோன்றும் துணை வரிசையில் குறிப்பிட்ட நிறத்தினை தேர்வு செய்யவும். சில நிமிடங்களில் குறிப்பிட்ட நிறத்தில் கோப்பறையின் நிறம் மாற்றப்படும்.

இமேஜ் பைல்களை பிடிஎப் கோப்பாக மாற்ற

♠ Posted by Kumaresan Rajendran in ,
சான்றிதழ்கள், புத்தகங்கள் நகலெடுத்து (Scan) தனித்தனி இமேஜ் பைலாக வைத்திருப்போம். மேலும் இதுபோன்று முக்கியமான கோப்புகளை பிரதியெடுத்து இமேஜ் பைலாக வைத்திருப்போம். அவை அனைத்தையும் ஒரே கோப்பாக ஒன்றினைக்க வேண்டுமெனில் நாம் அந்த இமேஜ் பைல்களை பிடிஎப் கோப்பாக மாற்றினால் மட்டுமே முடியும். இமேஜ் கோப்புகளை பிடிஎப் கோப்பாக மாற்ற ஒரு இலவச மென்பொருள் வழிவகை செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி 


மென்பொருளை சுட்டியில் குறிபிட்ட தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்து படத்தினை தேர்வு செய்து பின் Convert Now என்னும் பொத்தானை அழுத்தி கன்வெர்ட் செய்து கொள்ளவும்.


Setting பொத்தானை அழுத்தி Security Settings எனும் டேப்பினை கடவுச்சொல்லை உள்ளிட்டு இறுதியாக Convert Now பொத்தானை அழுத்தவும். தற்போது கடவுச்சொல் குறிப்பிட்ட பிடிஎப் கோப்பிற்கு கடவுச்சொல் உள்ளிடப்பட்டு இருக்கும். மேலும் குறிப்பிட்ட பிடிஎப் கோப்பிற்கு வாட்டர்மார்க் இட்டுக்கொள்ளவும் முடியும்.

பிடிஎப் கோப்புகளை பிரிக்க, சேர்க்க மற்றும் பக்கங்களை மறுவரிசைப்படுத்த

♠ Posted by Kumaresan Rajendran in
பிடிஎப் கோப்பினை ஒருமுறை உருவாக்கி விட்டால் அதனை உடைக்கவோ, மறுவரிசைப்படுத்தவோ முடியாது மேலும் இவ்வாறு உருவாக்கும் பிடிஎப் கோப்புகளில் எந்தவித மாற்றமும் செய்ய முடியாது. என்றுதான் பலரும் நினைத்துகொண்டு இருப்பார்கள் ஆனால் பிடிஎப் கோப்பினை விரும்பியவாறு
மாற்றியமைத்துக்கொள்ள முடியும். இதற்கு ஒரு இலவச மென்பொருள் வழிவகை செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை சுட்டியில் குறிப்பிட்ட தளத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை திறக்கவும். Plugins வரிசையின் கீழ் உள்ள இணைப்பினை பயன்படுத்தி பிடிஎப் கோப்பினை தேவைகேற்ப தலைகீழாக மாற்றவும், பிரிக்கவும், இணைக்கவும் வேண்டியவாறு பக்கங்களை திருத்திக்கொள்ளவும். இந்த மென்பொருள் வழிவகை செய்கிறது.

இது ஒரு இலவச மென்பொருள் ஆகும். பிடிஎப் கோப்புகளை திருத்தம் செய்வதற்கு அருமையான மென்பொருள் ஆகும்.

விண்டோஸ் 8.1 ல் நூலக கோப்பறையைகளை (Library Folders) மை கம்ப்யூட்டரிலிருந்து நீக்க

♠ Posted by Kumaresan Rajendran in ,
புதியதாக வெளிவந்துள்ள விண்டோஸ் 8.1 ல் மை கம்ப்யூட்டரை ஒப்பன் செய்தால் அதன் கூடவே நூலக அறைகளான போட்டோ, வீடியோ, டாக்குமெண்ட் , பாடல், பதிவிறக்க அறைகள் இருக்கும். இவ்வாறு இருப்பது ஒருவிதமான எரிச்சலை உண்டாக்கும். இதனை வேண்டுமெனில் மறைத்து வைத்துக்கொள்ள முடியும். 


