தமிழில் கணினி செய்திகள்

பயனர் கணக்கின் கடவுச்சொல்லை மாற்ற

♠ Posted by Kumaresan Rajendran in ,, at January 01, 2012
விண்டோஸ் இயங்குதளத்தில் பயனர் கடவுச்சொல்லை மாற்ற மிக எளிமையான வழி விண்டோஸ் இயங்குதளத்திலேயே உள்ளது. நாம் சாதாரணமாக கடவுச்சொல்லை மாற்றும் போது முந்தைய கடவுச்சொல்லை உள்ளிட்ட பின்னரே நாம் புதிய கடவுச்சொல்லை உருவாக்கி கொள்ள முடியும். ஆனால் முந்தைய கடவுச்சொல் இல்லாமலேயே புதிய கடவுச்சொல்லை உருவாக்க முடியும். இதனை செய்ய நாம் எந்த மூன்றாம் தர மென்பொருளின் உதவியையும் நாடி செல்ல வேண்டிய அவசியம் இல்லை. விண்டோஸ் இயங்குதளத்தின் உதவியுடனே இதனை நாம் செய்ய முடியும். 

முதலில் Start > Control Panel லை ஒப்பன் செய்யவும். அதில் View by என்ற வரிசையில் Small Icons என்பதை தெரிவு கொள்ளவும். 


அதில் Administrative Tools என்பதை கிளிக் செய்யவும். அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Computer Management என்னும் சுருக்குவிசையை கிளிக் செய்யவும்.


அடுத்து தோன்றும் விண்டோவில் Local Users and Groups > User என்னும் வரிசையை தேர்வு செய்யவும். அதில் உங்கள் கணினியில் உள்ள பயனர்களின் பட்டியல் தோன்றும். அதில் எந்த பயனரின் கடவுச்சொல்லை மாற்ற வேண்டுமோ, அந்த பயனர் பெயர் மீது வலது கிளிக் செய்து தோன்றும் வரிசையில் Set Password என்பதை தேர்வு செய்யவும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Proceed என்னும் பொத்தானை அழுத்தவும். 


பின் நீங்கள் மாற்ற நினைக்கும் கடவுச்சொல்லை உள்ளிட்டு, OK பொத்தானை அழுத்தவும். அவ்வளவு தான் தற்போது கடவுச்சொல் மாற்றப்பட்டதாக செய்தி வரும். இதே போல் நீங்கள் எந்த பயனர் கணக்கின் கடவுச்சொல்லையும் மாற்றிக்கொள்ள முடியும். 


தற்போது கணினியை மறுதொடக்கம் செய்யுங்கள், கடவுச்சொல் மாற்றப்பட்டிருக்கும். இதுபோல் உங்கள் நண்பர்கள் உங்களுடைய கடவுச்சொல்லை மாற்றிவிட முடியும் எனவே கவனமாக இருப்பது நல்லது.

5 Comments:

sir i want more information for set the password after how remove them please explain me sir

Post a Comment