தமிழில் கணினி செய்திகள்

யூடுப் வீடியோக்களை கன்வெர்ட் செய்ய இரண்டு தளங்கள்

♠ Posted by Kumaresan Rajendran in ,,,
யூடுப் தளத்தின் உதவியுடன் அனைத்து விதமான வீடியோக்களையும் காண முடியும். இந்த தளத்தின் உரிமை தற்போது கூகுள் வசம் உள்ளது. கூகுள் கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவருமே இந்த யூடுப் தளத்த்தில் வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முடியும். மேலும் கருத்துரை மற்றும் விருப்பம் போன்றவைகளையும் குறிப்பிட்ட விடியோக்களுக்கு தெரிவிக்க முடியும். மேலும் ஒரு சில வீடியோக்களை காண வேண்டுமெனில் பயனர் கணக்கு கண்டிப்பாக அவசியம். ஒரு சில வீடியோக்களை பயனர் கணக்கு இல்லாமல் காணவோ தரவிறக்கம் செய்யவோ முடியாது. இதுபோன்ற சூழ்நிலையில் வீடியோக்களை தரவிறக்கம் செய்யவும். கன்வெர்ட் செய்யவும் இணையத்தில் ஒருசில தளங்கள் உதவி செய்கிறன. தளத்திற்கான...

ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து கணினியில் பதிவிறக்கம் செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in ,
கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள அப்ளிகேஷன்களை நேரடியாக கணினியில் பதிவிறக்கம் செய்வது எவ்வாறு என்று ஏற்கனவே எழுதியிருந்தேன் . அது ஒரு மென்பொருள் உதவியுடன் பதிவிறம் செய்வது ஆகும். ஆனால் இந்த முறைமையானது ஆன்லைன் உதவியுடன் ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்வது எவ்வாறு என பார்ப்போம். ஆன்ட்ராய்ட் பற்றியோ கூகுள் பிளே ஸ்டோர் பற்றியோ பெரிய முன்னுரை தேவையில்லை என்று நினைக்கிறேன். ஆன்ட்ராய்ட் என்பது கூகுள் நிறுவனத்தின் மொபைல்/டேப் களுக்கான இயங்குதளம் ஆகும். இந்த இயங்குதளத்தில் இயங்கும் அப்ளிகேஷன்களுக்கென ஒரு சந்தையினை உருவாக்கியது அதற்கு பெயர் தான் பிளேஸ்டோர் ஆகும். இச்சந்தையில் தற்போது கூகுள் நிறுவனத்தின்...

MS Word ல் இந்திய நாணயங்களின் அடையாளத்தினை (Symbol) இணைக்க

ரூபாய்களின் மதிப்பினை குறிப்பிடும் விதமாக ஒவ்வொரு நாட்டிலும் தனித்தனி நாணயங்களின் அடையாளங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறன. இந்திய அரசாங்கம் ஜீலை 15 2010 அன்று நாணயங்களுக்கு புதிய அடையாளத்தினை கொண்டு வந்தது. முதலில் இந்த நாணய அடையாளத்தினை இமேஜ் வடிவத்திலேயே பயன்படுத்துமாறு இருந்தது. இவ்வாறு சேர்க்கும் போது அளவு வித்தியாசம் ஏற்படும், அப்போது நாம் உருவாக்கும் கோப்பு அழகின்றி காணப்படும். இந்த குறையை போக்கும் விதமாக தற்போது வரும் மடிக்கணினி தட்டச்சு பலகை மற்றும் சாதாரண தட்டச்சு பலகையில் இந்திய நாணய அடையாளம் இருப்பியல்பாகவே உள்ளது. இதனால் தற்போது வெளிவரும் கணினிகளில் மட்டுமே இந்த அடையாளத்தினை பயன்படுத்துமாறு...

Dailymotion தளத்தில் உள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்ய நெருப்புநரி நீட்சி

♠ Posted by Kumaresan Rajendran in ,
ஏதாவது ஒரு வீடியோ கோப்பு வேண்டுமெனில் நாம் முதலில் நாடுவது யூடுப் தளம் ஆகும். மேலும் ஒரு சில வீடியோக்கள் இந்த தளத்தில் கூட கிடைக்காது அதுபோன்ற வீடியோக்களும் மற்ற வீடியோ தளங்களில் கிடைக்கும் இதில் புகழ்பெற்ற தளம்தான் Dailymotion ஆகும். இந்த தளத்தில் தினமும் என்னற்ற வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறன. அன்றாடம் ஒளிபரப்பபடும் சின்னத்திரைகளின் உயிர்நாடியான சீரியல்களும் தினமும் இந்த தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறன. இவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது என்றால் அவ்வளவு எளிதான செயல் இல்லை. இந்த வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய நெருப்புநரி நீட்சி ஒன்று உதவி செய்கிறது.  நீட்சிக்கான...

