தமிழில் கணினி செய்திகள்

ஜிமெயிலில் பேஸ்புக்கை இணைப்பதற்கான கூகுள் குரோம் நீட்சி

♠ Posted by Kumaresan Rajendran in ,
கூகுள் குரோம் உலவியானது தற்போது அதிக பயனாளர்களை பெற்று வருகிறது. இதற்கு காரணம் கூகுள் நிறுவனம் அளிக்கும் புதுப்புது சேவைகள் மட்டுமே ஆகும். அந்த நிறுவனம் எல்லாத்துறையிலும் வெற்றி பெற்று வருகிறது. சர்ச் எஞ்சினில் தொடங்கி ஈமெயில் வரை அனைத்தும் கூகுளின் ஆதிக்கமே உள்ளது. ஆனால் உலவி என்று எடுத்துக்கொண்டால் அதில் இண்டர்நெட் எக்ஸ்புளோரரும், நெருப்புநரி உலவியின் ஆதிக்கமே நிறைந்துள்ளது. இதிலும் கூகுள் நிறுவனம் தன்னுடைய உரிமையை நிலைநாட்ட விரும்பி இரண்டு வருடங்களுக்கு முன்னர் கூகுள் குரோம் என்ற உலவியை வெளியிட்டது, ஆனால் இந்த உலவி தொடக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியது, ஆனால் இந்த உலவியால் பயனாளர்களை எந்த அளவிற்கும் கவர இயலவில்லை. இதன் தொடர்ச்சியாக கூகுள் நிறுவனம் கூகுள் குரோம் உலவியில் புதுப்புது வசதிகளை சொடுகியது. அதில் ஒன்றுதான் கூகுள் குரோம் உலவியை பயன்படுத்தி ஜிமெயில் இருந்தவாறே முகநூல் (Face book) அக்கவுண்டை பார்ப்பதற்கான நீட்சி ஒன்றை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஜிமெயில் அக்கவுண்டில் இருந்தவாறே பேஸ்புக் கணக்கை உங்களால் அணுக முடியும்.

நீட்சியை தரவிறக்க சுட்டி


இந்த நீட்சியை உங்களுடைய கூகுள் குரோம் உலவியில் பதிந்து கொள்ளவும். அதற்கு சுட்டியை கிளிக் செய்தவுடன் மேலே குறிப்பிட்ட விண்டோவினை போல் ஒரு விண்டோ தோன்றும். அதில் Install என்னும் பொத்தானை அழுத்தவும். கிளிக் செய்தவுடன் தோன்றும் விண்டோவில் Allow என்னும் பொத்தானை அழுத்தவும்.


இப்போது உங்களுடை கூகுள் குரோம் உலவியை ஒருமுறை மறுதொக்கம் செய்து கொண்டு, உங்களுடைய ஜிமெயில் அக்கவுண்டில் உள்நுழையவும். இப்போது உங்களுடைய ஜிமெயில் அக்கவுண்டில் பேஸ்புக் இணைப்புக்கான பொத்தான் ஒன்று இணைக்கப்பட்டிருக்கும்.


இந்த பொத்தானை அழுத்தியவுடன் பேஸ்புக் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு உள்நுழையவும். இப்போது உங்களுடைய பேஸ்புக் கணக்கை  காண முடியும். இந்த வசதியை நீங்கள் கூகுள் குரோம் உலவியில் இருந்தால் மட்டுமே பெற முடியும்.

பேஸ்புக் நிறத்தை மாற்றுவதற்கான கூகுள் குரோம் உலவிக்கான நீட்சி

♠ Posted by Kumaresan Rajendran in ,
பேஸ்புக் தளமானது நண்பர்களுடன் தகவல்களை பறிமாறிக்கொள்ள பயன்படும் தளமாகும். இந்த தளத்தை பயன்படுத்தாத இணைய பயணாளர்களே இல்லை என்று கூறும் அளவிற்கு புகழ்பெற்ற தளமாகும். இந்த தளமானது உலகளவில் பெரும்பான்மையான பயன்படுத்தப்படும் தளமாகும். கூகிளுக்கும் பேஸ்புக் தளத்திற்கும் போட்டி நிலவி வந்தது ஆனால் இறுதியில் பேஸ்புக் தளமே அதிகமான இணைய பயனாளர்களால் பயன்படுத்தப்படுகிறது. தகவல்களை தேடிப் பெறவும், பழைய நண்பர்களை தேடிப்பிடிக்கவும் பயன்படும் முக்கிய சோஷியல் தளத்தில் பேஸ்புக்கும் ஒன்றாகும். பேஸ்புக் தளமானது 2004 பிப்ரவரி 4 - ல் தொடங்கப்பட்டது ஆகும். இந்த தளம் தொடங்கும் போது மிக சாதாரண அளவில் தான் இருந்தது ஆனால் தற்போது மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. இந்த தளம் தொடங்கப்பட்ட நாள் முதலாகவே முகப்புபக்கம் ஊதா (Blue) நிறமாகவே உள்ளது. அந்த கலரை மாற்றியமைக்க ஒரு நீட்சி உள்ளது.

