தமிழில் கணினி செய்திகள்

முகநூல் நண்பர்களை குழுவாக நீக்கம் செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in ,
முகநூலினை பற்றி ஏற்கனவே பலமுறை குறிப்பிட்டுள்ளேன், எனவே முகநூல் பற்றிய முன்னுரை ஏதும் தேவையில்லை என்று நினைக்கிறேன். முகநூல் முதன்முதலில் பயன்படுத்தும் போது நமக்கு முன் அறிமுகம் இல்லாத நண்பர்கள் பலரையும், நண்பர்களாக்கிவிடுவோம் இதற்கு முக்கிய காரணமே நமக்கு இணையத்தை பற்றியும் முகநூல் பற்றியும் முழுமையாக அறிந்திருக்காமை, பிற்காலத்தில் இவை இரண்டையும் சரி வர புரிந்துகொண்டு பயன்படுத்தும் காலத்தில் தேவையற்ற நண்பர்களை நீக்க நிணைப்போம் ஆனால் நம்முடைய முகநூல் கணக்கில் என்னற்ற தேவையற்ற நண்பர்கள் பலர் இருப்பார்கள், இவர்களை நம்முடைய நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய ஒவ்வொருவராக மட்டுமே நீக்கம் செய்ய...

இலவசமாக மின் புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய முதன்மையான ஐந்து தளங்கள்

♠ Posted by Kumaresan Rajendran in ,
         கணினி துறை சம்பந்தமான மின் இதழ்கள் பல உள்ளன, அவற்றில் பலவும் விலை அதிகமானவை இதுபோன்ற அனைத்து இதழ்களையும் நம்மால் விலை கொடுத்து வாங்கி பயன்படுத்த முடியாது. இதுபோன்ற நிலையில் நாம் இதழ்களை படிக்க வேண்டுமெனில் ஒன்று நூலகத்திலோ அல்லது நண்பர்களிடம் கடனாகவோ வாங்கிதான் படிக்க வேண்டும். சில நேரங்களில் இவை சாத்தியமாகும் ஆனால் இவை எப்போதும் நடப்பது சாத்தியமற்றது. இது போன்ற நிலையில் நாம் என்ன செய்யலாம் என்றால் இணையத்தின் உதவியுடன் அனைத்து விதமான மின் புத்தகங்களையும் இலவசமாக  தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.  அதற்கு பல்வேறு தளங்கள் உதவி...

உங்களுடைய கூகுள் கணக்கு உருவாக்கப்பட்டது எப்போது

♠ Posted by Kumaresan Rajendran in ,
உங்களுக்கு தெரியுமா, உங்களுடைய கூகுள் கணக்கு எப்போது உருவாக்கப்பட்டது எப்போது என்று, ஒவ்வொருவருக்கும் தன்னுடைய பிறந்தநாள் எப்போது என்று கேட்டால் சொல்லிவிடுவார்கள் ஆனால் அவர்களுடைய கூகுள் கணக்கு எப்போது உருவாக்கப்பட்டது என்றால் அவர்களால் சொல்ல முடியாது, ஏனென்றால் இதனை யாரும் ஒரு பொருட்டாக நினைப்பதில்லை ஏதோ ஒரு காரணத்திற்காக கூகுள் கணக்கினை உருவாக்கியிருப்போம். பின் அதே கணக்கினை அனைத்து கூகுள் சம்பந்தமான அனைத்து சேவைகளையும் பெற பயன்படுத்துவோம். இவ்வாறு நாம் பயன்படுத்தும் கூகுள் கணக்கானது எப்போது உருவாக்கப்பட்டது என்றால் அது நமக்கு தெரியாது. சரி கூகுள் கணக்கு உருவாக்கப்பட்டது எப்போது என்று கண்டறிய...

கூகுள் புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய மென்பொருள்

♠ Posted by Kumaresan Rajendran in
மின்னனு புத்தகங்கள் பெரும்பாலும் பதிவிறக்கம் செய்ய அனைவரும் நாடுவது கூகுள் தளம் ஆகும். இந்த தளத்தில் உள்ள மின்னனு புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய எந்த ஒரு இணைப்பு சுட்டியும் இருக்காது. எனவே இந்த புத்தகங்களை நம்மால் பதிவிறக்கம் செய்ய முடியாது. கணிப்பொறி வாயிலாக காண முடியுமே தவிர பதிவிறக்கம் செய்ய முடியாது. எனினும் இந்த புத்தகங்களை விலைகொடுத்து வாங்கி கொள்ள முடியும். இதனை இலவசமாக பெற முடியாத என்றால், ஏன் முடியாது, முடியும். அதற்கு ஒரு இலவச Google Books Downloader மென்பொருள் உள்ளது. இந்த மென்பொருள் மூலமாக கூகுள் புத்தகங்களை இலவசமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இது ஒரு இலவச மென்பொருள் ஆகும். மென்பொருளை...