எழுத்துக்களை தலைகீழாக திருப்ப

♠ Posted by Kumaresan Rajendran in ,
தற்போது பெரும்பாலான ஷோசியல் நெட்வொர்க் தளங்களிலேயே கணினி பயன்படுத்துபவர்கள் அதிக நேரத்தை செலவிடுகிறனர். இதற்கு முக்கிய காரணம் அரட்டை, சினிமா, அரசியல் போன்ற செய்திகளை அதிகமாக பகிர்ந்துகொள்வதனால் மட்டுமே என்று சொல்லிவிட முடியாது. தினமும் புதிது புதிதாக குறிபிட்ட தளங்களின் வசதிகளை மெறுகேற்றி கொண்டே வருகிறனர். இதற்குகேற்ப பயனாளர்களும் தங்கள் கணக்கினை அழகுபடுத்த விரும்புவார்கள். குறிப்பாக பயனர் பெயர்களை அமைத்தலில் இருந்து அனைத்திலும் புதுமைகளை விரும்புகிறனர் அந்த வகையில் இப்போது நாம் எழுத்துக்களை எவ்வாறு தழைகீழாக திருப்புவது என்று பார்ப்போம் இதனை கொண்டு நம்முடைய பயனர் பெயரை தழைகீழாக மாற்றி வைத்துக்கொள்ள...

PDF கோப்பின் அளவை மாற்றியமைக்க

♠ Posted by Kumaresan Rajendran in ,,
ஒரு கோப்பின் அளவு எவ்வளவு வேண்டுமானலும் இருக்கலாம், அதே போன்றுதான் பிடிஎப் கோப்பின் அளவும் எவ்வளவு வேண்டுமானலும் இருக்கும். மிக அதிகம் அளவுடைய பிடிஎப் கோப்பினை மின்னஞ்சல் அனுப்ப வேண்டுமெனில் கண்டிப்பாக அனுப்ப முடியாது. குறிப்பிட்ட அளவுடைய மின்னஞ்சல் கோப்பினை மட்டுமே அனுப்ப முடியும். அதிக அளவுடைய கோப்பினை மின்னஞ்சல் அனுப்ப வேண்டுமெனில் அந்த கோப்பினை தனித்தனி பகுதிகளாக பிரித்து அனுப்பினால் மட்டுமே முடியும். அவ்வாறு பிரித்து அனுப்பும் போது அந்த குறிப்பிட்ட கோப்புகளை மீண்டும் சேர்க்க மென்பொருளினை பயன்படுத்த வேண்டும். மேலும் இவ்வாறு கோப்பினை தனித்தனி பகுதிகளாக பிரித்து அனுப்பும் போது சில பகுதி கோப்புகளை...

கணினியின் வேகத்தை கூட்ட மற்றும் தேவையற்ற பைல்களை நீக்க

♠ Posted by Kumaresan Rajendran in ,
கணினி மந்தமாக செயல்படுகிறது என்றால் இதற்கு பல்வேறு காரணங்களை கூறலாம். முறையாக கணினியை பராமரிக்கவில்லையெனில் கணினி மந்தமாகவே செயல்படும். முறையாக மென்பொருள் நிறுவாமை இணையம் பயன்படுத்துகையில் தேங்கி கிடக்கும் பைல்கள் மற்றும் ரிஸிஸ்டரி பைல்கள் போன்றை ஆகும். மேலும் வைரஸ் பாதிக்கப்பட்டாலும் இதே நிலைதான் கணினி முழுவதுமாக மந்தமாகவே செயல்படும். இது போன்ற பிரச்சினைகளை சரிசெய்ய YAC - Yet Another Cleaner என்னும் மென்பொருள் உதவி செய்கிறது. மென்பொருளை தரவிறக்க சுட்டி  சுட்டியில் குறிப்பிட்ட தளத்திலிருந்து மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவவும். மென்பொருளை நிறுவும் போது இணைய இணைப்பு அவசியம் தேவைப்படும். ...

