தமிழில் கணினி செய்திகள்

இண்டநெட் தொடர்பில் ஏற்படும் கோளாருகளை சரிசெய்ய

♠ Posted by Kumaresan R in ,
இணையம் என்பது தற்போதைய நிலையில் அத்தியாவசியமான ஒன்றாகும், இந்த நிலையில் இணைய இணைப்பிலோ அல்லது இணைய சேவையிலோ பல்வேறு விதமான பிரச்சினைகள் எழக்கூடும். நம்மை அறியாமலையே இணைய  அமைப்பில்(Setting) ஏதேனும் மாற்றங்களை செய்யக்கூடும் அதுபோன்ற சூழ்நிலையில் இணைய இணைப்பு நமக்கு கிடைக்காது, அல்லது இணைய இணைப்பில் ஏதேனும் சிறு தவறுகள் ஏற்படக்கூடும். உதாரணமாக ஒரு குறிப்பிட்ட வலைப்பக்கம் மட்டும் திறக்காது, அது போன்ற நிலையில் எந்த இடத்தில் தவறு நடந்தது என கனிக்க முடியும் ஆனால் அந்த தவறினை எவ்வாறு சரிசெய்வது என்பது மட்டும் புரியாது, இதுபோன்ற கோளாருகளை சமாளிக்க ஒரு மென்பொருள் உள்ளது.

மென்பொருளை தரவிறக்க: சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கொண்டு, அன்ஜிப் செய்து கொள்ளவும். பின் மென்பொருளின்  (CIntRep.exe) மீது வலதுகிளிக் செய்து Run as administrator என்பதை தேர்வு செய்யவும் தற்போது அப்ளிகேஷன் ஒப்பன் ஆகும். அதில் உங்களுடைய Problem தை தேர்வு செய்து GO பட்டனை அழுத்தவும். தற்போது சிஸ்ட்டம் ரீஸ்ட்டார்ட் ஆகும்.

தற்போது இணையத்தில் உலவுங்கள் இணையமானது சரியாக வேலை செய்யும், நெட்வொர்க் தொடர்பான எந்தஒரு சிக்கல்கள் அனைதும் தற்போது சரியாகிவிடும். இந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள்.

விண்டோஸ் 7 எக்ஸ்புளோரரிலிருந்து HomeGroup யை நீக்குவது எப்படி?

♠ Posted by Kumaresan R in ,,
விண்டோஸ்7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை பொறுத்தவரை ஹோம்குருப் ஆப்ஷன் விண்டோஸ் எக்ஸ்புளோரரில் இருக்கும், இதனை நாம் விரும்பினால் விண்டோஸ் எக்ஸ்புளோரரில் இருந்து நீக்கி கொள்ள முடியும், இந்த ஹோம்குருப் ஆப்ஷனானது நெட்வோர்க் சேரிங்கிற்கு பயன்படுவதாகும், இதன் மூலம் மற்றொரு கணினியில் உள்ள தகவலை பரிமாறிக்கொள்ள முடியும். இந்த ஹோம்குருப் ஆப்ஷனை நம்முடைய விருப்பபடி மாற்றியமைத்துக்கொள்ள முடியும். இந்த ஹோம்குருப் ஆப்ஷனை விரும்பினால் டிசேபிள் செய்து கொள்ள முடியும்.

முதலில் நீங்கள் ஹோம்குருப் ஆப்ஷனை நீக்க Start > Control Panel > All Control Panel Items > Home Group ஆப்ஷனை தேர்வு செய்யவும். பின் தோன்றும் விண்டோவில் Leave the homegroup என்பதை தேர்வு செய்யவும் சிறிது நேரத்தில் ஹோம்குருப் ஆப்ஷன் நீக்கப்படும்.


அடுத்ததாக ஹோம்குருப் சர்வீஸ்யை டிசேபிள் செய்ய ஸ்டார்ட் பட்டனை அழுத்தி தோன்றும் விண்டோவில் சர்ச்பாக்சில் Services என டைப் செய்யவும் தோன்றும் விண்டோவில் Homegroup provider என்பதை தேர்வு செய்து கிளிக் செய்யவும், அடுத்ததாக தோன்றும் விண்டோவில் General என்னும் டேப்பை கிளிக் செய்து Startup type என்பதில் Disabled ஆப்ஷனை தேர்வு செய்து Apply செய்துவிட்டு ஒகே பொத்தானை அழுத்தவும்.
இப்போது நீங்கள் கணினியை ஒருமுறை ரீஸ்டார்ட் செய்து கொள்ளவும். இப்போது விண்டோஸ் எஜ்ஸ்புளோரர் பாரில் ஹோம்குருப் ஆப்ஷன் இருக்காது.


