♠ Posted by Kumaresan Rajendran in MS-OFFICE at August 31, 2010
அலுவலக பயன்பாட்டிற்கு பெரும்பான்மையோரால் பயன் படுத்தப்படும் மென்பொருள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆப்பிஸ் தொகுப்பாகும், இந்த மொன்பொருளை நாம் பல்வேறு விதமான பயன்பாட்டிற்கு பயன்படுத்துகிறோம். உதாரணமாக Word, Excel, PowerPoint, Access போன்றவற்றை அன்றாடம் பயன்படுத்துவோம். இது போன்ற வேலைகளை மேற்கொள்ளும் போது திடிரென பவர் கட், System Restart போன்ற சூழ்நிலைகளில் நாம் டைப் செய்த டேட்டாக்களை இழக்க நேரிடும், அப்போது நாம் எந்த அளவுக்கு பைலை சேமித்தோமோ அது மட்டுமே இருக்கும். இது போன்ற பிரச்சினையை சாமாளிக்க முடியும். நாம் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை தானாகவே சேவ் ஆகுமாறு செட் செய்ய முடியும்.
OFFICE-2007-ல் Auto recover ஆப்ஷனை செட் செய்ய:
முதலில் ஆப்பிஸ் தொகுப்பில் எதாவதொரு ஒன்றினை ஒப்பன் செய்ய வேண்டும், உதாரணமாக Word, Excel, PowerPoint இவற்றில் ஒண்று. பின் Office பட்டையை கிளிக் செய்து Word Option என்பதை தேர்வு செய்யவும்.
பின் Save என்ற பட்டையை கிளிக் செய்து Save Auto recover information ever என்ற இடத்தில் டிக் செய்து எததனை நிமிடத்துக்கு ஒருமுறை சேவ் ஆக வேண்டும், என்ற நேரத்தை குறிப்பிட்டு ஒகே பொத்தானை அழுத்த வேண்டும்.
OFFICE-2003-ல் Auto recover ஆப்ஷனை செட் செய்ய:
முதலில் ஆப்பிஸ் தொகுப்பில் எதாவதொரு ஒன்றினை ஒப்பன் செய்ய வேண்டும், உதாரணமாக Word, Excel இவற்றில் ஒண்று. பின் Tools ல் ஆப்ஷனை ஒப்பன் செய்யவும்.
அதில் Save என்ற பட்டியை தேர்வு செய்யவும், பின் Save AutoRecover info Every என்ற இடத்தில் டிக் செய்து விட்டு எத்தனை நிமிடத்துக்கு ஒருமுறை சேவ் ஆக வேண்டும் என்பதை குறிப்பிட்டு ஒகே பொத்தானை அழுத்த வேண்டும். இனி பயம் இல்லாமல் வேலைகளை செய்ய முடியும்.
0 Comments:
Post a Comment