முதலில் விண்டோஸ் ரிஸிஸ்டரியை ஒப்பன் செய்யவும். விண்டோஸ் கீ மற்றும் R பொத்தான்களை ஒருசேர அழுத்தி தோன்றும் விண்டோவில் regedit என்று உள்ளிட்டு OK பொத்தானை அழுத்தவும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் கீழ்காணும் வரிசைப்படி ஒப்பன் செய்யவும். HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\Current Version\explorer\MyComputer\NameSpace ல் உள்ள துணைகீகளை நீக்கவும்.


{1CF1260C-4DD0-4ebb-811F-33C572699FDE}         : Music folder

{374DE290-123F-4565-9164-39C4925E467B}            : Downloads folder

{3ADD1653-EB32-4cb0-BBD7-DFA0ABB5ACCA}  : Pictures folder

{A0953C92-50DC-43bf-BE83-3742FED03C9C}        : Videos folder

{A8CDFF1C-4878-43be-B5FD-F8091C1C60D0}       : Documents folder

{B4BFCC3A-DB2C-424C-B029-7FE99A87C641}     : Desktop


வேண்டிய கீகளை மட்டும் வேண்டுமெனில் நீக்கி கொள்ளவும். துணை கீகளை நீக்க கீ மீது வலது கிளிக் செய்து தோன்றும் சாளரப்பெட்டியில் Delete னை தேர்வு செய்யவும்.

பின் மைகம்ப்யூட்டரை ஒப்பன் செய்யவும். இப்போது நூலக அறைகள் நீக்கப்பட்டு இருக்கும்.


பின் இடது பேனலில் வலது கிளிக் செய்து தோன்றும் சாளரப்பெட்டியில் Show libraries என்பதை டிக் செய்யவும். இப்போது நூலக அறைகள் தனியே இருக்கும். அதனை வழக்கம் போல பயன்படுத்திக்கொள்ள முடியும்.

விண்டோஸ் 8 மிகவும் பாதுகாப்பானது

விண்டோஸ் இயங்குதளங்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. சிறப்புகுரிய விண்டோஸ் இயங்குதளங்கள் என்றால் அது விண்டோஸ் எக்ஸ்பி, ஏழு மற்றும் எட்டு போன்றவைகளை மட்டும்தான் குறிப்பிட முடியும். இந்த விண்டோஸ் 8 இயங்குதளத்தில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகமாக அடங்கியுள்ளது. 

விண்டோஸ் 8 இயங்குதளம் விண்டோஸ் ஏழு இயங்குதளத்தை விட 7 மடங்கும், விண்டோஸ் எக்ஸ்பியினை விட 21 மடங்கும் பாதுகாப்புடையதாகும், என மைக்ரோசாப்ட் நிறுவனமே கூறியுள்ளது.

இயங்குதளங்களை பாதுகாக்கவும், இயங்குதளங்களில் ஏற்படும் கோளாருகளை சரி செய்யவும் அவ்வபோது அப்டேட்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிடும். அவ்வாறு இருந்தும் இயங்குதளத்தில் வைரஸ் பாதிப்புகள் ஏற்படும். மேலும் இணைய உதவியுடன் கணினியில் உள்ள தகவல்களை ஹேக்கர்கள் திருடவும் வாய்ப்புண்டு ஆனால் இந்த விண்டோஸ் 8 இயங்குதளம் அவ்வாறு இல்லை, மேலும் மிகவும் அதிக பாதுகாப்பு அம்சங்கள் இந்த இயங்குதளத்தில் அடங்கியுள்ளது.


2001 ல் விண்டோஸ் எக்ஸ்பி வெளியிட்ட போது வெறும் 50 மில்லியன் இணைப்பயனாளர்களே இணையத்தை பயன்படுத்தினர் ஆனால் தற்போது 2.7பில்லியன் இணைப்பயனாளர்கள் இணையத்தை பயன்படுத்துகிறனர்.