நீங்கள் மீண்டும் ஹோம்குருப் ஆப்ஷனை விண்டோஸ் எக்ஸ்புளோரருக்கு கொண்டு வர மீண்டும் அதே வழியை பின்பற்றி டிசேபிள் செய்யும் இடத்தில் மட்டும் ஆட்டோமேட்டிக் என்பதை தேர்வு செய்து ஒகே பொத்தானை அழுத்தி அப்ளை செய்துகொண்டு ஹோம்குருப்பினை மீண்டும் உருவாக்கி கொள்ள முடியும்.

முகவரிகளை கண்டறிய - ஒரு தளம்

♠ Posted by Kumaresan R in
எவ்வளவோ இணையதளங்கள் இருப்பினும், ஒரிரு தளம் மட்டுமே பரவலாக தெரியும். குறிப்பாக Google, Yahoo போன்றவை, இந்த தளங்களை விட சிறப்பான தளங்கள் இருப்பினும் அவை வெளியே தெரிவதில்லை. இதுபோன்ற தளங்களின் ஒன்றுதான் Indiatrace.com இந்த தளத்தின் மூலம் நாம் பல்வேறு வித வசதிகளை பெற முடியும் உதாரணமாக மொபைல் நம்பர் Trace-ல் தொடங்கி  பின் கோடு, IP அட்ரஸ் வரை நீண்டுகொண்டே செல்கிறது இந்த தளத்தின் வசதி, மேலும் நாம் தேடும் பல முகவரிகளை இந்த ஒரே தளத்தில் இருந்தப்படியே பெற முடியும். வேறு வேறு தளத்திற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.


தளத்தின் முகவரி: Indiatraceஇந்த தளத்தில் இருந்தப்டியே நாம் மொபைல் ட்ராகிங்கில் தொடங்கி ஐபி, லேன்ட்லைன், பின் கோடு, STD கோடு, SMS சென்டர் வரை பல முகவரிகளை நம்மால் பெற முடியும். இந்த தளத்தின் உதவியுடன் இந்தியாவின் எந்த ஒரு முகவரியையும் (போன், ஐபி) எளிதாக பெற முடியும்.ஆன்லைனில் இருந்தப்படியே நீங்கள் மற்றவர்களின்  முகவரிகளை பெற இந்த தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அனேகமான முகவரியை பெறாவிட்டாலும் ஒரளவிற்கு குறிப்பிட்ட அளவு நீங்கள் மற்றவர்களின் முகவரியை அறிந்து கொள்ள இந்ததளம் வழிவகை செய்கிறது.

மைக்ரோசாப்ட்டின் Security Essentials 2.0

♠ Posted by Kumaresan R in ,
Microsoft Security Essentials என்பது ஒரு ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் ஆகும். இந்த ஆண்டிவைரஸ் சாப்ட்வேர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்படுவதாகும். இது இரண்டாவது பதிப்பாகும். இதன் முந்தைய பதிப்பானது 2009 ம் வருடம் செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டி வைரஸ் மென்பொருளானது மிகவும் பிரபலமானது ஆகும். மேலும் இந்த ஆண்டிவைரஸ் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்படுவதால் இது மிகவும் சிறப்பான ஒன்றாக உள்ளது , இந்த ஆண்டி வைரஸ் ஆனது அதிகப்படியான பாதுகாப்பு தன்மையினை அளிக்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த ண்டிவைரஸ் மென்பொருளானது, மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்படுவதால் மற்ற ஆண்டிவைரஸ்களை விட விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்திற்கு Microsoft Security Essentials உகந்ததாக இருக்கும். மேலும் இந்த ஆண்டிவைரஸ் இண்டர்நெட் வழியாக எந்தவித வைரஸ்களும் நம்முடைய கணினிக்கு ஊடுருவாமல் இருக்க வழிவகை செய்கிறது, இண்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு தனி பாதுகாப்பினையும் இந்த ஆண்டிவைரஸ் வழங்குகிறது.

இந்த பதிப்பில் கூடுதல் அம்சமாக anti-malware engine புகுத்தப்பட்டுள்ளது, இந்த வசதியின் மூலமாக நம்முடைய கணினியில் புதிதாக எந்த ஒரு டிவைஸ்யை உள்ளீடு செய்தாலும் அதில் உள்ள வைரஸ்களை கிளீன் செய்துவிடும். இந்த ஆண்டிவைரஸ் நம்முடைய கணினிக்கு முழுமையான பாதுகாப்பு வசதியினை வழங்குகிறது.

