தமிழில் கணினி செய்திகள்

தொல்லை தரும் அழைப்புகளை நீக்க

♠ Posted by Kumaresan Rajendran in at August 26, 2010
மொபைல் இன்றைய காலகட்டத்தில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கிராமங்களிலிருந்து நகரம் வரை மொபைல் பரவியுள்ளது. சாதரண மனிதன் கையிலும் மொபைல் உள்ளது. இதனை பொருளாதார வளர்ச்சி எனவும் கூறலாம். எங்கு பார்த்தாலும் செல்போன் கோபுரங்கள், செல்போன் கடைகள் பரவியுள்ளது.



Service Provide  அதாவது Aircel, Airtel,  Vodafone போன்ற பல்வேறு நிறுவனங்களின் மூலமாக போன்செய்யும் வசதி பெற்று வருகிறோம். SERVICE,ALERTS  போன்ற சேவைகளை தினமும் போன் செய்து சர்வீஸை ஆக்டிவேட் செய்யுமாறு நாம் பயன்படுத்தும் கம்பெனியிலிருந்து தினமும் பல அழைப்புகள் வரும்.

நாம் சில நேரங்களில் முக்கியமான வேலைகளில் இருக்கும் போது இது போன்ற போன் கால்கள் தொந்தரவு செய்யும். ஏன் நானே இது போன்ற பல்வேறு  போன்களால் சிரமத்திற்கு ஆளாகியிருக்கிறேன். இதில் பெரிய கொடுமை என்னவென்றால் எந்த சர்வீஸை ஆக்ட்டிவேட் செய்தோம் என்றே தெரியாது ஆனால் பேலன்ஸ் மட்டும் குறைந்து இருக்கும், என்ன காரணம் என்று புரியாமல் வாடிக்கையாளர் சேவை மையத்தை நாடி காரணம் கேட்டால், நம் தரப்பிலிருந்து தான் ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளதாக கூறுவார்கள். இது போன்ற போன் அழைப்புகளை  நிறுத்த முடியும் அதை பற்றி கீழே காண்போம்.

முதலில் National Do Not Call Registry (NDNC Registry) என்ற தளத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ளவும்.

1.AIRCEL:

ஏர்செல்லில் இருந்து வரும் அழைப்புகளை நிறுத்த "START DND" to "1909" (Toll Free) என்ற என்னுக்கு SMS அனுப்ப வேண்டும், இதனை மீண்டும் Deactivate செய்ய ”STOP DND” to “1909” (Toll Free).


2.AIRTEL:
ஏர்டெல்லில் இருந்து வரும் அழைப்புகளை நிறுத்த “START DND” to 121 என்ற என்னுக்கு SMS அனுப்ப வேண்டும், இதனை மீண்டும் Deactivate செய்ய "STOP DND" to 121.




3.VODAFONE:

Vodafone-லிருந்து வரும் அழைப்புகளை நீக்க ACT DND to 111என்ற என்னுக்கு SMS அனுப்ப வேண்டும்.
 Deactive செய்ய CAN ACT என்ற என்னுக்கு SMS செய்ய வேண்டும்.









4.BSNL:

BSNL-ல் இருந்து வரும் அழைப்புகளை நீக்க, IVRS ஆப்ஷன் மூலகாக நிறுத்த 1909 என்ற என்னுக்கு போன் செய்து Active மற்றும் Deactive செய்ய முடியும்.

SMS மூலமாக நிறுத்த START DND to 1909 மீண்டும் அதனை Deactive செய்ய STOP DND to 1909.




5.Reliance:



Reliance-ல் இருந்து வரும் அழைப்புகளை நீக்க click இந்த தளத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ளவும்.







6.Tata Indicom:
Tata indicom-ல் இருந்து வரும் அழைப்புகளை நீக்க  Click இந்த தளத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ளவும்.








7.Tata Docomo:

TATA DOCOMO-ல் இருந்து வரும் அழைப்புகளை நிறுத்த START DND to 1909 (toll free) தனை மீண்டும் ஆக்ட்டிவேட் செய்ய STOP DND to 1909 (toll free).








8. Idea Callular:

 Idea-வில் இருந்து வரும் அழைப்புகளை நிறுத்த “START DND” to 1909 தனை மீண்டும் ஆக்ட்டிவேட் செய்ய  “STOP DND” to 1909.









8 Comments:

Post a Comment