தமிழில் கணினி செய்திகள்

விண்டோஸ்-7ல் ட்ரைவ் ஐகானை மாற்றுவது எப்படி?

♠ Posted by Kumaresan Rajendran in ,, at November 16, 2010
விண்டோஸ்-7ல் பல்வேறு விதமான ட்ரிக்குகளை செய்து பார்த்திருப்போம். நாம் இயல்பாகவே My computer, My Documents , Network Place ,Rrecycle bin போன்ற ஐகான்களை மாற்றம் செய்ய முடியும். ஆனால் ட்ரைவ் ஐகானை மட்டும் மாற்றம் செய்ய முடியாது, இந்த ஐகானையும் மாற்றம் செய்ய ஒரு மென்பொருள் உதவுகிறது. இதற்கு 7DriveIconsChange என்னும் மென்பொருள் உதவுகிறது.

மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கு சொடுகவும்: Download


இந்த மென்பொருளானது .rar பைலாக இருக்கும். இதனை Extract  செய்து கொள்ளவும். பின் தோன்றும் .EXE பைலின் மீது வலது கிளிக் செய்து தோன்றும் Pop-up விண்டோவில் Run as administrator என்பதை தேர்வு செய்து, அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Drive என்பதில் எந்த ட்ரைவின் ஐகானை மாற்ற நினைக்கிறீர்களோ அதனை குறிப்பிடவும் உதாரணமாக C என்பதை குறிப்பிடவும். பின் 7DriveIconsChanger என்பதில் C ட்ரைவினை தேர்ந்தெடுத்து கொள்ளவும். பின் Browse Icon என்பதில் .ico பைலை தேர்வு செய்யவும். பின் Apply Icon என்பதை தேர்வு செய்யவும். இப்போது நீங்கள் குறிப்பிட்ட ஐகான் தெரிவு செய்யப்பட்டிருக்கும்.


இதேபோல நீங்கள் DVD ட்ரைவிற்கும் ஐகானை மாற்றிக்கொள்ள முடியும். ஐகான்களை டவுண்லோட் செய்ய இங்கு சொடுகவும்.

2 Comments:

பயனுள்ள தகவலுக்கு நன்றி.

Post a Comment