Torrentz.com-ன் புதிய டொமைன் பெயர்கள் Torrentz.eu மற்றும் Torrentz.me

♠ Posted by Kumaresan R in
Torrentz.com புகழ்பெற்ற  டோரன்ட் சர்ச் இன்ஞ்சின் ஆகும், இந்த சர்ச் இன்ஞ்சின் மூலமாக நமக்கு தேவையான டோரன்டினை தேடு பெற முடியும். இந்த தளத்தில் நமக்கு தேவையான டோரன்டினை டவுண்டோட் செய்வது மட்டுமள்ளாமல் சிறந்த டோரன்ட் தளத்தினையும் இந்த தளம் மூலமாக அறிந்து கொள்ள முடியும். சில தினங்களுக்கு முன் அமெரிக்க அரசு டோரன்ட் தளங்களை சர்ச் செய்து முடக்க முயற்ச்சித்தது, அதன் விளைவாக் டோரன்ட் தளங்கள் பலவும் முடக்கப்பட்டது. இதனால் Torrentz.com புதிய டொமைன் நேம்களை வெளியிட்டுள்ளது.
புதிய முகவரிகள்:
http://torrentz.me/

இந்த முகவரிகள் முலமாக தற்போது Torrentz.com தற்போது செயல்பட்டு வருகிறது, இந்த இரண்டு டொமைன் பெயர்களும் தற்போது செயல்பட்டு வருகிறது. உங்களுக்கு வேண்டிய டோரன்ட் பைல்களை இனி இணையத்தில் தேட வேண்டும் என்றால். இந்த இணைய தள முகவரிகளை அனுகவும்.


புதிய வளைதளத்தின் முதல்பக்கம், சரி டோரன்ட் பைல்களை டவுண்லோட் செய்ய சர்ச் இன்ஞ்சின் பெயர் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது, மற்றப்படி அனைத்துமே ஒன்றுதான்.

கணினியை பற்றிய முழுவிவரத்தையும் அறிய

♠ Posted by Kumaresan R in ,
நம்முடைய கணிப்பொறியை பற்றிய முழுவிவரத்தை பற்றி நாம் அறிய வேண்டுமெனில் System Information-ல் சென்று பார்க்க வேண்டும். அவ்வாறு நாம் பார்த்தாலும் நம்மால் நம்முடைய கணிப்பொறியை பற்றிய முழுவிவரத்தையும் நம்மால் அறிய முடியாது. ஒரு குறிப்பிட்ட அளவே அறிய முடியும். ஒரு சிறிய மென்பொருளின் துணையுடன் நாம் கணினியில் நிறுவப்பட்ட ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் தொடங்கி ஹார்ட்வேர் வரை அனைத்தையுமே ஒரே மென்பொருளின் உதவியுடன் நம்மால் அறிந்து கொள்ள முடியும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளின் உதவியுடன் நம்முடைய கணினியில் நிறுவியிருக்கும் மென்பொருகளை பற்றிய அனைத்து விவரங்களையும் அறிய முடிய்ம். மேலும் இந்த மென்பொருளை கொண்டு சாப்ட்வேர், ஹார்ட்வேர் பற்றிய அனைத்து வித தகவல்களையும் பெற முடியும்.

உங்களுடைய நண்பரின் கணினியை பற்றி தெரிய வேண்டுமெனில் நீங்கள் Ram எவ்வளவு Hard Disk எவ்வளவு எனப்தை தனியே பார்க்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் ஒரே இடத்தில் இருந்தப்படியே இந்த தகவல்கள் அனைத்தையும் நீங்கள் அறிய முடியும். மேலும் பல சிறப்பம்சங்கள் இந்த மென்பொருளில் அடங்கியுள்ளது.

ஜிமெயிலில் டெலிட் செய்த Contacts-களை மீட்டெடுக்க

♠ Posted by Kumaresan R in
ஈமெயில் சேவையில் ஜிமெயில் தற்போது முதன்மை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது, ஈ-மெயில் அனுப்பும் போதும் சரி மற்றப்படி அனைத்துவிதமான முகவரி (Contact) -கள் அனைத்தையுமே நம்முடைய ஈ-மெயிலில் தான் சேமித்து வைப்போம். குறிப்பாக இணைய நண்பர்களின் ஈ-மெயில் முகவரிகள் அனைத்துமே ஈ-மெயிலில் தான் இருக்கும், ஒரு சிலரே தனியாக குறித்து வைத்திருப்பார்கள். இந்த ஈ-மெயில் முகவரியை நாமே அறியாமலேயே டெலிட் செய்திருப்போம். அல்லது வேறு செயல்பாட்டின் காரணத்தால்  ஈ-மெயில் முகவரிகள்  டெலிட் செய்யப்பட்டிருக்கலாம். அவ்வாறு டெலிட் செய்யப்பட்ட ஈ-மெயில் முகவரிகளை மீட்டெடுக்க முடியும். 