MS ஆப்பிஸ் டாக்குமெண்ட்களை டேப் வடிவில் திறக்க

♠ Posted by Kumaresan Rajendran in ,
எம்.எஸ் ஆப்பிஸ் பதிப்புகளான வேர்ட், எக்சல், பவர் பாயிண்ட் போன்ற பதிப்புகளை சாதாரணமாக பயன்படுத்தும் போது, ஒவ்வொறு பதிப்பினை பயன்படுத்தும் போது தனித்தனியே திறந்து பயன்படுத்துவோம். உதாரணமாக வேர்ட் பதிப்பில் இரண்டு கோப்புகளை உருவாக்க வேண்டுமெனில் தனித்தனியே ஒப்பன் செய்து உருவாக்குவோம். இதற்கு பதிலாய் ஒரே பதிப்பில் இருந்து கொண்டே பல்வேறு கோப்புகளை உருவாக்க முடியும்.  சாதாரணமாக ஆப்பிஸ் கோப்புகளை கையாளும் போது அதனை நாம் தனித்தனியாக மட்டுமே ஒப்பன் செய்து பயன்படுத்துவோம். அதற்கு பதிலாக உலாவிகளில்(Browser) போன்று ஒவ்வொரு கோப்புகளையும் டேப் வடிவில் திறக்க முடியும். இதற்கு Office Tap என்னும் சிறிய மென்பொருள்...

அனைத்து வீடியோக்களையும் தரவிறக்கம் செய்ய ஒரே மென்பொருள்

♠ Posted by Kumaresan Rajendran in ,
தற்போதைய காலகட்டத்தில் எந்த ஒரு செய்தியையும் தெளிவாக பார்க்க வேண்டுமெனில் அது வீடியோவாக இருப்பின் சிறப்பாக இருக்கும். அவ்வாறு உள்ள வீடியோக்களை இணையத்தின் உதவியுடன் காண முடியும்.  அவ்வாறு காணும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது என்பது கடினமான செயல் ஆகும். வீடியோக்களை காண நாம் அனைவரும் அதிகமாக அனுகுவது யூடியூப் தளம் ஆகும். இதுபோன்று இன்னும் பல்வேறு தளங்கள் உள்ளன. இதுபோன்ற வீடியோ தளங்களில் இருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்ய ஒருசில மென்பொருள்கள் சந்தையில் கிடைக்கிறன. அவற்றில் முக்கியமான மென்பொருள் vDownloader ஆகும். மென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டி இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் தரவிறக்கி...

இமேஜ் பைலை வேர்ட் பைலாக கன்வெர்ட் செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in ,,
நம்மிடம் இருக்கும் டாக்குமெண்ட்களை ஸ்கேன் செய்து வைத்திருப்போம், அதில் நாம் ஒரு சில எழுத்தையோ அல்லது வார்த்தையையோ மாற்ற வேண்டி இருக்கும். அவ்வாறு மாற்ற வேண்டிய டாக்குமெண்டை எளிமையாக மாற்ற முடியும். இதனை நாம் போட்டோசாப் அல்லது வேறு எதாவது போட்டோ எடிட்டிங் மென்பொருள் துணைகொண்டு மட்டுமே மாற்றுவோம் இதற்கு பதிலாக, இமேஜ் பைலை வேர்ட் அல்லது டெக்ஸ்ட் பைலாக மாற்றிக்கொள்ள முடியும். இவ்வாறு இமேஜ் பைலை வேர்ட் பைலாக ஆன்லைனிலேயே மாற்றம் செய்ய சுட்டி. இவ்வாறு செய்வதற்கு இணைய இணைப்பு கண்டிப்பாக தேவை இணைய இணைப்பு இல்லாமல் செய்ய ஒரு மென்பொருள் உதவி செய்கிறது. இந்த மென்பொருள் மூலமாக எளிதாக இமேஜ் பைலை வேர்ட் பைலாக...