நீட்சியை தரவிறக்க சுட்டி


கூகுள் குரோம் உலவியை ஒப்பன் செய்து சுட்டியில் குறிப்பிட்ட நீட்சியை பதிந்து கொள்ளவும். பின் பேஸ்புக் தளத்தை ஒப்பன் செய்து உங்களுடைய பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு உங்கள் அக்கவுண்டில் நுழையவும். பின் அட்ரஸ் பாரின் இறுதியில் தோன்றும் Colorbook ஐகானை பயன்படுத்தி உங்களுக்கு விருப்பமான கலரை தேர்வு செய்து, பேஸ்புக்கின் முகப்புபக்கத்தை மாற்றிக்கொள்ள முடியும்.

இந்த  Colorbook ஐகானை கிளிக் செய்து மாற்றம் செய்யும் கலரானது, பேஸ்புக் தளத்தில் இருக்கும் இணைப்புகளுக்கும் பொருந்தும்.

பேஸ்புக்கின் மெனுபார் நிறத்தை மாற்றுவதற்கான நெருப்புநரி நீட்சி

PDF to JPG கன்வெர்ட் செய்ய இலவச மென்பொருள்

♠ Posted by Kumaresan Rajendran in ,,
டாக்குமெண்ட்களை பறிமாறிக்கொள்ள தற்போது அதிகமாக பயன்படுத்தப்படும் பார்மெட்களில் pdf பார்மெட்டும் ஒன்றாகும். இந்த pdf பைல் பார்மெட் தற்போது அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஒரு சில கணினிகளில் pdf  ரீடர் இருக்காது. அதுபோன்ற கணினிகளில் pdf பைல்களை நம்மால் காண இயலாது. pdf டாக்குமெண்டில் உள்ள தகவல்களை காண நாம் அந்த பைல்களை வேறு ஒரு பைல் பார்மெட்டாக கன்வெர்ட் செய்ய வேண்டும். வேர்ட் மற்றும் இமேஜ் பைல் பார்மெட்டாக கன்வெர்ட் செய்ய பல வழிகள் உள்ளன.  பிடிஎப் பைல்களை வேர்ட் பார்மெட்டாக கன்வெர்ட் செய்யும் போது பல பிரச்சினைகள் உள்ளன. தமிழ் எழுத்துரு பிரச்சினை வரக்கூடும். இதனால் நம்மால் டாக்குமெண்ட்களை முழுமையாக காண முடியாது. இந்த pdf பைல்களை நாம் இமேஜ் பைலாக கன்வெர்ட் செய்யும் போது எந்த வித பார்மெட்டும் மாறாது. இவ்வாறு pdf பைலை இமேஜ் பைலாக கன்வெர்ட் செய்ய இணையத்தில் பல வழிகள் உள்ளன. நாம் ஆன்லைனில் இருந்தவாறே பைல்களை கன்வெர்ட் செய்ய முடியும். ஆனால் இணைய இணைப்பு இல்லாத கணினிகளில் pdf பைல்களை இமேஜ் பைலாக கன்வெர்ட் செய்ய வேண்டுமெனில் மென்பொருளின் உதவியை நாட வேண்டும்.  pdf பைலை இமேஜ் பைலாக கன்வெர்ட் செய்ய இணையத்தில் நிறைய மென்பொருள்கள் உள்ளன அவற்றில் ஒன்றுதான் PDF To JPG.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்து நீங்கள் மாற்ற நினைக்கும் இமேஜ் பைல் பார்மெட்டை தேர்வு செய்து (JPG, TIF, BMP, PNG மற்றும் GIF) பிடிஎப் பைலை இமேஜ் பைலாக கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். 


இவ்வாறு pdf பைலை இமேஜ் பைலாக கன்வெர்ட் செய்யும்போது எந்தவிதமான பிரச்சினையும் நேராது. pdf டாக்குமெண்ட்களை இமேஜ் (JPG, TIF, BMP, PNG மற்றும் GIF) பார்மெட்டாக கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும்.