முதலில் உங்களுடைய ஈ-மெயில் முகவரிக்குள் நுழைந்து கொள்ளவும், பின் Contacts என்பதை தேர்வு செய்து More Actions என்னும் பட்டியை தேர்வு செய்து அதில் Restore Contacts என்பதை தேர்வு செய்து எத்தனை நாள் என்பதை குறிப்பிட்டுவிட்டு, இழந்த Contact-களை ரீஸ்டோர் செய்து கொள்ள முடியும்.

 

அதிகபட்சமாக ஒருமாதத்திற்கு உள்ளாக டெலிட் செய்த முகவரிகளை மட்டுமே மீட்டெடுக்க முடியும். அந்த குறிப்பிட்ட நாளில் உங்களுடைய ஈ-மெயில் முகவரியில் இருந்த Contact-ள் மட்டுமே ரீஸ்டோர் செய்த பின்பு இருக்கும். மற்ற முகவரிகள் இருக்காது, என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.விண்டோஸ்-7ல் எழிலலை கூட்ட அற்புதமான தீம்கள்

♠ Posted by Kumaresan R in
கணிப்பொறியை பயன்படுத்தும் பலரும் கணினியை அழகாக வைத்துக்கொள்ள விரும்புவர், ஒவ்வொரு நாளும் புதியபுதிய வால்பேப்பர்கள், பேக்ரவுண்ட்களை வைத்துக்கொள்ள விரும்புவார்கள். அதுவும் தினமும் புதிய வால்பேப்பர்களை வைத்துக்கொள்ள விரும்புவர், புதிதாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள தீம்கள்

1.Narnia: Dawn Treader2.Winter3.Snow Angelsஇந்த தீம்கள் அனைத்துமே மிகவும் சிறப்பானதாக உள்ளது.

கணினியில் நிறுவிய மென்பொருளை ஒப்பன் ஆகாமல் தடுக்க

விண்டோஸ் ஆப்ரேட்டிங்  சிஸ்ட்டத்தில் நிறுவிய மென்பொருளை ஓப்பன் ஆகாமல் தடுக்க முடியும். அதற்கு நாம் விண்டோஸ் ரிஜிஸ்டரில் மாற்றம் செய்ய வேண்டும். அல்லது வேறு மென்பொருளை பணம் செலுத்தி பெற வேண்டும். அந்த மென்பொருள் மூலமாக அப்ளிகேஷனை அல்லது நமது கணினியில் நிறுவிய மென்பொருளை ஒப்பன் ஆகாமல் தடுக்க முடியும். நம்முடைய கணிப்பொறியில் நிறுவிய மென்பொருளை விண்டோஸ் இயங்குதளத்தில் ஒப்பன் ஆகாமல் தடுக்க பலவழிகள் உள்ளது, குறிப்பாக விண்டோஸ் ரிஜிஸ்டரில் மாற்றம் செய்வதன் மூலமாக தடுக்க முடியும். 

ஒரே கணினியை பலர் பயன்படுத்தலாம் ஆனால் குறிப்பிட்ட அந்த அப்ளிகேஷனை பிறர் பயன்படுத்த கூடாது என நினைக்கலாம், ஆனால் அந்த குறிப்பிட்ட அப்ளிகேஷனை பிறர் பயன்படுத்தவாறு தடுக்க நினைப்போம், ஆனால் அவ்வாறு நம்மால் செய்ய இயலாது. இதற்கென பல வழிகள் இருப்பினும் ஒரு சிலவற்றை கையாளும்,போது கவனம் வேண்டும் இல்லையெனில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டமே பளுதடைய வாய்ப்பு உள்ளது. எனவே கவனமாக கையாள வேண்டும். இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படாமல் கணினியில் நிறுவியிருக்கும் மென்பொருளை லாக் செய்திட முடியும். அதற்க்கு அருமையான மென்பொருள் உள்ளது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யவும். rar பைலாக இருக்கும் இதனை unzip செய்து கொள்ளவும். பின் கிடைக்கும் exe பைலின் மீது வலது கிளிக் செய்து தோன்றும் விண்டோவில் Run as administrator என்பதை தேர்வு செய்யவும், தோன்றும் விண்டோவில் Block என்பதை தேர்வு செய்து நீங்கள் எந்த அப்ளிகேஷனை லாக் செய்ய நினைக்கிறீர்களோ அதனை தேர்வு செய்து கொள்ளவும். பின் Restart Explorer என்பதை கிளிக் செய்து கொள்ளவும். வேண்டுமெனில் பாஸ்வேர்ட் உருவாக்கி கொள்ளவும்.