படங்களில் உள்ள வாட்டர்மார்க்கினை நீக்க

♠ Posted by Kumaresan Rajendran in ,
படங்களை மெறுகேற்றவும், படங்களில் உள்ள குறைபாடுகளை நீக்கவும். அனைவரும் கையாளும் மென்பொருள் போட்டோசாப் ஆகும். இதில் அனைத்து போட்டோ தொடர்பான வேலைகளையும் விரைந்து செய்ய முடியும். இந்த மென்பொருளின் மூலம் ஒரு சில நேரங்களில் சிறிய வேலைகளை கூட செய்ய அதிக நேரம் ஆகும். உதாரணமாக டிஜிட்டல் கேமரா மூலம் எடுக்கும் படங்களில் தேதி இருக்கும். இதனை படத்திலிருந்து நீக்க வேண்டுமெனில் நாம் எதாவது ஒரு மூன்றாம் தர போட்டோ எடிட்டிங் மென்பொருளின் உதவியை நாடி செல்ல வேண்டும். இதுபோன்று உள்ள வாட்டர்மார்க்குகளையும், தேவையற்ற படங்களையும் நீக்க ஒரு அருமையான மென்பொருள் ஒன்று உள்ளது. அதுதான் Inpaint என்னும் மென்பொருள் ஆகும். அது...

இலவச வீடியோ கன்வெர்ட்டர் - விண்டோஸ் மற்றும் மேக் இயங்குதளங்களுக்கு

♠ Posted by Kumaresan Rajendran in ,,
முன்பெல்லாம் நாம் எதாவது ஒரு பொருளை வாங்கினால் அவற்றை பற்றிய விளக்க குறிப்பு(Catalog) அச்சுவடிவில் இருக்கும். ஆனால் தற்போது விளக்ககுறிப்புகள் சீடி/டிவீடி மூலம் வீடியோவாக வருகிறது. இவ்வாறு உள்ள வீடியோக்களை நாம் மீடியா பிளேயர்களின் உதவியுடன் மட்டுமே காண முடியும். ஆனால் அதுபோன்ற வீடியோக்களை நம்முடைய மொபைல் போன்களில் காண வேண்டுமெனில் குறிப்பிட்ட வீடியோவினை கன்வெர்ட் செய்தால் மட்டுமே முடியும். அதற்கு உதவும் இலவச மென்பொருள்தான் WonTube Free Video Converter. வீடியோ பைலானது பல்வேறு பார்மெட்களில் இருக்கும். இன்றைய சூழ்நிலையில் அனைவரும் எந்த ஒரு வீடியோவையும்  மொபைல் போனில் எடுத்துச்செல்லவே விரும்புவர்,...

கூகுள்+ உள்ள படம் மற்றும் வீடியோக்களை தரவிறக்க குரோம் நீட்சி

முகநூலுக்கு போட்டியாக கூகுள் நிறுவனத்தால் ஆரபிக்கப்பட்டதே கூகுள்+ ஆகும்.  இதன் மூலம் படங்கள், வீடியோக்கள் மற்றும் எழுத்து வடிவிலான தகவல்கள் போன்றவற்றை நம் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும். மேலும் இதில் பல்வேறு வசதிகள் உள்ளன. இவ்வாறு நம் நண்பர்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல் நமக்கு பிடித்தவையாக இருக்கும். அதிலும் ஒரு சில வீடியோக்கள் அரிதானவையாக இருக்கும். அவற்றை நம்மால் பார்க்க மட்டுமே முடியும். ஆனால் அவற்றை நம்மால் தரவிறக்கி பயன்படுத்த முடியாது. இவ்வாறு கூகுள்+ உள்ள படம் மற்றும் வீடியோக்களை தரவிறக்க குரோம் நீட்சி ஒன்று உள்ளது இதன் மூலம் எளிமையாக வீடியோ மற்றும் படங்களை தரவிறக்கம் செய்து கொள்ள...