பிடிஎப் கோப்புகளை உருவாக்க மற்றும் கன்வெர்ட் செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in ,,,
பிடிஎப் கோப்பு என்ற ஒன்று முதலில் உருவாக்கப்பட்ட போது அதனை யாரும் எளிதில் எடிட் செய்ய முடியாது. மேலும் இதனை உருவாக்குவது என்பது அவ்வளவு எளிதான் செயல் இல்லை என்று இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலைமை இல்லை அது தலைகீழாக மாறிவிட்டது, பிடிஎப் கோப்புகளை எடிட் செய்வதற்கும், உருவாக்குவதற்கும் , கன்வெர்ட் செய்வதற்கும் மென்பொருள் சந்தையில் என்னற்ற மென்பொருளும் இணையத்தில் இலவச வலைமனைகளும் உள்ளன. அதில் ஒன்றுதான் Cometdocs. இதில் இரண்டுவிதமான சேவைகளும் உள்ளன. டெஸ்க்டாப் அப்ளிகேஷன் மற்றும் ஆன்லைன் கன்வெர்சன் ஆகியவை. மென்பொருளை தரவிறக்க சுட்டி  மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில்...

தேவையற்ற மென்பொருள்களை கணினியில் இருந்து நீக்க

♠ Posted by Kumaresan Rajendran in
கணினியில் பல்வேறு மென்பொருள்களை நிறுவி பயன்படுத்துவோம் குறிப்பிட்ட மென்பொருள் கணினிக்கு தேவையில்லையெனில் அதனை கணினியில் இருந்து நீக்கி கொள்ள விண்டோஸ் இயங்குதளத்திலேயே வழி உள்ளது. கன்ட்ரோல் பேனல் வழியாக சென்று தேவையற்ற மென்பொருள்களை நீக்கி கொள்ள முடியும். ஒருசில நேரங்களில் குறிப்பிட்ட மென்பொருள்களை இதன்வழியாக நீக்கம் செய்ய முடியாது. மேலும் ஒருசில கணினியில் வைரஸ் பாதிக்கப்பட்டால் கன்ட்ரோல் பேனல் ஒப்பன் ஆகாது. இதனால் அப்ளிகேஷன்களை கணினியில் இருந்து நீக்க முடியாது. இதுபோன்ற சூழ்நிலையில் அப்ளிகேஷன்களை கணினியில் இருந்து நீக்க மூன்றாம் தர மென்பொருள் உதவி செய்கிறது. மென்பொருளை தரவிறக்க சுட்டி சுட்டியில்...

இணைய பயன்பாட்டு அளவுகளை கணக்கிட

♠ Posted by Kumaresan Rajendran in ,
மொபைல் போனில் இரண்டு வகையான சிம் கார்டுகளை பயன்படுத்துவோம் பிரிபெய்டு, போஸ்ட்பெய்டு இவற்றில் பிரிபெய்டு சிம்கார்டில் இருப்புதொகை எவ்வளவு இருக்கிறது என்று பார்த்துக்கொள்ளும் வசதி உள்ளது. அதேபோல் போஸ்ட்பெய்டு சிம்கார்டில் எவ்வளவு தொகைக்கு பேசுகிறமோ அதனை பார்த்துக்கொள் வசதியும் உள்ளது. அதேபோன்று மீதமுள்ள இணைய பயன்பாட்டு அளவுகளையும் பார்த்துக்கொள்ளும் வசதி உள்ளது. மொபைல் போன் கொண்டு இணையத்தை பயன்படுத்தும் போது இதுவரை எவ்வளவு இணைய பயன்பாட்டினை பயன்படுத்தியுள்ளோம் என்று பார்த்துகொள்ளும் வசதி மொபைல் போன் நிறுவன புரவைடர்களிடம் உள்ளது. அதுபோன்று டேட்டாகார்டு மூலம் இணைய இணைப்பினை பயன்படுத்தும் போதும்...

Send to தேர்வில் புதிய ஆப்ஷனை கொண்டுவர

♠ Posted by Kumaresan Rajendran in ,,
கணினியின் வேலைகளை மிக விரைவாக செய்ய பல்வேறு வழிகள் உள்ளன. சுருக்குவிசைகளை பயன்படுத்தியும் சாளர மெனு தேர்வுகள் (options) கொண்டும் கணினியில் பணிகளை விரைந்து செய்ய இயலும். கணினியில் உள்ள தரவுகளை நகலெடுக்கவோ (Copy), நகர்த்தவோ (Cut) சுருக்கு விசைகளை பயன்படுத்துவோம் இல்லையெனில் சுட்டெலியால் வலது கிளிக் தோன்றும் பாப்அப் மெனுவில் Send to தேர்வில் குறிப்பிட்ட ஆப்பஷனை தேர்வு செய்தும் காப்பி செய்து கொள்ள முடியும். புளுடூத் மூலமாக தகவலை பகிர விரும்பும் போது பெரும்பாலும் Send to ஆப்ஷனை பயன்படுத்திதான் பகிர்ந்து கொள்வோம். இந்த Send to ஆப்ஷனை தெரிவு செய்யும் போது அதில் குறிப்பிட்ட சில ஆப்ஷன் மட்டுமே இருக்கும்....

