தமிழில் கணினி செய்திகள்

பெரிய அளவுடைய கோப்புகளை வெட்ட மற்றும் ஒட்ட

♠ Posted by Kumaresan Rajendran in
அளவில் மிகப்பெரிய கோப்புகளை மின்னஞ்சல் அனுப்பவோ அல்லது இணையத்தில் பரிமாற்றம் செய்து கொள்வதோ அவ்வளவு சாதாரண செயல் இல்லை, இணைய இணைப்பு அதிகம் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அளவில் மிகப்பெரிய கோப்புகளை பரிமாற்றம் செய்து கொள்வது சாத்தியம், மிகப்பெரிய கோப்புகளை இணையம் வழியே பரிமாற்றம் செய்யும் போது தீடிரென இணையத்தில் கோளாரு ஏற்பட்டு பதிவேற்றமோ அல்லது பதிவிறக்கமோ தடைப்படக்கூடும். ஆனால் அளவில் சிறிய கோப்புகளை விரைவாக பதிவிறக்கம் அல்லது பதிவேற்றமோ செய்து விட முடியும். அதனால் மிகப்பெரிய கோப்புகளை இணையத்தில் பரிமாறிக்கொள்ளும் போது அதனை சுருக்கி அனுப்புவார்கள், அவ்வாறு சுருக்கும் போது மிகப்பெரிய கோப்புகள்...

ஒன்றுக்கும் மேற்பட்ட இயங்குதளங்களை ஒரே யுஎஸ்பி ட்ரைவில் இருந்து நிறுவ

கணினி வல்லுனர் என்றால் கணிப்பொறி பற்றி முழுவதும் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். நாளுக்கு நாள் புதுப்புது வளர்ச்சியை கணினிதுறை கண்டு வருகிறது. கணினி கண்டுபிடிக்க பட்ட காலத்திலிருந்து இன்று வரை பல்வேறு பரிமாணங்களில் வளர்ந்துவிட்டது. அந்த வகையில் ஒரு கணினி வல்லுனர் என்றால் நிச்சயம் இயங்குதளம் நிறுவ கண்டிப்பாக தெரிந்து இருக்க வேண்டும். இயங்குதளம் நிறுவுதல் என்றால் சாதாரணமாக விண்டோஸ், லினக்ஸ் இயங்குதளங்களை நிறுவுதல் மட்டுமே ஆகும். அதிலும் லினக்ஸ் இயங்குதளம் முன்பு நிறுவுதலை காட்டிலும் சற்று எளிதாக வந்துவிட்டது. விண்டோஸ் இயங்குதளம் பற்றி சொல்ல வேண்டியது இல்லை. கணினிக்கு புதியவராக இருந்தாலும் ஒரு...

வைரஸ்களால் மறைந்து போன கோப்புகளை யுஎஸ்பி மற்றும் வன்வட்டிலிருந்து மீட்டெடுக்க

♠ Posted by Kumaresan Rajendran in ,,
கணினிகளுக்கிடைய தரவுகளை பரிமாற்றம் செய்ய நாம் யுஎஸ்பி ட்ரைவினை அதிகம் பயன்படுத்துவோம். அவ்வாறு ஒரு கணினியில் இருந்து கோப்புகளை வேறொரு கணினிக்கு மாற்றம் செய்யும் போது யுஎஸ்பி ட்ரைவில் உள்ள கோப்பறைகள் யாவும் ஸ்டார்கட் கோப்பாக மாறி இருக்கும். ஆனால் நம்முடைய கோப்புகள் கோப்புகள் யாவும் அந்த யுஎஸ்பி பெண்ட்ரைவில் இருக்கும். ஆனால் அதனை திறந்தால் ஸ்டார்கட்டாக மட்டுமே இருக்கும். இது வைரஸ் பாதிப்பால் ஏற்படும். இந்த ஸ்டார்கட் கோப்பினை திறந்தால் நம்முடைய கோப்புகள் இருக்கும். ஆனால் அவ்வாறு செய்யும் போது நம்முடைய கணினிக்கும் அந்த ஸ்டார்கட் வைரஸ் வந்துவிடும். இந்த ஸ்டார்ட்கட் வைரஸால் நம் கணினிக்கு எந்த வித...

விண்டோஸ் 8 இயங்குதளத்தில் இருப்பியல்பு பயனர் கணக்கு மற்றும் கெஸ்ட் பயனர் கணக்கின் படத்தை மாற்ற

♠ Posted by Kumaresan Rajendran in ,,
விண்டோஸ் ஏழு இயங்குதளத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக விண்டோஸ் எட்டு இயங்குதளம் உள்ளது. விண்டோஸ் ஏழு இயங்குதளத்தில் கெஸ்ட் மற்றும் பயனர் கணக்கின் படத்தை மாற்ற வேண்டுமெனில் எளிதாக கன்ட்ரோல் பேனல் சென்று மாற்றிக்கொள்ள முடியும். ஆனால் விண்டோஸ் 8 இயங்குதளத்தில் அவ்வாறு இல்லை, இதில் பயனர் கணக்கின் படத்தை மாற்ற ஒரு சில வேலைகள் செய்ய வேண்டும்.  விண்டோஸ் 8 இயங்குதளத்தில் புதிய பயனர் கணக்கினை உருவாக்கும் போது தானாகவே புதிய படத்தினை இயங்குதளம் அமைத்துக்கொள்ளும். அவ்வாறு அமைக்கும் படங்களுக்கு பதில் நமக்கு பிடித்த படங்களை மாற்றிக்கொள்ளலாம். விண்டோஸ் 8 இயங்குதளத்தில் இருப்பியல்பு பயனர் கணக்கு...