எம்.எஸ்.ஆப்பிஸ் டாக்குமெண்ட்களில் இருந்து படங்களை(IMAGE) தனியாக பிரித்தெடுக்க

♠ Posted by Kumaresan Rajendran in ,
தற்போது பல்வேறு கோப்புகள் யாவும் ஆப்பிஸ் பார்மெட்டுகளிலேயே உருவாக்கப்படுகிறன. அதிலும் பல கோப்புகள் எம்.எஸ்.ஆப்பிஸ் மென்பொருளை பயன்படுத்தியே உருவாக்கப்படுகிறன. ஆப்பிஸ் கோப்புகள் (வேர்ட்,எக்சல்,பவர் பாயின்ட்) பலவும் படங்களுடன் இணைக்கப்பட்டு தற்போது உருவாக்கப்படுகிறன. இணையத்தில் நாம் ஒரு தகவலை தேடி செல்லும் போது பல கோப்புகள் வேர்ட்,எக்சல்,பவர் பாயின்ட் பார்மெட்களில் இருக்கும். அவ்வாறு உள்ள கோப்புகள் படங்களுடன்  மட்டுமே இருக்கும். அவற்றை  தனியே பிரித்தெடுக்க Image Extraction Wizard என்னும் மென்பொருள் உதவுகிறது. இதன் மூலம் படங்களை மட்டும் தனியே பிரித்தெடுக்க முடியும். உதாரணமாக நாம் ஒரு வேர்ட்...

லைசன்ஸ் கீயுடன் இலவசமாக - BDLot Blu-ray Ripper

♠ Posted by Kumaresan Rajendran in ,
Blue Ray  குறுவட்டுக்களில் உள்ள தகவல்களை மீட்டெடுக்க  BDLot Blu-ray Ripper என்னும் மென்பொருள் உதவுகிறது. தற்போது இந்த மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது. இந்த மென்பொருள் இன்னும் 5 நாட்கள் மட்டுமே இலவசமாக பெற முடியும். Blue Ray  குறுவட்டுக்கள் சேதமடைந்து இருக்கும் அவற்றில் உள்ள கோப்புகளை நம்மால் பயன்படுத்த இயலாது. ஆனால் அவற்றில் உள்ள தகவல்களை மீட்டெடுப்பதன் மூலமாக நாம் அவற்றை பயன்படுத்திக்கொள்ள முடியும். சாதாரணமாக Blue Ray  குறுவட்டுக்களில் உள்ள தகவல்களை மீட்டெடுக்க இயலாது. அதற்கென உரிய மென்பொருளை கொண்டு மட்டுமே மீட்டெடுக்க முடியும். அதற்கு உதவும் சிறந்த மென்பொருள்தான் இந்த ...

விண்டோஸ் இயங்குதளத்தை லாக் செய்ய - WinLockPro

♠ Posted by Kumaresan Rajendran in
நம்முடைய கணினியில் பல்வேறு விதமான தகவல்களை வைத்திருப்போம். உதாரணமாக வங்கி கோப்புகள், அலுவலகம் சம்பந்தமான தகவல்கள் மற்றும் பல்வேறு விதமான தகவல்களையும் நம் கணினியில் வைத்திருப்போம். அவற்றை நாம் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள பல்வேறு மறைவு,அடைவு (Hide, Lock) மென்பொருள்களை நம் கணினியில் நிறுவி பயன்படுத்தி வருவோம். நாம் இவ்வாறு செய்வது சிறப்பெனினும். நம்முடைய விண்டோஸ் இயங்குதளத்தையே லாக் செய்தால் எவராலும் நம் கணினியை பயன்படுத்த இயலாது. நாம் கணினியில் பணியாற்றிக்கொண்டிருக்கும் போது செல்போன் அழைப்பு, அல்லது வேறு காரணங்களால் நம் கணினியை அப்படியே வைத்துவிட்டு சென்றுவிடுவோம். ஆனால் ஒருசிலர் இதனை தவறாக...

பேஸ்புக் அரட்டையில் தன்குறிப்பு படத்தை கொண்டுவர

♠ Posted by Kumaresan Rajendran in
பேஸ்புக் பற்றி தெரியாத இணைய பயனாளர்களே இருக்க முடியாது அந்த அளவிற்கு தற்போது பேஸ்புக் பற்றி இணைய பயனாளர்கள் அறிந்துள்ளனர். பேஸ்புக் தளம் மூலமாக செய்திகளை பரிமாறிக்கொள்வது மட்டுமல்லாமல் நண்பர் வட்டாரத்தையும் உருவாக்க முடியும். மேலும் பல்வேறு விதமான வசதிகளையும் இதன் மூலம் பெற முடியும்.நம் நண்பர்களுடன் அரட்டையில்(CHAT)  ஈடுபடும் போது நாம் நம்முடைய முகநூல் படத்தையோ, அல்லது வேறு ஒருவருடைய முகநூல் படத்தையோ கொண்டு வர ஒரு எளிமையான வழி உள்ளது. அதற்கு முதலில் உங்களுடைய முகநூல் கணக்கில் உள்நுழைந்து கொள்ளவும். பின் நீங்கள் வழக்கம் போல் அரட்டையில் ஈடுபடவும். அப்போது எந்த முகநூல் பயனாளருடைய படத்தை அனுப்ப...