YOUTUBE - வீடியோக்களை கன்வெர்ட் செய்ய இலவச மென்பொருள்

♠ Posted by Kumaresan Rajendran in ,
YOU TUBE தளத்தில் இருக்கும் வீடியோவை நேரிடையாக தரவிறக்கம் செய்ய அந்த தளத்தில் எந்த ஒரு வசதியும் இல்லை. YOU TUBE  வீடியோக்களை தரவிறக்கம் செய்ய வேண்டுமெனில் நாம் எதாவது ஒரு மூன்றாம் தர மென்பொருளையோ அல்லது உலவியின் துணையையோ நாட வேண்டும். இவ்வாறு நாம் YOU TUBE தளத்தில் இருந்து பதிவிறக்கும் வீடியோக்கள் அனைத்தும் .flv பைல் பார்மெட்டில் இருக்கும். இந்த வீடியோ பைலானது .flv பைல் பார்மெட்டை சப்போர்ட் செய்யக்கூடிய பிளேயர்களில் மட்டுமே பார்க்க முடியும். மற்ற வீடியோ பிளேயர்களில் .flv வீடியோவை பார்க்க முடியாது. இந்த .flv வீடியோ பைல் பார்மெட்களை கன்வெர்ட் செய்து மற்ற வீடியோ பைல் பார்மெட்டாக மாற்ற பல இலவச வீடியோ கன்வெர்ட்டர்கள் இணையத்தில் கிடைக்கிறன. அவை எதுவும் சிறப்பானதாக இல்லை , தற்போது இலவசமாக வீடியோ கன்வெர்ட்டர் ஒன்று கிடைக்கிறது, அதுவும் லைசன்ஸ் கீயுடன்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். இந்த மென்பொருளுக்கான லைசன்ஸ் கீயானது மென்பொருளை தரவிறக்கம் செய்து போது சேர்ந்தே தரவிறக்கம் செய்யப்பட்டிருக்கும். மென்பொருளை கணினியில் நிறுவியபிறகு கீயை பயன்படுத்தி Register செய்து கொள்ளவும். இந்த மென்பொருளை 2011 மார்ச் 20 வரை மட்டுமே இலவசமாக பதிவிறக்கம் செய்ய முடியும்.


Convert என்னும் பொத்தானை அழுத்தி .flv வீடியோ பைலை தேர்வு செய்து கொள்ளவும்.  இப்போது கன்வெர்ட் செய்ய வேண்டிய வீடியோ பார்மெட்டை தேர்வு செய்து கொள்ளவும்.


இந்த மென்பொருளின் உதவியுடன் வீடியோவை கன்வெர்ட் செய்வது மட்டுமல்லாமல், YOU TUBE வீடியோவையும் தரவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும்.

இண்டர்நெட் எக்ஸ்புளோரர் ஒரு பார்வை

♠ Posted by Kumaresan Rajendran in ,
இணையத்தை பயன்படுத்தும் பலரும் அறிந்த உலவி என்றால் அது மைக்ரோசாப்ட் நிறுவனத்துடைய இண்டர்நெட் எக்ஸ்புளோரர் உலவி மட்டுமே ஆகும். இந்த உலவியானது இணைய பயனாளர்களால் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மொசில்லா பயர்பாக்சின் வருகையால் தனது வாடிக்கையாளர்களை இண்டர்நெட் எக்ஸ்புளோரர் இழந்து வந்தது ஆனால் அன்மையில் வெளியான இண்டர்நெட் எக்ஸ்புளோரர் - 9 ன் வருகையால் மீண்டும் எழுச்சி பெற்று வருகிறது, இண்டர்நெட் எக்ஸ்புளோரர் உலவி.  இண்டர்நெட் எக்ஸ்புளோரர் உலவியானது 1995 ம் வருடம் முதல் முறையாக வெளிவந்தது. விண்டோஸ் 95 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்துடன் இணைந்து வெளியானது. முதல் முறை இண்டர்நெட் எக்ஸ்புளோரர் வெளிவரும் போது சாதரணமாகவே இருந்தது, ஆனால் தற்போது இருக்கும் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் உலவியானது பன்மடங்கு மேம்படுத்தப்பட்டு உள்ளது.

இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 1.0 (1995):-
முதல்முறையாக வெளிவந்த இண்டர்நெட் எக்ஸ்புளோரர் உலவி விண்டோஸ் 95 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் மட்டும் பயன்படுத்துமாறு வெளிவந்தது.



இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 2.0 (1995):-
இண்டர்நெட் எக்ஸ்புளோரருடைய இரண்டாவது பதிப்பு அதே வருடம் வெளியானது, ஆனால் இந்த பதிப்பு முந்தைய பதிப்பை விட சற்று மேம்படுத்தப்பட்டு வெளியானது , ஆனால் இந்த பதிப்பானது விண்டோஸ் மற்றும் மேக் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களில் செயல்படுமாறு வெளியானது.



இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 3.0 (1996):-
இந்த பதிப்பில் புதிய சிறப்பம்சங்கள் புகுத்தப்பட்டது ஈமெயில் மற்றும் ஆடியோ போன்ற சேவைகளை இந்த பதிப்பில் இருந்து  பயன்படுத்த முடிந்த்தது.


இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 4.0 (1997):-
இண்டர்நெட் எக்ஸ்புளோரரின் அடுத்த பதிப்பு 1997 ம் வருடம் வெளியானது, புதிய வசதிகள் இந்த பதிப்பில் புகுத்தப்பட்டுள்ளது.


இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 5.0 (1999):-
வணிகம் தொடர்பான புதிய வசதிகள் இந்த பதிப்பில் புகுத்தப்பட்டது.


இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 6.0 (2001):-
முந்தைய பதிப்பைவிட பல புதிய அம்சங்கள் இந்த பதிப்பில் புகுத்தப்பட்டட்து, டூல்பார் போன்ற புதிய வசதிகள் இந்த பதிப்பில் இருந்தே இணைக்கப்பட்டது.


இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 7.0 (2006):-
இந்த பதிப்பில்தான் முதல்முதலாக டேப் வசதி தொடங்கப்பட்டது, மேலும் இண்டர்நெட் ப்ரவுசிங் ஹிஸ்ட்ரியை கிளியர் செய்யும் வசதியும் இந்த பதிப்பில்தான் புகுத்தப்பட்டது.


இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 8.0 (2009):-
அதிவேக திறத்துடன் வெளிவந்த பதிப்பாகும். இதில் Private Browsing அறிமுகப்படுத்தப்பட்டது.


இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 9.0 (2011):-
தற்போது பயன்படுத்தப்படும் பதிப்பு 9.0 ஆகும். முந்தைய பதிப்புகளை விட இந்த பதிப்பு மிகச்சிறப்பாக உள்ளது என இண்டர்நெட் வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இண்டர்நெட் எக்ஸ்புளோரர்  தனது முந்தைய பதிப்புகளை விட, இந்த புதிய பதிப்பானது பல மடங்கு சிறப்பாக உள்ளது.

இண்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிவிறக்க சுட்டி

ZIP/RAR பைல்களுக்கு பாஸ்வேர்ட் உருவாக்குவது எப்படி

♠ Posted by Kumaresan Rajendran in
டாக்குமெண்ட்களை சுருக்க  பயன்படும் பார்மெட்தான் ஜிப் பைல் பார்மெட் ஆகும். இதன் மூலம் அதிகமாக உள்ள பைலின் அளவை குறைக்க முடியும். நம்மிடம் ஒரு பத்து புகைப்படங்கள் உள்ளன, அவை அனைத்தையும் ஒரே பைலாக ஈமெயில் செய்ய வேண்டும் என்ன செய்வோம் உடனே அவை அனைத்தையும் பிடிஎப்,வேர்ட் அல்லது வேறொரு பைலாக மாற்றம் செய்து அனுப்ப முயற்ச்சிப்போம், ஆனால் குறிப்பிட்ட படங்கள் அனைத்து அதனுடைய தரம் குறையாமல் அதே பார்மெட்டில் ஒரே பைலாக அனுப்ப வேண்டுமெனில் நாம் நாடுவது ZIP,RAR,7Z மற்றும் பல பைல் பார்மெட்கள் ஆகும். மொத்தத்தில்  ZIP/RAR பைல்களை கணினி பயனாளர்கள் பயன்படுத்துவதே பைல் அளவை குறைப்பதற்க்குதான். சரி நான் சொல்ல வந்த விஷயத்தை விட்டிட்டு ஏதோ சொல்கிறேன். சரி நான் நேரிடையாக விஷயத்திற்கு வந்து விடுகிறேன். வேர்ட், பிடிஎப் பைல் பார்மெட்களுக்கு எல்லாம் கடவுச்சொல் இட்டு பூட்டமுடிகிறது. அதே போல் ஜிப் பைல்களுக்கும் கடவுச்சொல் இட்டு எவ்வாறு பூட்டுவது என்று ஒரு சந்தேகம் அதற்கான பதில் கீழே.

ஜிப் பைல்களுக்கு கடவுச்சொல் இட்டு பூட்ட:-

முதலில் எந்தெந்த பைல்களை எல்லாம் ஜிப் பைலாக உருவாக்க நினைக்கிறீர்களோ அதனை தேர்வு செய்து, ஒரே போல்டரில் அடைக்கவும். பின் போல்டரின் மீது வலது கிளிக் செய்து தோன்றும் பட்டியலில் winzip என்பதை தேர்வு செய்து Add to .zip என்பதை தேர்வு செய்து ஜிப் பைலை உருவாக்கி கொள்ளவும். 