நெருப்புநரி உலாவியை மீட்டமைக்க (Reset)

♠ Posted by Kumaresan Rajendran in
உலாவிகளில் முதலிடத்தில் இருப்பது நெருப்புநரி உலாவி ஆகும். இந்த உலாவியில் பல்வேறு சிறப்பம்சங்கள் அடங்கியுள்ளது. குறிப்பாக நீட்சிகளை கூறலாம். நெருப்புநரி நீட்சியின் உதவியுடன் பல்வேறு பணிகளை செய்ய முடியும். இந்த உலாவியை பயன்படுத்துகையில் சில நேரங்களில் கோளாரு ஏற்படும். அதுபோன்ற கோளாருகளை சரிசெய்ய நெருப்புநரி உலாவியை மீட்டமைக்க வேண்டும். 

நெருப்புநரி உலாவியை மீட்டமைக்க நெருப்புநரி உலாவியிலேயே வழி உள்ளது. இதனை செய்ய முதலில் நெருப்புநரி உலாவியை திறக்கவும். பின் Help > Troubleshooting Information எனும் வரிசையில் மெனுவினை தெரிவு செய்யவும்.  அல்லது அட்ரஸ் பாரில் about:support என்று தட்டச்சு செய்து என்டர் பொத்தானை அழுத்தவும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Rest Firefox என்னும் பொத்தானை அழுத்தவும். அடுத்து தோன்றும் சாளரப்பெட்டியில் உள்ள Rest Firefox பொத்தானை அழுத்தவும்.


அவ்வளவுதான் நெரிப்புநரி உலாவி சில நொடிகளில் மீட்டமைக்கப்படும். மீட்டமைக்கும் போது புக்மார்க், ஹிஸ்ட்டரி, சேமிக்கப்பட்டுள்ள கடவுச்சொற்கள் போன்றவைகளும் அழிக்கப்பட்டு மீட்டமைக்கப்படும்.

கோப்பறைக்கான பூட்டினை உருவாக்க

♠ Posted by Kumaresan Rajendran in ,,
பாதுக்காபு நலன் கருதியே ஒரு சில மிக முக்கியமான கோப்புகளை மட்டும் யார் கண்களிலும் படாமல் மறைத்து வைக்க என்னுவோம். கோப்புகள் மற்றும் கோப்பறைகளை பூட்டி வைக்க மென்பொருள் சந்தையில் பல்வேறு இலவச மென்பொருள்கள் கிடைக்கிறன. அதற்கு மாற்று வழியாக மென்பொருள் துணையின்றி கோப்பறைகளை பூட்டி வைக்க நாமே ஒரு அப்ளிகேஷன் போன்ற ஒன்றை உருவாக்க முடியும். இதற்கு நோட்பேட் இருந்தால் போதுமானது ஆகும்.

முதலில் நேட்பேடினை திறந்து கொள்ளவும். பின் கீழ் உள்ள கோடினை நகலெடுத்து கொள்ளவும்.

cls
@ECHO OFF
title http://tamilcomputerinfo.blogspot.in/
if EXIST "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" goto UNLOCK
if NOT EXIST Tcinfo goto MDTcinfo
:CONFIRM
echo Are you sure to lock this folder? (Y/N)
set/p "cho=>"
if %cho%==Y goto LOCK
if %cho%==y goto LOCK
if %cho%==n goto END
if %cho%==N goto END
echo Invalid choice.
goto CONFIRM
:LOCK
ren Tcinfo "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
attrib +h +s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
echo Folder locked
goto End
:UNLOCK
echo Enter password to Unlock Your Secure Folder
set/p "pass=>"
if NOT %pass%== tamil goto FAIL
attrib -h -s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
ren "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" Tcinfo
echo Folder Unlocked successfully
goto End
:FAIL
echo Invalid password
goto end
:MDTcinfo
md Tcinfo
echo Tcinfo created successfully
goto End
:End


இதில் சிகப்பு நிறத்தில் குறிப்பிட்டுள்ள எழுத்துக்களை உங்கள் விருப்பபடி மாற்றியமைத்துக்கொள்ள முடியும்.

http://tamilcomputerinfo.blogspot.in/ - தலைப்பு

Tcinfo - கோப்பறையின் பெயர்

tamil - கடவுச்சொல்

பின் இதனை .bat பார்மெட்டில் சேமித்துக்கொள்ளவும். உதாரணமாக lock.bat என்று குறிப்பிட்டு பின் All Files என்று குறிப்பிட்டு சேமித்துக்கொள்ளவும். பின் இந்த lock.bat பைலை திறக்கவும்.




