தமிழில் கணினி செய்திகள்

போட்டக்களை வீடியோவாக மாற்ற - PhotoStage Slideshow

♠ Posted by Kumaresan Rajendran in , at January 07, 2012
தற்போதைய காலகட்டத்தில் எல்லோரிடமும் மொபைல் போன்கள் உள்ளது. அதிலும் கேமாரா மொபைல்கள் சந்தையில் மிக குறைவான விலைக்கு கிடைக்கிறது. மேலும் டிஜிட்டல் கேமிராக்கலும் குறைவான விலைக்கு கிடைக்கிறன. இதனால் தற்போது எந்த நிகழ்வையும் நாம் போட்டோ எடுத்து வைத்துக்கொள்வோம். அவ்வாறு நாம் எடுக்கும் போட்டோக்களை வீடியோவாக மாற்றம் சந்தையில் பல்வேறு மென்பொருள்கள் உள்ளன. அவை யாவும் விலைகொடுத்து மட்டுமே வாங்க வேண்டும். மேலும் அவை யாவும் அளவில் அதிகமாக இருக்கும். அவ்வாறு உள்ள மென்பொருள்களை நம்மில் பலரால் விலைகொடுத்து வாங்க இயலாது. PhotoStage Slideshow என்னும் மிகச்சிறிய மென்பொருள் ஒன்று உள்ளது.  இதன் மூலம் எளிமையாக போட்டோக்களை வீடியோவாக மாற்ற முடியும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இணையத்தின் உதவியுடன் மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒரு முறை கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். பின்  PhotoStage Slideshow அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். அதில் Add Photos, Video Clips, and Music என்னும் தேர்வினை அழுத்தி போட்டோ, வீடியோ, அச்சு படம் போன்றவற்றை உள்ளினைக்கவும். பின் வேண்டியவற்றின் மீது கிளிக் செய்து தோன்றும் விண்டோவில் கீழ்நோக்கு இறக்கு விசையை அழுத்தி உள்ளினைக்கவும். பின் வேண்டிய படத்திற்கு இடையில் Effects சேர்த்துக்கொள்ளவும். 


பின் SAVE SLIDESHOW என்னும் பொத்தானை அழுத்தி தோன்றும் விண்டோவில் Computer Data என்னும் டேப்பினை தேர்வு செய்து அதில் உங்களுக்கு வேண்டிய பைல்பார்மெட்டில் வீடியோவாக சேமித்துக்கொள்ள முடியும். வேண்டுமெனில் Disc என்னும் டேப்பினை அழுத்தி சீடி/டிவிடி யில் நேரடியாக பதிவேற்றம் செய்து கொள்ள முடியும்.

8 Comments:

பயனுள்ள மென்பொருள் பகிர்வுக்கு நன்றி நண்பரே!

I am also a bloggar, but in English,how to start a Tamil blog like you....? partiaularly the blog template....can you explain to me...?
karthikeyan

http://exportapparelmerchandising.blogspot.com
www.internetearningtechniques.co.in
http://tastyindiantiffinrecipies.blogspot.com

நீங்க சொன்னத செயல் படுத்திப் பார்க்கிறேன்.

நன்றி சார், இது ப்ரோஷா producer மாதிரியா

நன்றி சார், இது ப்ரோஷா producer மாதிரியா

நன்றி சார் , ஒரு முக்கியமான விஷயம் சார் இந்த சாப்ட்வேர் நான் டவுன்லோட் செய்துல்லேன் சார் ஆனால் அதை எப்படி பயன்படுத்துவது என்று தெளிவாக ஒன் பை ஒன்றாக சொல்லி கொடுக்கவும் உங்கள் பதிலை எதிர் பார்த்து கொண்டு இருப்பேன் .

THANK YOU SIR, unkal wepsite thinamum padithukondu irukkiren mikka makizhchi, but photostage slideshow patri koncham thelivaka eppadi payan paduthuvathu endru step by step akaa therivikkavum pls pls pls

Post a Comment