போட்டக்களை வீடியோவாக மாற்ற - PhotoStage Slideshow

♠ Posted by Kumaresan Rajendran in ,
தற்போதைய காலகட்டத்தில் எல்லோரிடமும் மொபைல் போன்கள் உள்ளது. அதிலும் கேமாரா மொபைல்கள் சந்தையில் மிக குறைவான விலைக்கு கிடைக்கிறது. மேலும் டிஜிட்டல் கேமிராக்கலும் குறைவான விலைக்கு கிடைக்கிறன. இதனால் தற்போது எந்த நிகழ்வையும் நாம் போட்டோ எடுத்து வைத்துக்கொள்வோம். அவ்வாறு நாம் எடுக்கும் போட்டோக்களை வீடியோவாக மாற்றம் சந்தையில் பல்வேறு மென்பொருள்கள் உள்ளன. அவை யாவும் விலைகொடுத்து மட்டுமே வாங்க வேண்டும். மேலும் அவை யாவும் அளவில் அதிகமாக இருக்கும். அவ்வாறு உள்ள மென்பொருள்களை நம்மில் பலரால் விலைகொடுத்து வாங்க இயலாது. PhotoStage Slideshow என்னும் மிகச்சிறிய மென்பொருள் ஒன்று உள்ளது.  இதன் மூலம் எளிமையாக...

முடக்கப்பட்ட YOUTUBE வீடியோவை காண நெருப்புநரி நீட்சி

♠ Posted by Kumaresan Rajendran in
YOUTUBE தளத்தில் நமக்கு தேவையான எந்த வீடியோவையும் பார்க்க முடியும். தேவையெனில் வேண்டிய வீடியோவினை பதிவேற்றமும்/பதிவிறக்கமும்  செய்து கொள்ளவும்  முடியும். இந்த YOUTUBE தளமானது கூகுள் நிறுவனத்துடையது ஆகும். இந்த YOUTUBE தளத்தில் ஒரு சில வீடியோக்கள் முடக்கப்பட்டிருக்கும், அதுபோன்ற வீடியோக்கள் பெரும்பாலும் பயனர்களை கவர்ந்தவையாக இருக்க கூடும். அந்த நிலையில் அதுபோன்ற குறிப்பிட்ட வீடியோவினை காண வேண்டுமெனில் நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. ஆனால் தற்போது யூட்டுப் தளத்தில் முடக்கப்பட்டிருக்கும் வீடியோவினை காண நெருப்புநரி  உளாவியில் ஒரு நீட்சி உள்ளது. அதன் மூலம் முடக்கப்பட்ட வீடியோக்களை காண...

பயனர் கணக்கின் கடவுச்சொல்லை மாற்ற

♠ Posted by Kumaresan Rajendran in ,,
விண்டோஸ் இயங்குதளத்தில் பயனர் கடவுச்சொல்லை மாற்ற மிக எளிமையான வழி விண்டோஸ் இயங்குதளத்திலேயே உள்ளது. நாம் சாதாரணமாக கடவுச்சொல்லை மாற்றும் போது முந்தைய கடவுச்சொல்லை உள்ளிட்ட பின்னரே நாம் புதிய கடவுச்சொல்லை உருவாக்கி கொள்ள முடியும். ஆனால் முந்தைய கடவுச்சொல் இல்லாமலேயே புதிய கடவுச்சொல்லை உருவாக்க முடியும். இதனை செய்ய நாம் எந்த மூன்றாம் தர மென்பொருளின் உதவியையும் நாடி செல்ல வேண்டிய அவசியம் இல்லை. விண்டோஸ் இயங்குதளத்தின் உதவியுடனே இதனை நாம் செய்ய முடியும்.  முதலில் Start > Control Panel லை ஒப்பன் செய்யவும். அதில் View by என்ற வரிசையில் Small Icons என்பதை தெரிவு கொள்ளவும்.  அதில் Administrative...