திறந்தவுடன் நீங்கள் குறிப்பிட்ட பெயரில் ஒரு கோப்பறை ஒன்று உருவாக்கப்படும். அந்த கோப்பறையில் எந்தெந்த தகவல்களை மறைக்க விருப்புகிறீர்களோ அவையனைத்தையும் நகர்த்தி கொள்ளவும். பின் மீண்டும் lock.bat பைலை திறக்கவும்.




தோன்றும் விண்டோவில் Y பொத்தானை அழுத்தி என்டர் பொத்தானை அழுத்தவும். தற்போது குறிப்பிட்ட கோப்பறை மறைக்கப்படும். மீண்டும் அதை திறக்க விரும்பினால் அந்த lock.bat பைலை திறக்கவும். அப்போது கடவுச்சொல் கேட்கும் அதை உள்ளிட்டு என்டர் பொத்தானை அழுத்தவும்.





அப்போது அந்த கோப்பறை திறக்கும். அதனை வழக்கம்போல பயன்படுத்திக்கொள்ள முடியும். இதே வழிமுறையை பின் பற்றி தேவைப்படும் கோப்பறைகளை மறைத்துக்கொள்ள முடியும்.

கூகுள் - யுக்திகள்

♠ Posted by Kumaresan Rajendran in
இணைய உலகில் தவிர்க்க முடியாத ஒரு தளமாக கூகுள் தளம் உருவெடுத்துள்ளது. இன்று எந்த ஒரு தளத்தை தேடி சென்றாலும் இணைய பயன்பாட்டாளர்கள் முதலில் நாடுவது கூகுள் தளத்தைதான். மேலும் இந்நிறுவனம் கூடுதலாக இணைய சந்தையில் பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது. மேலும் முக்கிய தினங்களுக்கு கூகுள் லோகோவினை கூகுள் நிறுவனம் மாற்றும் அதில் அன்றைய தினத்தின் சிறப்பினை விளக்கும் வகையில் இருக்கும் மேலும் விளையாட்டு அம்சம் அடங்கியதாக இருக்கும். 

இதே போன்று பல்வேறு கூகுள் தொடர்பான யுக்திகள் (Tricks) உள்ளன அவை,
கூகுள் தளத்தில் உள்நுழைந்து கொள்ளவும்.


பின் கீழ்வரும் குறிச்சொல்லை உள்ளிட்டு தேடவும். தோன்றும் விண்டோவில் முதல் இணைப்பினை திறக்கவும்.

  • google guitar
  • google snake
  • Zerg Rush
  • calculator
  • google mirror
  • Google Sphere
  • Google terminal
  • Do a barrel roll
  • Google chuck norris kisses rajnikanth
  • google gravity
  • Dark google
  • Google underwater
  • Google Sphere
  • Google Loco
  • google pacman
  • google mirrorepic googlethe answer to life, the universe and everything
  • once in a blue moon
  • the loneliest number
  • make google logo black and white
  • Weenie Google
  • temperature/mb to kb/Length converter
  • temperature
  • time
இசையமைக்கவும், கணிப்பான் பயன்படுத்தவும், விளையாட்டுகளை விளையாடவும். கூகுளிலின் முகப்பு பக்கத்தை திருப்பவும். மேலும் பல்வேறு விதமான விநேதங்கள் இதில் அடங்கியுள்ளது.