பின் நிங்கள் குறிப்பிட்ட அப்ளிகேஷனை அன்லாக் செய்யவோ அல்லது, இந்த மென்பொருளை ஒப்பன் செய்யவோ பாஸ்வேர்ட் இருந்தால் மட்டுமே அன்லாக் செய்ய முடியும்.


நீங்கள் லாக் செய்த மென்பொருளை ஒப்பன் செய்தால் இதுபோன்ற எரர் செய்தி வரும். இனி உங்கள் விருப்பம் போல விரும்பிய அப்ளிகேஷனை லாக் செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளானது விண்டோஸ் XP, Vista மற்றும் 7 ஆகியவற்றில் செயல்பட கூடியது ஆகும்.

நோக்கியா வீடியோ கன்வெர்ட்டர் - லைசன்ஸ் கீயுடன்

♠ Posted by Kumaresan R in
எத்தனையோ வீடியோ கன்வெர்ட்டர்கள் இருந்தாலும், ஒவ்வொன்றிலும் ஒரு குறைபாடு இருக்கிறது, அனைத்துக்கும் மேலாக இணையத்தில் இருந்து பதிவிறக்கும் மென்பொருட்கள் சில நம்பக தன்மையற்றதாக இருக்கிறது, நாம் வீடியோவினை கன்வெர்ட் செய்ய பலமென்பொருட்களை உபயோகிப்போம், குறிப்பாக மொபைல் போன்களுக்கு வீடியோவை கன்வெர்ட் செய்வது என்பது, அவ்வளவு சாதாரண் விஷயம் அல்ல நாம் 3gp மாற்றினாலும் சில வீடியோக்கள் மொபைல் போன்களில் Play ஆகாது, சில நேரத்தில் மொபைல் போனுக்கு ஒரு குறிப்பிட்ட வீடியோவை மாற்ற நினைத்து இணையத்தில் இருந்து ஒரு கன்வெர்ட்டரை பதிவிறக்கி இன்ஸ்டால் செயத பிறகு கீ கேட்டும், ஒரு சில குறிப்பிட்ட மென்பொருட்கள் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே கன்வெர்ட் செய்ய அனுமதிக்கும்.

நாம் மொபைல் போன்களுக்கென சிறப்பான ஒரு வீடியோ கன்வெர்ட்டரை தேடி பார்ப்போம், அகப்பட்ட வீடியோ கன்வெர்ட்டரை எல்லாம் கணினியில் நிறுவி பார்த்து ஏமாற்றமே மிஞ்சும். இந்த அனைத்துவிதமான தொல்லைகளையும் தாண்டி அருமையான வீடியோ கன்வெர்ட்டர் தான் நோக்கியோ வீடியோ கன்வெர்ட்டர்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி நிறுவிக்கொள்ளவும். பின் மென்பொருளை பதிய கீ கேட்டும். அப்போது கீழே உள்ள பெயர் மற்றும் கோடினை காப்பி  மென்பொருளை நிறுவிக்கொள்ளவும்.
Name:  WonderFox Giveaway
Code:  41DC2FFF3DBBE001FF40305BE5FF49C5A466FD8A

பின் நோக்கியோ வீடியோ கன்வெர்ட்டரானது, முழுமையாக உங்கள் கணினியில் பதியப்பட்டுவிடும். பின் நீங்கள் விரும்பியவாறு வீடியோவை கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். இந்த கன்வெர்ட்டர் நோக்கியோ மொபைல்களுக்கென உள்ளது ஆகும்.