கணினியின் வேகத்தை அதிகரிக்க Baidu PC Faster

♠ Posted by Kumaresan Rajendran in ,,
கணினியில் இயங்குதளம் நிறுவி நாட்கள் ஆகிவிட்டது அதனால் தான் இயங்குதளம் மந்தமாக செயல்படுகிறது எனவே மீண்டும் இயங்குதளம் நிறுவ வேண்டும் என்று சில கணினி வல்லுனர்கள் கூறுவார்கள் அது மிகவும் தவறான விஷயம். கணினி அவ்வாறு மந்தமாக செயல்படும் போது கணினியில் இருக்கும் தேவையற்ற ரிஸிஸ்டரி பைல்கள், ஜங் பைல்களை நீக்குவதன் மூலம் கணினியின் வேகத்தை அதிகரிக்க முடியும். மேலும் வன்தட்டினை டிபிராக்மெண்டேஷன் செய்வதன் மூலமாகவும் கணினியின் வேகத்தை கூட்ட முடியும். கணினியில் தேவையில்லாமல் நிறுவியிருக்கும் மென்பொருள்களை நீக்கம் செய்வதன் மூலம் கணினி வேகத்தை மேலும் அதிகரிக்க முடியும். கணினியில் இருக்கும் தேவையற்ற பைல்களை...

விண்டோஸ் 8 இயங்குதளத்தை Safe Mode ல் பூட் செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in ,,
விண்டோஸ் எக்ஸ்பி, ஏழு இயங்குதளத்தில் சாதாரணமாக பூட் ஆகும் போதே F8 கீயை அழுத்தினால் Safe Mode போவதற்கான வழி கிடைக்கும். ஆனால் விண்டோஸ் 8 இயங்குதளத்தில் அவ்வாறு இல்லை, விண்டோஸ் 8 F8 அழுத்தினால் எந்த வித மாறுதலும் இல்லாமல் சாதாரணமாக பூட் ஆகும். எனினும் விண்டோஸ்8 இயங்குதளத்தை Safe Mode ல் பூட் செய்யவும் வழி இருக்கிறது. இந்த Safe Mode ல் பூட் செய்வதற்கான அவசியம் என்ன, ஒரு வேலை அழியாத கோப்புகளை அழிக்க வேண்டுமெனில் Safe Mode சென்று முழுமையாக அழித்துவிட முடியும். இயங்குதளம் பூட் ஆகாமல் கோளாரு செய்தாலும் Safe Mode சென்று சரி செய்து கொள்ள முடியும். இது போல் பல்வேறு பிரச்சினைகளை Safe Mode சென்று சரி...

போட்டோக்களை அழகூட்ட XnRetro

செல்போன் மற்றும் டிஜிட்டல் கேமிரா மூலமாக எடுக்கும் படங்கள் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்காது, அதனை எடிட் செய்த பின்பே படங்கள் வண்ணமயமாக இருக்கும். படங்களை எடிட் செய்ய செல்போன்களுக்கு பல்வேறு இலவச அப்ளிகேஷன்கள் உள்ளது. அதுவும் ஆன்ட்ராய்ட் சாதனங்களுக்கு என்றால் போட்டோக்களை எடிட் செய்ய பல்வேறு இலவச மென்பொருள்கள் உள்ளன. ஆனால் கணினிக்கு விண்டோஸ் இயங்குதளத்திற்கு அவ்வாறு மென்பொருள்கள் இல்லை. ஏதோ ஒரிரண்டு மென்பொருள்கள் மட்டுமே உள்ளது, அதில் ஒன்றுதான் XnRetro. மென்பொருளை தரவிறக்க சுட்டி சுட்டியில் குறிப்பிட்ட தளத்திலிருந்து மென்பொருளை பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் XnRetro அப்ளிகேஷனை...