படங்களின் வண்ணங்களை மாற்ற

எந்த ஒரு தளத்தை பயன்படுத்த வேண்டுமானாலும் அதற்கு புதியதாக பயனர் கணக்கு ஒன்று உருவாக்க வேண்டும். அவ்வாறு உருவாக்கும் பயனர் கணக்குகளுக்கு படங்களை அமைக்க வேண்டும். அதே போன்று சோஷியல் தளங்களான முகநூல், டுவிட்டர், கூகுள்+ போன்ற தளங்களிலும் அடிக்கடி படங்களை பகிர்ந்து கொள்வோம். சாதரணமாக புகைப்படங்களை பகிர்ந்து கொள்வதற்கு பதிலாக அதனை மெறுகேற்றம் செய்து வண்ணமயமாக பகிர்ந்து கொண்டால் அழகாக இருக்கும். படங்களை வண்ணமயக்காக ஒரு இலவச மென்பொருள் வழிவகை செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திலிருந்து மென்பொருளை பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் படத்தினை ஒப்பன் செய்து பின் Randomize எனும் பொதியை கிளிக் செய்யவும். அடுத்தடுத்து கிளிக் செய்தால் படத்தின் வண்ணம் தொடர்ந்து மாற்றமடையும். 

பின் படத்தினை .jpg, .gif, .pcx, .png, .bmp, .tif, .tga போன்ற பார்மெட்களில் சேமித்துக்கொள்ள முடியும்.  படத்தினை திருப்பிகொள்ளும் வசதியும் இந்த மென்பொருளில் உள்ளது.

MailBird - ஜிமெயில் மின்னஞ்சல் கிளையண்ட்

இணைய உலகில் இரகசியமாக தகவல்களை பரிமாறிக்கொள்ள பயன்படும் ஒரு வழி மின்னஞ்சல் ஆகும். இந்த வகையில் மினனஞ்சல் சேவையினை பல்வேறு நிறுவனங்கள் இலவசமாக வழங்கி வருகின்றன. அதில் முதன்மையானது கூகுள் நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் ஆகும். இந்த சேவையினை இன்று மின்னஞ்சல் பயன்படுத்துபவர்களில் 70 சதவிகிதத்தினர் பயன்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறன. இந்த மின்னஞ்சல் வசதியை நேரிடையாக உலாவில்யில் திறந்து பயன்படுத்த முடியும். மேலும்  கிளையண்ட்கள் பல உள்ளன அதில் முதன்மையானது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அவுட்லுக் ஆகும். மேலும் பல இலவச அப்ளிகேஷன்கள் உள்ளது அதில் ஒன்றுதான் MailBird ஆகும். இது ஜிமெயிலுக்கென உருவாக்கப்பட்டது ஆகும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திலிருந்து மென்பொருளை பதிவிறக்கி கொள்ளவும். பின் இந்த MailBird அப்ளிகேஷனை கணினியில் நிறுவவும். கணினியில் நிறுவும் போது இணைய இணைப்பு அவசியம் தேவை. 


அப்ளிகேஷனை கணினியில் நிறுவிய பின் ஜிமெயிலின் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும். பின் புதியதாக மின்னஞ்சல் அனுப்புதல், ஏற்கனவே வந்துள்ள மின்னஞ்சல்களை பார்வையிடுதல் போன்ற செயல்களை இலகுவாக செய்ய முடியும்.

முகநூல் பயனர்கணக்கு போட்டோவையும் கவர் போட்டோவையும் ஒன்றினைக்க

♠ Posted by Kumaresan Rajendran in ,,
முகநூல் தளத்தில் நாளுக்கு நாள் பயனாளர்கள் அதிகரித்து கொண்டே வருகின்றனர். அதற்கு ஏற்றார் போல் இந்த தளத்தில் புதுப்புது வசதிகள் புகுத்தப்பட்டு வருகிறன. அந்த வகையில் அன்மையில் புகுத்தப்பட்ட வசதிதான் கவர் போட்டோ ஆகும். இந்த கவர் போட்டோ அமைக்கும் போது ஒரளவுக்கு நம்முடைய பயனர் கணக்கு போட்டோவிற்கு ஏற்றாற் போல் அமைத்தால் மட்டுமே நம்முடைய பயனர் கணக்கு போட்டோ அழகூட்டப்பட்டு இருக்கும். இதற்கு பதிலாக பயனர் கணக்கு போட்டோ மற்றும் கவர் போட்டோ இரண்டையுமே ஒண்றினைத்து முகநூல் கவர் மற்றும் பயனர் கணக்கு போட்டோக்களை அமைத்துவிட முடியும்.

