தமிழில் கணினி செய்திகள்

ஜி-மெய்லில் ஒரே நேரத்தில் பல கணக்குகளை கையாள

♠ Posted by Kumaresan R in at August 11, 2010
இணையத்தில் உலாவரும் அனைவருமே இ-மெயில் கணக்கு வைத்திருப்பர் அதிலும் இன்றைய காலகட்டத்தில் இ-மெயில் மூலமாகவே பல்வேறு விதமான அலுவலக கணக்குகள், வாழ்த்துக்கள், பல விதமான செய்திகள் அனுப்பபடுகிறன. தற்போதைய நிலையில் ஜி-மெயில் நிறுவனம் இமெயில் சேவையில் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது. அந்நிறுவனம் புதுபுது வசதிகளை செயல்படுதுகிறது. அந்த வகையில் ஜிமெயிலில் பல கணக்கு வைத்திருப்பவர்கள் ஒரே நேரத்தில் அனைத்து கணக்குகளிலும் செயல்பட முடியும். அதுவும் ஒரே உலவியில், அனைத்து கணக்குகளையும் திறக்க முடியும்.

அதற்கு முதலில் உங்கள் ஜி-மெயில் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை கொடுத்து ஜி-மெயில் கணக்கில் நுழைந்து கொள்ளவும். பின் Personal Setting செல்ல வேண்டும். அதில் Multiple sign-in என்ற இடத்தில் உள்ள Change/Edit  என்ற பொத்தானை அழுத்த வேண்டும்.


On - Use multiple Google Accounts in the same web browser.  என்ற இடத்தில் உள்ள option button னை கிளிக் செய்து, கீழே உள்ள நான்கு பாக்சிலும் டிக் செய்துவிட்டு Save செய்துகொள்ளவும்..
தற்போது ஒரு அக்கவுண்டில் நுழைந்து கொண்டு மற்றொரு கணக்கை கையாள உங்களின் மெயில் அக்கவுண்ட் UserName கிளிக் செய்தால் Sign in anothor Account என்பதை கிளிக் செய்து புதிய கணக்கில் நுழைந்து செயல்பட முடியும்.

3 comments:

why you have not submitted to indli. i want to vote.

"ஜிமெயிலில் பல கணக்கு வைத்திருப்பவர்கள் ஒரே நேரத்தில் அனைத்து கணக்குகளிலும் செயல்பட" கட்டுரை நன்றாக இருந்தது. டாக்குமெண்ட்களை pdf ஆக மாற்ற 'Cute Pdf' என்ற சாப்ட்வேர் உள்ளது. இதை இன்ஸ்டால் செய்துகொண்டால் அது வேர்டில் 'print' Optionல் ஒரு Optionஆக இருக்கும் பிரின்ட் கொடுப்பதற்கு பதில் pdf ஆக மாற்றிக் கொள்ளலாம். இதன் வசதி என்னெவென்றால் இன்டர்னெட் இணைப்பு இல்லாவிடிலும் செயல்படும். மற்றொன்று இப்போது புதிதாக வந்திருக்கும் MS Office 2010ல் Save as optionல் save as Pdf என்றே ஒரு option இருக்கிறது.

எனது வலைப்பூ முகவரி.. நேரமிருந்தால் வரவும். http://naadodii.blogspot.com/

மன்னிக்கவும் நண்பரே! உங்களின் இந்த இடுகையை நான் ஏற்கனவே பார்க்காததால் எற்பட்ட பிழை. தவறாக கருதவேண்டாம்.

Post a Comment