இப்போது ஜிப் பைலானது உருவாகியிருக்கும். அடுத்ததாக winzip அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.  அதில் Encrypt என்னும் செக் பாக்சில் டிக் செய்யவும். அடுத்தாக  zip என்னும் ஐகானை தேர்வு செய்யவும், தோன்றும் விண்டோவில் உங்களுடைய ஜிப் பைலை தேர்வு செய்யது Zip என்னும் பொத்தானை அழுத்தவும். 


Zip பொத்தானை அழுத்தியவுடன், கடவுச்சொல்லை உருவாக்குவதற்கான விண்டோ ஒப்பன் ஆகும், அதில் குறிப்பிட்ட Zip பைல்கான கடவுச்சொல்லை உள்ளிட்டு ஒகே பொத்தானை அழுத்தவும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் கடவுச்சொல் உள்ளிடப்பட்ட Zip பைலை எங்கு சேமிக்க வேண்டும் என்பதை தேர்வு செய்து ஒகே பொத்தானை அழுத்தவும். இப்போது நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் ஒரு ஜிப் பைல் இருக்கும் கடவுச்சொல் இணைக்கப்பட்டு. நீங்கள் புதியதாக உருவாக்கிய பெயரில் இருக்கும். இதனுடைய முழுஅர்த்தம் என்னவெனில் நீங்கள் உருவாக்கிய ஜிப் பைல்களுக்கு கடவுச்சொல் உருவாக்க, மீண்டும் அதே ஜிப் பைலை மற்றொரு ஜிப் பைலக உருவாக்குகிறோம்.

ரேர் பைல்களுக்கு கடவுச்சொல் இட்டு பூட்ட:-
முதலில் கூறியவாறே ஒரு போல்டரில் டாக்குமெண்ட்களை உள்ளிட்டு கொள்ளவும். பின் வலது கிளிக் செய்து தோன்றும் வரிசையில் Add to Archive என்பதை தேர்வு செய்யவும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில், Advance என்னும் டேப்பை தேர்வு செய்து Set password என்னும் பொத்தானை அழுத்தவும். 


SetPassword பொத்தானை அழுத்தியவுடன் தோன்றும் விண்டோவில் உங்களுக்கான கடவுச்சொல்லை உள்ளிட்டு ஒகே பொத்தானை அழுத்தவும். இப்போது கடவுச்சொல் உள்ளிடப்பட்டு Rar பைலானது உருவாகியிருக்கும்.

வீடியோ பைல்களை ஒன்றிணைக்க

♠ Posted by Kumaresan Rajendran in ,
இரண்டு தினங்களுக்கு முன்பு வாசகர் ஒருவர் கேட்ட கேள்விக்கான பதில் இது, அவர் தன்னிடம் ASF பைல் பார்மெட்டில் சில வீடியோ பைல்கள் இருப்பதாகவும், அந்த வீடியோ பைல்களை எவ்வாறு ஒன்றிணைத்து ஒரே வீடியோ பைலாக உருவாக்குவது என்றும் கூறியிருந்தார். இதோ அவருக்கான பதில் கீழே. தனித்தனி வீடியோ பைல்களாக இருக்கும் வீடியோக்களை ஒன்றிணைத்து ஒரே வீடியோ பைலாக உருவாக்க இந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இந்த மென்பொருள் சிறப்பம்சம் என்னவெனில் தனித்தனி வீடியோ பைல் பார்மெட்களையும் ஒன்றிணைத்து ஒரே வீடியோ பைலாக உருவாக்க முடியும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணைய்த்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். இதில் உள்ள Add Video என்ற பொத்தானை அழுத்தி வீடியோ பைலகளை தேர்வு செய்து கொள்ளவும்.


அடுத்து Next பொத்தானை அழுத்தி எந்த பைல் பார்மெட்டில் வீடியோக்கள் கன்வெர்ட் ஆக வேண்டுமோ அந்த பைல் பார்மெட்டை தேர்வு செய்து கொண்டு, பைல்களை எந்த இடத்தில் சேமிக்க வேண்டும் என்பதை தேர்வு செய்து கொள்ளவும்.


பின் Join now பொத்தானை அழுத்தவும். இப்போது வீடியோ பைலானது கன்வெர்ட் செய்யப்பட்டு, ஒரே பைலாக ஒருகிணைக்கப்படும்.


இப்போது நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் வீடியோ பைல்களானது ஒருகிணைக்கப்பட்டு ஒரே வீடியோ பைலாக சேமிக்கப்பட்டு இருக்கும்.