அனுப்பிய ஈ-மெயில் ஓப்பன் செய்யப்பட்டதா, இல்லையா என்பதை அறிய ஒரு அரிய நீட்சி

தங்களின் கருத்துக்களை பரிமாறி கொள்ளவோ அல்லது வேறு அலுவலகம் தொடர்பான செய்திகளை பரிமாறிக்கொள்ளவோ, முக்கியமான பல்வேறு அலுவல்கள் அனைத்துமே தற்போது ஈ-மெயில் மூலமாகவே அனுப்பபட்டு பெறப்படுகிறது, முன்பெல்லாம் ஒரு செய்தியை பரிமாற்றம் செய்ய வேண்டுமெனில் தபால் மூலமாகவோ அல்லது தொலைபேசி மூலமாகத்தான் பரிமாறிக்கொள்ளும் சூழ்நிலை இருந்து வந்தது, ஆனால் தற்போதோ எந்த ஒரு செய்தியை பரிமாறிக்கொள்ள வேண்டும் என்றாலும் நாம் ஈ-மெயில் மூலமாகத்தான் பரிமாறிக்கொள்கிறோம். 

சாதாரணமாக நண்பர்களுக்கு வாழ்த்து செய்தி அனுப்புவதிலிருந்து, பெரிய அலுவல்கள் வரை அனைத்துமே ஈ-மெயில் மூலமாகத்தான் நடைபெறுகிறது, ஏனெனில் ஈ-மெயில்கள் அதிவிரைவாக செய்திகளை பரிமாறிக்கொள்ள பயன்படுகிறது. இவ்வாறு நாம் அனுப்பு ஈ-மெயிலானது பார்க்கப்பட்டதா, இல்லையா என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியாது, ஈ-மெயிலானது செல்லவில்லையெனில் மட்டுமே செய்திவரும் மற்றபடி நாம் அனுப்பிய ஈ-மெயில் திறக்கப்பட்டதா இல்லையா என்பதை நம்மால் அறிந்து கொள்ள இயலாது, இதை அறிந்து கொள்ள அருமையான நீட்சி உள்ளது, ஆனால் இந்த நீட்சியானது ஜி-மெயிலுக்கு மட்டுமே பொருந்தும்.

நீட்சியை பதிவிறக்க சுட்டி

இந்த நீட்சியானது, மொசில்லா பயர்பாக்ஸ், சபாரி, கூகுள் குரோம் போன்ற உலவிகளில், செயல்படக்கூடியது ஆகும், இந்த நீட்சியினை நிறுவிக்கொள்ளவும். பின் உங்களுடைய ஜிமெயில் முகவரியை ஒப்பன் செய்த உடன்  Email Oracle யை Allow செய்யவும். பின் நீங்கள் கம்போஸ் மெயில் சென்றவுடன் Track என்பதற்கு நேராக உள்ள செக்பாக்சில் டிக் செய்து Track Days னை குறிப்பிட்டு Send Track என்பதை கிளிக் செய்து ஈ-மெயிலை அனுப்ப வேண்டும்.பின் நீங்கள் அனுப்பிய ஈ-மெயிலானது, எப்போது ஒப்பன் செய்யப்பட்டது என்பதை அறிந்து கொள்ள TrackedEmail என்பதை தேர்வு செய்து, தெரிந்து கொள்ள முடியும். இந்த சேவையின் மூலம் மாதத்திற்கு 20 ஈமெயில்களை மட்டுமே Track செய்ய முடியும். அதற்கு மேல் Track செய்ய வேண்டுமெனில் கட்டண சேவையின் மூலமாகவே Track செய்ய முடியும். இனி நாம் அனுப்பிய ஈ-மெயில் எப்போது ஒப்பன் செய்யப்பட்டது என்பதை நம்மால் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.

அதிக அளவுடைய பைல்களை ஈ-மெயிலுக்கு அனுப்ப- Zeta Uploader

♠ Posted by Kumaresan R in
ஈ-மெயில் மூலமாக நாம் குறைந்த அளவுடைய பைல்களை மட்டுமே அனுப்ப முடியும் உதாரணமாக ஜிமெயில் மூலமாக 25MB அளவுடைய பைல்களை மட்டுமே அனுப்ப முடியும். அதற்கு மேல் சென்றால் தனித்தனி ஈ-மெயிலாக அனுப்ப வேண்டும். இல்லையெனில் நாம் கட்டண சேவையின் மூலமாக மட்டுமே அதிக அளவுடைய பைல்களை அனுப்ப முடியும். இதனால் பணம் விரயம் ஆகும். மேலும் நாம் அனுப்ப நினைக்கும் பைலானது முழுமையாக சேர வாய்ப்பு இருக்காது, சில நேரங்களில் ஹேக்கர்களால் திருடபடவும் வாய்ப்பு உள்ளது. இதுபோல பல பிரச்சினைகள் உள்ளது.

