தமிழில் கணினி செய்திகள்

ஒரே மொபைலில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகள்

♠ Posted by Kumaresan Rajendran in ,
நாம் பயன்படுத்தும் அனைத்து மொபைல் போன்களுமே தற்போது இரண்டு சிம் வசதிகளுடன் தான் இருக்கிறது. ஆனால் அதில் பயன்படுத்தும் அப்ளிகேஷன் கணக்குகள் ஒன்று மட்டுமே பயன்படுத்த முடியும். உதாரணமாக பேஸ்புக், வாட்ஸ்அப், யூடுப் போன்றவை ஆகும். இதற்கு தீர்வாக Parallel Space என்னும் ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன் இருக்கிறது. இந்த அப்ளிகேஷன் மூலமாக நம்முடைய மொபைல் போனில் அப்ளிகேஷன்களை நகலி (Clone) செய்து பயன்படுத்த முடியும். Parallel Space பதிவிறக்கம் செய்ய சுட்டி இந்த மென்பொருளை உங்கள் ஆன்ட்ராய்ட் மொபைல் போனில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். அதில் நீங்கள் நகலி எடுக்க விரும்பும் அப்ளிகேஷன்களை...

Hotstar வீடியோக்களை டவுண்லோட் செய்வது எப்படி

♠ Posted by Kumaresan Rajendran in ,,,
ஸ்டார் குழும தொலைகாட்சி வீடியோக்கள் அனைத்துமே Hotstar செயலி வழியாகவே தற்போது பயனாளர்களுக்கு பகிரப்படுகிறது. இதனை Offline வீடியோவாக மட்டுமே டவுண்லோட் செய்ய முடியும். அந்த வீடியோக்களை அச்செயளிக்குள் மட்டுமே பயன்படுத்த முடியும். அந்த வீடியோக்களை தனியாக பிரித்தெடுக்க முடியாது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதுதான் இந்த பதிவின் நோக்கம். சரி Hotstar வீடியோக்களை கணினி மற்றும் மொபைல் போன்களில் எளிமையாக டவுண்லோட் செய்துவது எவ்வாறு என்று பார்ப்போம் முதலில் கணினியில் எவ்வாறு டவுண்லோட் செய்வது என்று பார்ப்போம்.  கணினியில் வீடியோவினை தரவிறக்கம் செய்ய மென்பொருள் சுட்டி மேலே கொடுக்கப்பட்டுள்ள...

ஆன்லைன் ஷாப்பிங்கில் பொருட்களை சரியான விலைகொடுத்து வாங்குவது எப்படி - Buyhatke

இன்றைய காலகட்டத்தில் நாம் எந்த பொருட்களை வாங்க நினைத்தாலும் நாம் முதலில் செல்வது ஆன்லைன் வர்த்தக தளங்களுக்குதான் அதிலும் மிக முக்கியமாக எலெக்ட்ரானிக் பொடுட்களான மொபைல், கணினி போன்ற பொருட்கள் அதிகமாக வாங்கப்படுகிறது இதற்கு மிக முக்கியமான காரணம் நாம் வாங்கும் பொருட்கள் சரியில்லை என்றாலோ, திருப்தி அளிக்கவில்லை என்றாலோ அதனை திருப்பி கொடுத்துவிட்டு வேறு மாற்று பொருளையோ  அல்லது பணத்தினையோ திரும்ப பெற்றுக்கொள்ள முடியும். இவ்வாறு நாம் வாங்கும் பொருட்களை நாம் சரியான விலை கொடுத்துதான் வாங்குகின்றோமா என்றால் கண்டிப்பாக இல்லை என்றுதான் சொல்வேன். ஏனென்றால் நாம் ஆன்லைன் மூலமாக வாங்கும் எந்த பொருளுமே...

Google Business பக்கத்தை உருவாக்குவது எப்படி?

♠ Posted by Kumaresan Rajendran in ,
Google Business பக்கம் என்பது, நாம் கூகுள் தேடுபொறியில் சர்ச் செய்யும் போது முகப்பு பகுதியில் Right Side தோன்றும் விவரங்கள் ஆகும். இது மிக முக்கியமான தகவல்களை கொண்டிருக்கும். உதாரணமாக கூகுள் மேப், வேலை செய்யும் நேரம் மற்றும் முகவரி போன்றவைகள் ஆகும். இந்த Google Business சேவையினை நம்முடைய அலுவலகத்திற்கோ அல்லது வலைதளம்/வலைப்பூவிற்கோ நாம் எவ்வாறு பெறுவது என்று பலருக்கு தெரியாமல் இருக்கலாம் இந்த பதிவு அவர்களுக்கானது. Google Business பக்கதிற்கான சுட்டி மேலே உள்ள சுட்டியை கிளிக் செய்து Google Business பக்கத்திற்கு செல்லவும். பின் START NOW என்னும் பொத்தானை அழுத்தவும். அடுத்து உங்களுடைய...