இந்த மென்பொருள் சப்போர்ட் செய்யக்கூடிய வீடியோ பைல் பார்மெட்கள்:-

இன்புட் பைல் பார்மெட்கள்:-
  • HD Video, AVI , FLV, SWF, DV AVI, MP4, WMV, 3GP, 3G2, MOV, QT, DVD, VOB, MPEG-1, 2, 4, MOD, MPG, DAT, RM, RMVB, ASF, H.263, H.264, MKV, TS மற்றும் பல வீடியோ பைல் பார்மெட்கள்

அவுட்புட் பைல் பார்மெட்கள்:-
  • AVI, MP4, FLV, SWF, MPEG, RM, WMV, MOV & 3GP

படங்களின் அளவை மாற்றியமைக்க - AnyPic Image Resizer

♠ Posted by Kumaresan Rajendran in ,
இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யும் போட்டோக்கள் ஒவ்வொன்றும் தனித்தனி பார்மெட்டில் இருக்கும். அந்த போட்டோக்கள் அனைத்தும் ஒரே அளவாகவும் (SIZE) இருக்காது. இவ்வாறு உள்ள போட்டோக்களின் அளவை மாற்றவும், பார்மெட்டை மாற்றவும். நாம் எதாவது ஒரு போட்டோ எடிட்டிங் மென்பொருளின் உதவியை மட்டுமே நாட வேண்டும். போட்டோக்களை எடிட் செய்ய வேண்டுமென்றால் அனைவரும் கூறுவது போட்டோசாப் மென்பொருளை மட்டுமே. ஒரு போட்டோவாக இருந்தால் எளிமையாக எடிட் செய்துவிட முடியும். ஆனால் அதிகமான போட்டோக்கள் இருப்பின் அந்த போட்டோக்களை  எடிட் செய்வது சற்று சிரமமான விஜயம் ஆகும். அவ்வாறு அதிகமாக உள்ள படங்களின் அளவையும், பார்மெட்டையும் ஒரே நேரத்தில்  மாற்றியமைக்க உதவும் மென்பொருள்தான் AnyPic Image Resizer ஆகும். இந்த மென்பொருளின் உதவியுடன் படத்தின் அளவையும், பார்மெட்டையும் எளிமையாக மாற்றியமைக்க முடியும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் AnyPic Image Resizer அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். Add என்னும் சுட்டியை அழுத்தி படங்களை தேர்வு செய்து கொள்ளவும். பின் எந்த பைல் பார்மெட்டில் படங்கள் வேண்டும் என்பதை தேர்வு செய்து கொண்டு, படத்தின் அளவை குறிப்பிடவும்.


எது மாதிரியான பார்மெட்டில் படம் வேண்டுமோ அதனை குறிப்பிட்டு கொள்ளவும். பின் கன்வெர்ட் பொத்தானை அழுத்தவும். இப்போது நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் படமானது சேமிக்கப்பட்டுவிடும். ஆன்ராய்ட் மொபைல் சாதனத்துக்கு ஏற்ற மாதிரியாகவும், ஈ-மெயிலுக்கு ஏற்றது போலவும்.  பேஸ்புக் மற்றும் ஐபேட்,ஐபோன் சாதனங்களுக்கு  ஏற்ற மாதிரியாகவும், படத்தினை மாற்றிக்கொள்ள முடியும். BMP, JPG(JPEG), PNG, TGA, TIFF, PSD, GIF போன்ற பைல் பார்மெட்களில் படத்தினை கன்வெர்ட் செய்து கொள்ள முடியும்.

ஜிமெயிலை பேக்அப் எடுக்க - IMAPSize

♠ Posted by Kumaresan Rajendran in ,,
ஈமெயில் சேவையில் முதலிடத்தில் இருக்கும் ஜிமெயில் நிறுவனம் சேமிப்பு பெட்டகமாக சுமார் ஏழு ஜிபி வரை (7557 MB) இலவசமாக வழங்குகிறது. ஜிமெயில் பயன்படுத்தாத இண்டர்நெட் பயனாளர்களே இல்லை என்று கூறும் அளவிற்கு ஜிமெயில் நிறுவனத்தின் ஈமெயில் சேவையை தற்போது அனைவரும் பயன்படுத்தி வருகிறனர். நாம் தினமும் பல ஈமெயில்களை அனுப்பவும், ஈமெயில்களை பெறவும் செய்கிறோம். குறிப்பிட்ட காலத்தில் ஜிமெயில் நிறுவனம் வழங்கிய முழு சேமிப்பு இடமும் சேமிக்கப்படும் போது, புதியதாக நினைவகத்தை விலை கொடுத்து கூகுள் நிறுவனத்திடம் இருந்து வாங்க வேண்டும். இல்லையெனில் நம்முடைய ஈமெயில்களை நீக்கம் செய்ய வேண்டும். இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படும் போது ஈமெயிலகளை பேக்அப் செய்து மீண்டும் வேறொரு ஜிமெயிலில் அப்லோட் செய்து கொள்ள முடியும். இதற்கு ஒரு மென்பொருள் உதவி செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் Account > New என்பதை தேர்வு செய்து உங்களுடைய பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு பின் Sever என்ற இடத்தில் imap.gmail.com என்பதை உள்ளிட்டு ஒகே செய்யவும்.