நம்மிடம் உள்ள அதிக அளவுடைய பைலினை நம்மால் இணையம் மூலமாக அனுப்ப இயலாது, அதுபோன்ற சூழ்நிலையில் ஏதாவது ஒரு தளத்தில் நம்முடைய டாக்குமெண்ட்டையோ அல்லது மென்பொருளையோ பதிவேற்றி தரவிறக்க லிங் கொடுக்கலாம் என ஒரு எண்ணம் தோன்றும். அது போன்ற சூழ்நிலையில் நாம் இணையத்தில் எதாவது ஒரு தளத்தை தேடி பிடித்து பார்த்தால் இந்த சேவை குறிப்பிட்ட அளவு மட்டுமே, முழுமையாக பெற பணம் செலுத்த வேண்டும் என்ற செய்தி வரும். இதுபோன்ற சூழ்நிலைகளையெல்லாம் சமாளிக்கும் வன்னமாக உள்ளதுதான் Zeta Uploader என்னும் மென்பொருள ஆகும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி நிறுவி கொள்ளவும். பின் நீங்கள் அனுப்ப நினைக்கு பைலினை தேர்வு செய்யவும், பின் ஈ-மெயில் முகவரியினை உள்ளிடவும். ஒன்றுக்கு மேற்பட்ட ஈ-மெயில் முகவரியினை குறிப்பிட கமா , குறிப்பிடவும், பின் எதைப்பற்றி குறிப்பிட நினைக்கிறீர்களோ அதனை Message என்ற பாக்சில் குறிப்பிடவும். பின் upload now பட்டனை அழுத்தவும் சிறிது நேரத்தில் உங்களுடைய பைலானது நீங்கள் குறிப்பிட்ட முகவரிக்கு ஈ-மெயில் மூலமாக அனுப்பபடும், அந்த லிங்கினை கிளிக் செய்து பைலை பதிவிறக்கி கொள்ள முடியும்.

குறிப்பு: அவசரமான சூழ்நிலையில் மட்டும் இந்த மென்பொருளின் உதவியை நாட வேண்டும். ஏனெனில் உங்களுடைய கோப்பானது திருடப்படவும் வாய்ப்பு உள்ளது.

அடோப் ரீடரின் புதிய பதிப்பு Adobe Reader X

♠ Posted by Kumaresan R in ,
அடோப் ரீடரின் புதிய பதிப்பான அடோப்ரீடர் X வெளியிடப்பட்டுள்ளது, இந்த புதிய அடோப் ரீடர் X ஆனது, மேலும் பல புதிய அம்சங்களுடன் வெளிவந்துள்ளது, பாதுகாப்பு அம்சங்கள் அதிகமாக உள்ளது என அடோப் நிறுவனம் அறிவித்துள்ளது. முந்தைய பதிப்புகளை விட இந்த அடோப்ரீடர்  X  ஆனது, மிகவும் சிறப்பாகவும். கூடுதல் திறனுடையதாகவும் உள்ளது. இந்த அடோப் ரீடர் மூலமாக நாம் இதுநாள் வரை pdf பைல்களை பார்க்க மட்டுமே முடிந்தது ஆனால் இந்த அடோப்ரீடர் X மூலமாக pdf பைல்களை உருவாக்கவும் முடியும் . மேலும் இந்த அடோப் ரீடர் X -ல் கூடுதலாக பாதுகாப்பு வசதியும் உள்ளது.


மென்பொருளை தரவிறக்கம் செய்ய:
Adobe Reader X  Offline Installer

இந்த அடோப் ரீடர் மூலமாக நம்முடைய பைல்களை பரிமாறிக்கொள்ளவும் முடியும். ஆன்லைன் மூலமாக Pdf பைல்களை நாமே ஆன்லைன் உதவியுடன் உருவாக்க முடியும். புகழ்பெற்ற pdf  ரீடரான அடோப் ரீடர் மிகவும் சிறப்பானதாகும், அந்த வகையில் புதிதாக வெளிவந்துள்ள Adobe Reader X  சிறப்புதன்மை வாய்ந்ததாகும்.