இதற்கு ஒரு தளம் உதவி செய்கிறது. இந்த தளத்தில் குறிப்பிட்ட படத்தை தரவேற்றம் செய்தால் அந்த தளம் கவர் போட்டோ மற்றும் பயனர் கணக்கு போட்டோ இரண்டையும் தனித்தனியே பிரித்து தந்துவிடும். அதை கொண்டு எளிதாக படங்களை அமைத்து விட முடியும்.

தளத்திற்கான சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு செல்லவும். தோன்றும் விண்டோவில் Merge Profile & Cover Photo என்னும் தேர்வினை கிளிக் செய்யவும்.


அடுத்து தோன்றும் விண்டோவில் படத்தினை தேர்வு செய்து பின் Upload பொத்தானை அழுத்தவும். சிறிது நேரத்தில் படமானது தரவேற்றம் செய்யப்படும். இல்லையெனில் Cover Photo பொத்தானை அழுத்தி முகநூல் கணக்கினை உள்ளிட்டு நேரிடையாக கவர் போட்டோவினை தெரிவு செய்து கொள்ளவும் முடியும்.

அடுத்து தோன்றும் விண்டோவில் Done பொத்தானை அழுத்தவும். பின் படங்களை தரவிறக்க சுட்டி கிடைக்கும். அதற்கு முன்னர் உங்களுடைய முகநூல் பயனர் கணக்கில் உள்நுழைந்து கொள்ளவும்.



பின் தோன்றும் விண்டோவில் அந்த தளத்திற்கான முகநூல் இசைவுவிருப்ப பொத்தானை கிளிக் செய்யவும். கிளிக் செய்தால் மட்டுமே தரவிறக்கம் செய்வதற்கான பொத்தான் முழுமையாக கிடைக்கும்.





பின் படங்களை பதிவிறக்கம் செய்து, முகநூல் கணக்கில் படங்களை அமைத்துக்கொள்ளவும்.

ஐகான்களை உருவாக்க

♠ Posted by Kumaresan Rajendran in ,
ஐகான் என்பது விரைவாக ஒரு செய்தியை உணர்த்த பயன்படும் ஒரு வழி ஆகும்.  கணினிக்கு புதியவர்களாக இருப்பவர்கள் பெரும்பாலும் ஐகான்களை பின்பற்றியே கணினியை பயன்படுத்துவார்கள். உதாரணமாக மை கம்ப்யூட்டருக்கு கணினி போன்ற ஐகான் உள்ளதால் நாம் எளிதாக அதனை கண்டறிய முடிகிறது. இதே போல் நாம் விரும்பும் எந்த ஒரு படத்தையும் நொடி பொழுதில் ஐகானாக மாற்றி குறிப்பிட்ட கோப்பறைக்கோ , மென்பொருள் சுருக்குவிசைக்கோ அமைத்து விட முடியும். படத்தினை ஐகானாக மாற்ற ஒரு இலவச மென்பொருள் உதவிசெய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை சுட்டியில் குறிப்பிட்ட தளத்திலிருந்து பதிவிறக்கி பின் Quick Any2Ico அப்ளிகேஷனை திறக்கவும். தோன்றும் விண்டோவில் குறிப்பிட்ட படத்தினை தேர்வு செய்து பின் ஐகான் எங்கு சேமிக்கப்பட வேண்டுமோ அந்த இடத்தினை தேர்வு செய்து பின் அளவினை தேர்வு செய்து பின் Convert it! பொத்தானை அழுத்தவும். சில நொடிகளில் படமானது கன்வெர்ட் செய்யப்பட்டு நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் ஐகான் சேமிக்கப்பட்டு இருக்கும்.