இலவசமாக மின்னஞ்சல் கையெப்பத்தை உருவாக்க

♠ Posted by Kumaresan Rajendran in ,,
Youtube சேனல் முகவரி :-  https://www.youtube.com/channel/UCVLRhbLMbMMbeE6fIDmQ9Kw இந்த பதிவின் வீடியோ பதிவு:-  இன்றைய சூழ்நிலையில் அஞ்சலகம் வழியாக தபால் அனுப்பும் முறை குறைந்து குறுஞ்செய்தி (SMS, Webchat), மின்னஞ்சல் (Email) வழியாகவே செய்திகள் பரிமாறிக்கொள்ளப்படுகிறன. தற்போது வெப்சாட் டூல்களான வாட்ஸ்அப், டெலிகிராம், ஹைக் வழியாகவே அதிகமான உரையாடல்கள் பரிமாறிக்கொள்ளப்படுகிறது. என்னதான் இவ்வளவு எளிமையாக உரையாடிக்கொள்ள செயலிகள் (Application) இருந்தாலும் தொழில் முறை சார்ந்த அலுவல்களுக்கு மின்னஞ்சல் வழியாகவே தற்போதும் தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்படுகிறன. இவ்வாறு அனுப்பும் மின்னஞ்சல்களில்...

விண்டோஸ் 10 இயங்குதளத்தில் அப்டேட்டினை டிசேபிள் செய்வது எப்படி?

♠ Posted by Kumaresan Rajendran in ,
இதற்கு முந்தைய விண்டோஸ் இயங்குதளங்களில் விண்டோஸ் அப்டேட்டினை மிகவும் எளிமையாக டிசேபிள் செய்து கொள்ள முடியும். ஆனால் விண்டோஸ் 10 இயங்குதளத்தில் விண்டோஸ் அப்டேட்டினை டிசேபிள் செய்வது என்பது அவ்வளவு எளிதான செயல் இல்லை. இதற்கு நாம் விண்டோஸ் 10 இயங்குதளத்தில் இரண்டு இடத்தில் மாற்றங்களை செய்ய வேண்டும்.  1) முதலில் கம்ப்யூட்டர் மீது வலது கிளிக் செய்து தோன்றும் பாப்அப் விண்டோவில் Manage என்பதை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் தோன்றும் விண்டோவில் Services and Applications என்பதை  கிளிக் செய்யவும். அடுத்து Services என்பதை கிளிக் செய்யவும்.  கிளிக் செய்தவுடன் தோன்றும் விண்டோவில்...

வெப்சைட்டுளை Block செய்வது எப்படி?

♠ Posted by Kumaresan Rajendran in ,,,
நாம் பயன்படுத்தும் கணினியை நம்முடைய குழந்தைகளும் பயன்படுத்தலாம். அந்த சூழ்நிலையில் குழதைகள் சில தவறான வெப்சைட்டுகளை பார்க்க நேரிடலாம் அல்லது சமூக வலைதளங்களிலையே அவர்களுடைய முழு நேரத்தையும் விரயமாக்க கூடும். இந்த நிலையில் அவர்களை அந்த வெப்சைட்டுகளை எப்படி பார்க்க விடாமல் தடுக்க முடியும் என்று ஆராய்ந்து பார்த்தால் வெப்சைட்டுகளை ப்ளாக் செய்தால் இதனை தடுக்க முடியும். விண்டோஸ் இயங்குதளத்திலையே அதற்கான எளிய வழி உள்ளது. முதலில் C:\Windows\System32\drivers\etc என்ற போல்டரினை ஒப்பன் செய்யவும். அதில் உள்ள hosts என்ற பைலினை ஒப்பன் செய்யவும். அதில் நீங்கள் எந்த வெப்சைட்டினை ப்ளாக் செய்ய விரும்புகிறீர்களோ...

