தமிழில் கணினி செய்திகள்

YOUTUBE சாங்க் டவுண்லோடர்

♠ Posted by Kumaresan Rajendran in , at February 23, 2011
யூடியூப் தளத்தில் உள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்ய பல வழிமுறைகள் உள்ளன. நேரிடையாக குறிப்பிட்ட வீடியோவின் முகவரியை (URL) பயன்படுத்தி வீடியோவினை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். இதற்கு பல்வேறு மென்பொருள்கள் உள்ளன. மேலும் இந்த யூடியூப் தளத்தில் உள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்ய ஒரு சில தளங்களும் உதவி செய்கிறன. இவ்வாறு யூடியூப் தளத்தில் இருக்கும் வீடியோவினை தரவிறக்கம் செய்ய பல்வேறு வழிகள் இருப்பினும் இவையாவும் சிறப்புடையதாக இல்லை. யூடியூப் தளத்தில் இருக்கும் வீடியோவினை தரவிறக்கம் செய்ய ஒரு அருமையான மென்பொருள் உள்ளது. நாம் இந்த மென்பொருளில் இருந்தவாறே இணையத்தின் உதவியுடன் யூடியூப் தளத்தில் இருந்து வீடியோ மற்றும் ஆடியோவினை தனித்தனியே பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். வேண்டுமெனில் இரண்டையும் சேர்த்தும் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளவும். இந்த மென்பொருளை கணினியில் நிறுவ வேண்டுமெனில் உங்களுக்கு டாட்நெட் ப்ரேம்வோர்க் வேண்டும். இந்த மென்பொருளை முதல் முதலாக நீங்கள் பயன்படுத்தும் போது, உங்களுடைய பெயர் மற்றும் ஈமெயில் முகவரியை உள்ளிட்டு, ஒரு கோடினை பெற்று மென்பொருளை ஒப்பன் செய்ய வேண்டும். 


Search Music or Videos என்பதை தேர்வு செய்யவும். தோன்றும் சர்ச் பாக்சில் உங்களுக்கு விருப்பமான கீவேர்டினை உள்ளிட்டு GO என்ற பொத்தானை அழுத்தவும்.அடுத்ததாக தோன்றும் லிஸ்ட்டில்  உங்களுக்கு விருப்பமான ஆடியோ மற்றும் விடியோவை தேர்வு செய்து Download Music, Download Video அல்லது Download Music & Video என்ற பொத்தானை அழுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.  இந்த மென்பொருளின் சிறப்பம்சமே வீடியோ மற்றும் ஆடியோவினை தனித்தனியாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். வேண்டுமெனில் இரண்டையும் சேர்த்தும் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

0 Comments:

Post a Comment