இப்போது உங்களுடைய கணக்கானது பரிசோதிக்கப்படும். பின் Account-> Account Backup எனபதை தேர்வு செய்யவும். இப்போது உங்களுடைய ஈமெயில் அக்கவுண்ட் பட்டியலிடப்படும். அதில் உள்ள லேபிள்களை தேர்வு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.



பேக்அப் சேமிக்க வேண்டிய  இடத்தை தேர்வு செய்து கொள்ளவும். பின் Back up பொத்தானை அழுத்தி பேக்அப் செய்து கொள்ளவும். இந்த மென்பொருளின் சிறப்பம்சமே ஒரு ஜிமெயில் அக்கவுண்டில் பேக்அப் செய்து கொண்டு மற்றொரு அக்கவுண்டில் அப்லோட் செய்து கொள்ள முடியும். ஜிமெயில் நிறுவனம் ஆரம்பித்த போது பயனர் கணக்கு தொடங்கிய பலருக்கும் தற்போது முழு சேமிப்பு இடமும் நிறைந்திருக்கும். அவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கூகுள் நிறுவனம் ஜிமெயில் சேவையை தொடங்கிய வருடம் 2004 ஆகும். இண்டர்நெட் இணைப்பு அதிவேகமாக இருந்தால் மட்டுமே இவையணைத்தும் சாத்தியம் ஆகும். இல்லையெனில் வேலை தாமதப்படும். ஒரு முறை முயன்றுதான் பாருங்களே.

ISO பைல்களை உருவாக்க, கன்வெர்ட் செய்ய சீடி/டிவீடி-க்களில் ரைட் செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in ,
அளவில் மிக்பெரிய பைல்கள் மற்றும் இயங்குதளங்கள் அனைத்துமே ISO பைல் பார்மெட்டில் மட்டுமே இருக்கும். நாம் புதியதாக இணையத்தில் இருந்து பதிவிறக்கும் ஒரு சில மென்பொருள் கூட ISO பைல் பார்மெட்டில்தான் இருக்கும். லினக்ஸ் இயங்குதளங்களை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யும் போதும் ISO பைல் பார்மெட்டில் மட்டுமே இருக்கும். இந்த பைல்களை பூட்டபிள் பைல்களாக மாற்றம் செய்ய நாம் எதாவது ஒரு ரைட்டிங் மென்பொருளை அணுக வேண்டும். சிடி ரைட்டிங் என்றால் உடனே நினைவுக்கு வருவது நீரோ மென்பொருள் மட்டுமே. இந்த மென்பொருளில் ISO பைல்களை கன்வெர்ட் செய்து பூட்டபிள் பைலாக மட்டுமே உருவாக்க முடியும். மற்ற வசதிகள் எதுவும் இல்லை, குறிப்பாக வேறொரு பைல் (CUE, BIN, NRG, MDF, CDI) பார்மெட்டாக மாற்றம் செய்ய முடியாது. மற்ற இமேஜ் பைல் பார்மெட்களை ISO பைல் பார்மெட்டாகவும் மாற்றம் செய்ய முடியாது. இவையணைத்தையும் ஒரே மென்பொருளின் உதவியுடன் செய்ய முடியும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் ISO Workshop அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். இதில் உங்களுக்கு தேவையான பல மெனுக்கள் இருக்கும் அதை பயன்படுத்தி உங்களுடைய தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும்.


ISO பைல்களை பூட்டபிள் பைல்களாக மாற்றம் செய்யாமலேயே அதில் உள்ள பைலகளை காண முடியும். மேலும் வேறொரு இமேஜ் பைல் பார்மெட்டில் இருந்து ISO பைல் பார்மெட்டாக மாற்றம் செய்ய முடியும்.  இந்த மென்பொருளானது CD-R/RW, DVD-R/RW, DVD+R/RW, DVD+R DL, BD-R/RE போன்ற சீடிக்களை சப்போர்ட் செய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் அளவில் மிகச்சிறியதாகும், (3.6 MB) மட்டுமே ஆகும். இந்த மென்பொருளானது விண்டோஸ்  NT/2000/XP/Vista/7 (32 and 64bit) ஆகிய இயங்குதளத்தில்  வேலை செய்யக்கூடியது ஆகும். இது ஒரு இலவச மென்பொருள் ஆகும்.