ட்ரைவ் ஐகான்களை மாற்ற

♠ Posted by Kumaresan Rajendran in ,
வன்தட்டினை தனித்தனி பகுதிகளாக பிரித்து வைத்திருப்போம், விண்டோஸ் இயங்குதளத்தில் C,D,E,F என வரிசையாக ட்ரைவ்கள் பிரிக்கப்பட்டு இருக்கும். இந்த ட்ரைவ் ஐகான்களை நமது விருப்பபடி மாற்றியமைத்துக்கொள்ள முடியும். ட்ரைவ்களுக்கு எவ்வாறு பெயரினை மாற்றியமைத்து வைத்துக்கொள்கிறமோ அதே போல் ட்ரைவ் ஐகான்களையும் மாற்றியமைத்துக்கொள்ள முடியும். இதற்கு இலவச மென்பொருள் ஒன்று வழிவகை செய்கிறது. மென்பொருளை தரவிறக்க சுட்டி மென்பொருளை சுட்டியில் குறிபிட்ட தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பின் ஒப்பன் செய்யவும். ஒப்பன் ஆகும் விண்டோவில் குறிப்பிட்ட ட்ரைவினை தேர்வு செய்து பின் Install என்னும் பொத்தானை அழுத்தவும்....

பிடிஎப் கோப்புகளை எடிட் செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in
பிடிஎப் கோப்புகளை உருவாக்குவதற்கு முக்கியமான காரணம் அதனை எந்தவிதமான எடிட்டிங்கும் செய்ய கூடாது என்பதற்காகவும், மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் மட்டுமே ஆகும். நாம் ஆப்பிஸ் தொகுப்பினை கொண்டு டாக்குமெண்ட்களை உருவாக்கும் போது அதற்கு கடவுச்சொல் கொண்டு உருவாக்கியிருப்போம். ஆனால் பிடிஎப் கோப்புகளை உருவாக்கும் போது அதற்கு கடவுச்சொல் கொண்டு உருவாக்குவது அவ்வளவு எளிதான செயல் இல்லை. ஏதாவது ஒரு மென்பொருள் துணைகொண்டு மட்டுமே பிடிஎப் கோப்பிற்கு கடவுச்சொல்லை உருவாக்க முடியும். மேலும் பிடிஎப் கோப்பின் பக்கங்களை தனித்தனியாக பிரிக்கவும், பிடிஎப் டாக்குமெண்டிற்கு பேக்ரவுண்ட் வாட்டர்மார்க் செட் செய்யவும் நாம்...

டெஸ்க்டாப் ஐகான்களை வரிசைப்படுத்த

♠ Posted by Kumaresan Rajendran in
கணினியில் தினமும் பல்வேறு விதமான கோப்புகளை கையாளுவோம். பெரும்பான்மையானோர் பல முக்கியமான கோப்புகளை டெக்ஸ்டாப்பிலேயே வைத்து விடுவார்கள், பல்வேறு விதமான கோப்பு அடைவு கொண்ட பைல்கள் டெஸ்க்டாப்பிலேயே வைத்திருப்போம் இது கணினியின் அழகினை பாதிக்கும். மேலும் ஒரு சில நேரங்களில் சில முக்கியமான கோப்புகளை டெக்ஸ்டாப்பிலிருந்து நீக்கி விடுவோம். இதற்கு பதிலாக டெஸ்க்டாப் ஐகான்களை குறிப்பிட்ட தனித்தனி பகுதிகளாக பிரித்து வைத்துக்கொள்ள முடியும். இந்த தனித்தனி பகுதிகளாக பிரிப்பதனால் வேர்ட், பிடிஎப், உலாவி, படங்கள் என தனித்தனி பகுதிகளாக பிரித்து வைத்துக்கொள்ள முடியும். இதற்கு FENCES என்னும் மென்பொருள் வழிவகை செய்கிறது. மென்பொருளை...