யுஎஸ்பி மற்றும் ப்ளாஷ் ட்ரைவுகளை கடவுச்சொல் கொண்டு பூட்ட

♠ Posted by Kumaresan Rajendran in ,,,
தற்போது தரவுகளை கணினிகளுக்கிடையே பறிமாற்றம் செய்து கொள்ள பெரும்பான்மையான கணினி பயன்பட்டாளர்களால் பயன்படுத்தபடுவது யுஎஸ்பி ட்ரைவ் மற்றும் போர்ட்டபிள் ப்ளாஷ் ட்ரைவுகள் ஆகும். நாம் பயன்படுத்தும் கணினி மற்றும் செல்போன் ஆகிய சாதனங்களுக்கு கடவுச்சொல் கொண்டு பூட்டி வைத்திருப்போம், கடவுச்சொல் கொண்டு பூட்டி வைக்க காரணம் அதில் இரகசியமான தகவல்கள் மற்றும் கோப்புகளை வைத்திருப்பதனால் மட்டுமே, அதே போல் தான் யுஎஸ்பி மற்றும் ப்ளாஷ் ட்ரைவிலும் இரகசியமான கோப்புகளை வைத்திருப்போம் அதனை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டுமெனில் அதற்கு கடவுச்சொல் கொண்டு பூட்டி வைக்க வேண்டும். யுஎஸ்பி மற்றும் ப்ளாஷ் ட்ரைவுகளுக்கு கடவுச்சொல்...

விண்டோஸ் இயங்குதளம் அப்டேட் ஆன பின் தானாகவே மறுதொடக்கம் ஆவதை டிசேபிள் செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in ,
விண்டோஸ் இயங்குதளத்தை அப்டேட் செய்த பின் தானகவே மறுதொடக்கம் ஆகும். இவ்வாறு விண்டோஸ் இயங்குதளம் மறுதொடக்கம் ஆகும் போது அதில் ஒப்பன் செய்யப்பட்டிருந்த அனைத்து அப்ளிகேஷன்களும் மூடப்பட்டு விடும். ஒரு சில முக்கியமான வேலையில் இருக்கும் போது இப்படி நடந்தால் நம்மை எரிச்சலூட்டும். மேலும் இவ்வாறு மறுதொடக்கம் ஆவது கணினியை வேகத்தை குறைக்கும். லினக்ஸ் இயங்குதளத்தில் அப்டேட் ஆன பின் லினக்ஸ் இயங்குதளம் மறுதொடக்கம் ஆகாது, ஆனால் விண்டோஸ் இயங்குதளத்தில் அவ்வாறு இல்லை. அப்டேட் ஆன பின் மறுதொடக்கம் ஆகும். இவ்வாறு மறுதொடக்கம் ஆவதை முழுவதுமாக ரத்து செய்ய விண்டோஸ் இயங்குதளத்தில் வழி உள்ளது.  முதலில் விண்டோஸ்...

முகபுத்தகம் Notifications ஒலிகளை டிசேபிள் செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in
முகபுத்தகம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. உலகில் அதிக இணைய பயன்பாட்டாளர்களை கொண்ட தளமாக இது உள்ளது. சிலர் தினமும் சாப்பிடுகிறார்களோ இல்லையோ ஆனால் முகபுத்தகம் செல்லாமல் இருக்க மாட்டார்கள் இதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. ஒருசிலர் நண்பர் வட்டத்தை பெருக்கி கொள்ள செல்வார்கள். ஆனால் பெரும்பாலானோர்கள் வன்முறை செயலில் ஈடுபடவே முகபுத்தகத்தை அதிகம் பயன்படுத்துகிறனர். இந்த முகபுத்தகம் மூலம் அதிக நண்பர் வட்டத்தை பெருக்கி அவர்களுடன் உரையாடவும் சிலர் விரும்புவார்கள். இவ்வாறு பல முகநூல் பயன்பாட்டாளர்கள் உள்ளனர். அவர்களுடன் உரையாடும் போதும், செய்திகளை பறிமாறிக்கொள்ளும் போதும் முகபுத்தகத்தில் ஒவ்வொன்றுக்கும்...

வேர்ட் கோப்பினை ஆடியோ கோப்பாக கன்வெர்ட் செய்ய

அலுவலங்கள் மற்றும் கணினி மையங்களில் கோப்புகளை உருவாக்க பெரும்பாலும் தற்போதைய காலகட்டத்தில் மைக்ரோசாப்ட் ஆப்பிஸ் தொகுப்பான வேர்ட் கொண்டோ உருவாக்கப்படுகிறது. ஆப்பிஸ் தொகுப்பை கொண்டு  உருவாக்கப்படும் கோப்புகள் அனைத்தையும் எழுத்து வடிவில் மட்டுமே இருக்கும். இந்த வேர்ட் தொகுப்பை பயன்படுத்தி உருவாக்கப்படும் கோப்புகள் மிகச்சிறியதாகவும். அளவில் பல பக்கங்களை உள்ளட்டக்கியதாகவும், அதிகமான பக்கங்களை கொண்ட டாக்குமெண்ட்களை எளிதில் படித்துவிட முடியாது. இதனால் காலம் தாமதம் மட்டுமே ஆகும். இதற்கு பதிலாக எழுத்து வடிவில் உருவாக்கப்படும் கோப்புகளை ஒலி வடிவில்மாற்றம் செய்ய இலவச மென்பொருள் வழிவகை செய்கிறது. மென்பொருளை...