விண்டோஸ் 10 Administrator கணக்கினை எனேபிள் செய்வது எப்படி?

♠ Posted by Kumaresan Rajendran in ,,
விண்டோஸ் 10 இயங்குதளத்தை நிறுவியவுடன் சில முக்கியமான செயல்களை நாம் செய்ய வேண்டும். அதில் முதலாவதாக நாம் Administrator கணக்கினை எனேபிள் செய்வது ஆகும். இதன் மூலம் என்ன பயன் உள்ளது என்று நீங்கள் கேட்கலாம். விண்டோஸ் தொடர்புடைய பைல்களில் மாற்றம் செய்ய இந்த கணக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முதலில் விண்டோஸ் பட்டன் மீது வலது கிளிக் செய்து தோன்றும் விண்டோவில்  Command Prompt (Admin) என்பதை தேர்வு செய்யவும். அடுத்தாக தோன்றும் விண்டோவில் “ net user administrator /active:yes ” என்று டைப் செய்து என்டர் பட்டனை அழுத்தவும். ” The command completed successfully ” என்ற அறிவிப்பினை நீங்கள்...

Youtube வீடியோக்களை நேரிடையாக தரவிறக்கம் செய்ய

Youtube தளத்திலிருந்து வீடியோக்களை மூன்றாம் நிலை மென்பொருள்கள் இல்லாமல் நேரிடையாக உலாவி (Browser)   துணையுடன் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். Youtube வீடியோக்களை எளிமையாக பதிவிறக்கம் செய்ய நீட்சி (Add-on) பயன்படுகிறது.  நீட்சிகளை தரவிறக்கம் செய்ய முகவரி :-  கூகுள் குரோம் & ஒபேரா நெருப்புநரி (Firefox) கூகுள் குரோம், நெருப்புநரி மற்றும் ஒபேரா உலாவிகளில் இந்த நீட்சிகளை மேலே கொடுக்கப்பட்டுள்ள தரவிறக்க முகவரிகளை பயன்படுத்தி தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளவும். பின் Youtube தளத்திற்கு சென்று வீடியோவினை காணும் போது வீடியோவிற்கு கீழ் பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு...

போட்டோசாப்பில் தமிழ் எழுத்துக்களை டைப் செய்வது எப்படி?

♠ Posted by Kumaresan Rajendran
போட்டோசாப்பில் தமிழில் டைப் செய்ய மூன்று மென்பொருள்கள் தேவை. NHM WRITTER NHM CONVERTER பதிப்பு NHM WRITTER:- இந்த மென்பொருள் தமிழ் எழுத்துக்களை உள்ளீடு செய்வதற்கு பயன்படுகிறது. NHM CONVERTER :- தமிழ் எழுத்துக்களை TAM மற்றும் TAB பார்மெட்டுக்கு மாற்ற உதவி செய்யும். பதிப்பு:- பதிப்பு மென்பொருளில் மொத்தம் 250 எழுத்துருக்கள் (Fonts) உள்ளது. இதில் 200 TAM எழுத்துருக்கள் மற்றும் 50 TAB எழுத்துருக்கள் உள்ளன. இந்த மூன்று மென்பொருள்களையும் உங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளவும். பின் போட்டாசாப்பினை ஒப்பன் செய்யவும். அதில் Edit > Preference > Type...

உங்களுடைய ஜிமெயில் கணக்கு உருவாக்கப்பட்டது எப்போது?

♠ Posted by Kumaresan Rajendran in ,
உங்களுடைய ஜிமெயில் கணக்கு உருவாக்கப்பட்ட தேதியினை அறிந்து கொள்வதன் மூலமாக , ஒருவேளை ஜிமெயில் கணக்கின் கடவுச்சொல் (Password) னை நீங்கள் மறந்து விட்டால் அதனை மீட்டெடுக்க இந்த தேதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த தேதியினை நீங்கள் அறிந்து கொள்ள முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் உள்நுழைந்து கொள்ளவும். பின் Settings மெனுவினை கிளிக் செய்யவும். அடுத்து தோன்றும் விண்டோவில் Forwarding and POP/IMAP என்ற மெனுவினை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் தோன்றும் விண்டோவில் உங்களுடைய ஜிமெயில் கணக்கு உருவாக்கப்பட்ட தினத்தினை நீங்கள் காண முடியும். இதில் முதலாவதாக இருப்பது மாதம் இரண்டாவதாக...