வீடியோக்களை கன்வெர்ட் செய்ய - AIO Video Converter

♠ Posted by Kumaresan Rajendran in ,
பல்வேறு விதமான வீடியோ பைல்கள் நம்மிடம் இருக்கும். அவை ஒவ்வொன்றும் தனித்தனி பைல் பார்மெட்டில் இருக்கும். அவற்றை பயன்படுத்தும் போது ஒரு சில பைல்கள் மட்டும் எதாவது கோளாருகளை உண்டாக்கும். அவ்வாறு உள்ள வீடியோ பைல்களை கன்வெர்ட் செய்ய வேண்டுமெனில் நாம் எதாவது ஒரு மென்பொருளை நாட வேண்டும். வீடியோக்களை கன்வெர்ட் செய்ய புகழ்பெற்ற மென்பொருள் Total video converter ஆகும். இதை தவிர்த்து சிறந்த மென்பொருட்கள் உண்டா என்று இணையத்தில் தேடி பார்த்தால் பல இருக்கிறன. அவற்றில் ஒன்றுதான் AIO Video Converter, இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்து Choose Encoding Profile என்பதில் எந்த பார்மெட்டில் வீடியோவை மாற்றம் செய்ய நினைக்கிறீர்களோ அதனை தேர்வு செய்து கொள்ளவும்.


பின் Add பொத்தானை அழுத்தி எந்த வீடியோவை மாற்றம் செய்ய நினைக்கிறீர்களோ அதை தேர்வு செய்து கொள்ளவும். பின் Convert என்ற பொத்தானை அழுத்தவும்.


இந்த அப்ளிகேஷனின் அமைப்பை (Setting)  உங்கள் விருப்பபடி மாற்றியமைத்து கொள்ள முடியும். இந்த மென்பொருளின் உதவியுடன் எந்த வீடியோ பைலாக இருந்தாலும் நீங்கள் குறிப்பிடும் பைல் பார்மெட்டில் மாற்றம் செய்து கொள்ள முடியும்.

யூடியூப் மியூசிக் டவுண்லோடர் இலவசமாக லைசன்ஸ் கீயுடன்

♠ Posted by Kumaresan Rajendran in ,,
யூடியூப் தளத்தில் இருக்கும் வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. ஆனால் யூடியூப் தளத்தில் இருந்து ஆடியோவை மட்டும் தனியே பதிவிறக்கம் செய்ய அதிக வாய்ப்புகள் இல்லை. யூடியூப் தளத்தில் அனைவருமே தங்களது படைப்புகளை வெறும் வீடியோவாக மட்டுமே பதிவேற்றம் செய்கிறனர். அவ்வாறு இருக்கும் வீடியோவிலிருந்து தனியே ஆடியோவை மட்டும் பிரித்தெடுப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. முதலில் யூடியூப் தளத்தில் இருந்து வீடியோவை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின் எதாவது ஒரு கன்வெர்ட்ரை பயன்படுத்தி  பயன்படுத்தி வீடியோவிலிருந்து ஆடியோவை மட்டும் தனியே பிரித்தெடுக்க முடியும். அதுமட்டுமல்லாமல் யூடியூப் தளத்தில் இருக்கும் வீடியோக்கள் பலவும் FLV பைல் பார்மெட்டில் இருக்கும். இதனை நாம் கன்வெர்ட் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


தளத்தில் குறிப்பிட்ட சுட்டிக்கு சென்று இணையத்தின் உதவியுடன் மென்பொருளை தரவிறக்கி நிறுவிக்கொள்ளவும். இந்த இலவச பதிப்பானது மார்ச் 25, 2011 வரை மட்டுமே இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளின் சந்தை விலை $29.95 ஆகும். இந்த மென்பொருளுக்கான லைசன்ஸ் கீயானது YMD85051051WD ஆகும்.


இந்த மென்பொருளை கணினியில் நிறுவியபிறகு ஒப்பன் செய்யவும். இந்த மென்பொருளில் இருந்தவாறே யூடியூப் தளத்தில் உலவி நமக்கு வேண்டிய வீடியோவை கன்வெர்ட் செய்து தரவிறக்கம் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.


இந்த மென்பொருளின் சிறப்பு வசதி என்னவெனில் உங்களுக்கு வேண்டிய வகையில் வீடியோவை கன்வெர்ட் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளின் உதவியுடன் MP3, AVI, WMV, MOV, MP4, 3GP போன்ற பைல் பார்மெட்களில் இருந்து வீடியோவை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.