கோப்பறையின் நிறங்களை மாற்ற

♠ Posted by Kumaresan Rajendran in
வீட்டில் எப்படி தனித்தனி அறைகளாக  சமையல் அறை, பூஜை அறை என்று வைத்திருக்கிறமோ அதே போன்று கணினியிலும் பாட்டு, படம், வீடியோ என்று ஒவ்வொன்றுக்கும் தனித்தனி கோப்பறைகள் வைத்திருப்போம். பொதுவாக விண்டோஸ் இயங்குதளத்தில் கோப்பறையினை உருவாக்கும் போது அது மஞ்சள் நிறத்தில் மட்டுமே இருக்கும் நாம் விரும்பினால் அதனை வேறு ஒரு நிறத்திற்கு மாற்றிக்கொள்ள முடியும். இதற்கு ஒரு மென்பொருள் உதவுகிறது. மென்பொருளை தரவிறக்க சுட்டி சுட்டியில் குறிப்பிட்ட தளத்தில் இருந்து மென்பொருளை பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். பின் கோப்பறையின் மீது வலது கிளிக் செய்து தோன்றும்...

இமேஜ் பைல்களை பிடிஎப் கோப்பாக மாற்ற

♠ Posted by Kumaresan Rajendran in ,
சான்றிதழ்கள், புத்தகங்கள் நகலெடுத்து (Scan) தனித்தனி இமேஜ் பைலாக வைத்திருப்போம். மேலும் இதுபோன்று முக்கியமான கோப்புகளை பிரதியெடுத்து இமேஜ் பைலாக வைத்திருப்போம். அவை அனைத்தையும் ஒரே கோப்பாக ஒன்றினைக்க வேண்டுமெனில் நாம் அந்த இமேஜ் பைல்களை பிடிஎப் கோப்பாக மாற்றினால் மட்டுமே முடியும். இமேஜ் கோப்புகளை பிடிஎப் கோப்பாக மாற்ற ஒரு இலவச மென்பொருள் வழிவகை செய்கிறது. மென்பொருளை தரவிறக்க சுட்டி  மென்பொருளை சுட்டியில் குறிபிட்ட தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்து படத்தினை தேர்வு செய்து பின் Convert Now என்னும் பொத்தானை அழுத்தி...

பிடிஎப் கோப்புகளை பிரிக்க, சேர்க்க மற்றும் பக்கங்களை மறுவரிசைப்படுத்த

♠ Posted by Kumaresan Rajendran in
பிடிஎப் கோப்பினை ஒருமுறை உருவாக்கி விட்டால் அதனை உடைக்கவோ, மறுவரிசைப்படுத்தவோ முடியாது மேலும் இவ்வாறு உருவாக்கும் பிடிஎப் கோப்புகளில் எந்தவித மாற்றமும் செய்ய முடியாது. என்றுதான் பலரும் நினைத்துகொண்டு இருப்பார்கள் ஆனால் பிடிஎப் கோப்பினை விரும்பியவாறு Normal 0 false false false MicrosoftInternetExplorer4 மாற்றியமைத்துக்கொள்ள முடியும். இதற்கு ஒரு இலவச மென்பொருள் வழிவகை செய்கிறது. மென்பொருளை தரவிறக்க சுட்டி மென்பொருளை சுட்டியில் குறிப்பிட்ட தளத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை திறக்கவும். Plugins வரிசையின்...

விண்டோஸ் 8.1 ல் நூலக கோப்பறையைகளை (Library Folders) மை கம்ப்யூட்டரிலிருந்து நீக்க

♠ Posted by Kumaresan Rajendran in ,
புதியதாக வெளிவந்துள்ள விண்டோஸ் 8.1 ல் மை கம்ப்யூட்டரை ஒப்பன் செய்தால் அதன் கூடவே நூலக அறைகளான போட்டோ, வீடியோ, டாக்குமெண்ட் , பாடல், பதிவிறக்க அறைகள் இருக்கும். இவ்வாறு இருப்பது ஒருவிதமான எரிச்சலை உண்டாக்கும். இதனை வேண்டுமெனில் மறைத்து வைத்துக்கொள்ள முடியும்.  முதலில் விண்டோஸ் ரிஸிஸ்டரியை ஒப்பன் செய்யவும். விண்டோஸ் கீ மற்றும் R பொத்தான்களை ஒருசேர அழுத்தி தோன்றும் விண்டோவில் regedit என்று உள்ளிட்டு OK பொத்தானை அழுத்தவும். அடுத்ததாக தோன்றும் விண்டோவில் கீழ்காணும் வரிசைப்படி ஒப்பன் செய்யவும். HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\Current Version\explorer\MyComputer\NameSpace...