ஆன்லைன் கூகுள்குரோம் பெயின்ட்

கூகுள் நிறுவனம் புதிதுபுதிதாய் சேவைகளை வழங்கி வருகிறது அந்த வகையில் கூகுள் நிறுவனம் கூகுள் பெயின் என்ற மற்றுமொரு சேவையினையும் வழங்கி வருகிறது, இதன் மூலம் நாம் ஆன்லைனில் இருந்தப்படியே நம்முடைய எழுத்து மற்றும் கலர் போன்றவற்றில் புதிதாக மாற்றங்களை செய்ய முடியும், குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த  சேவை பயனுள்ளதாய் இருக்கும். இந்த சேவையின் மூலம் கூகுள் நிறுவனம் சின்னஞ்சிறு குழந்தைகளை கூட தன்பக்கம் இழுத்து வருகிறது, அது மட்டுமல்லாமல் இந்த கூரோம் பெயின் வசதியானது முக்கியமான தருணங்களில் கைகொடுக்க கூடும். இந்த தளத்தில் நாம் சாதரணமாக மைக்ரோசாப்ட் பெயின்ட்டில் நாம் என்னென்ன வேலைகளை செய்ய முடியுமோ அதை விட ஒருசில கூடுதல் வேலைகளையும் இந்த குரோம் பெயின்ட் மூலம் செய்ய முடியும்.

தளத்திற்கான சுட்டி


இந்த வசதியானது, மிகவும் சிறப்பானது ஆகும், இதன் மூலம் ஏறகனவே கூறியது போல டெக்ஸ்ட் மற்றும் கலர் போன்றவற்றை இதில் மாற்றம் செய்ய முடியும். ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள், இதனுடைய சிறப்பம்சங்களை பெற முடியும்.

கூகுள்குரோமின் Stable வெர்சன்-8 வெளியிடப்பட்டுவிட்டது

அதிவேக உலவியான கூகுள் குரோம் தனது 8 வது பதிப்பினை வெளியிட்டுள்ளது, இந்த உலவியானது முந்தைய பதிப்புகளை விட தற்போது வெளிவந்துள்ள பதிப்பானது மிகவும் வேகமாக செயல்பட கூடியது. இந்த பதிப்பில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் அடங்கியுள்ளது. மேலும் இந்த புதிய பதிப்பினை நாம் நம்முடைய பழைய உலவியில் இருந்தபடியே நிறுவிக்கொள்ள முடியும். இதனை நிறுவிக்கொள்ள Tools > About Google Chrome என்பதை தேர்வு செய்து இந்த புதிய பதிப்பினை உங்களுடைய கணினியில் நிறுவிக்கொள்ள முடியும்.


இந்த உளவியானது அதிவேகமாக செயல் பட கூடியது என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது, மேலும் இந்த உலவியில் பல்வேறு விதமான கூடுதல் சிறப்பம்சங்கள் உள்ளது.


கூகுள் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள இந்த Stable வெர்சன் பதிப்பு 8.0.552.215 ஆகும். இதில் மற்றொரு சிறப்பம்சம் என்னவெனில் Pdf Viewer ஆகும்.

மென்பொருளை தரவிறக்க:

விண்டோஸ் இயங்குதளத்திற்கு சுட்டி

மேக் இயங்குதளத்திற்கு சுட்டி

லினக்ஸ் இயங்குதளத்திற்கு சுட்டி

புரோகிராம் மொழிகளை ஆன்லைனிலேயே கம்பைல் செய்ய

கணினியை பொறுத்த வரையில் நாம் புதிதாய் மென்பொருளை உருவாக்க வேண்டுமெனில் ஒரு புரோகிராம் மொழியினை நாட வேண்டும். அவற்றை நாம் கம்பைல் செய்து பிறகு ரன் செய்த பிறகே அந்த புரோகிராமின் முடிவை அறிய முடியும். பல்வேறு விதமான புரோகிராம் மொழிகள் உள்ளன. அவற்றின் உதவியோடு மட்டுமே நாம் சிறிய அப்ளிகேஷனிலிருந்து பெரிய புரோகிராம் வரை உருவாக்க முடியும். இந்த புரோகிராம் மொழிகளின் வெளியீட்டை அறிய வேண்டுமெனில் நாம் எதாவது ஒரு கம்பைலர் வேண்டும். அப்படி இல்லாமல் இணையத்தில் இருந்தபடியே புரோகிராம்களை ரன் செய்து வெளியீட்டை அறிய முடியும்.

தளத்தின் முகவரி: http://codepad.org/
இந்த தளத்தின் உதவியுடன் நாம் புரோகிராம்களை ஆன்லைனிலேயே கம்பைல் செய்து, வெளியீட்டை அறிய முடியும். இதனால் நாம் குறிப்பிட்ட அந்த புரோகிராம் மொழியினை நம்முடைய கணிப்பொறியில் நிறுவியிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்த தளத்தின் உதவியுடன் நாம் இனி புரோகிராம்களை இணையத்தில் இருந்தப்படியே வெளியீட்டை அறிய முடியும். ஆன்லைன் மூலமாக பல்வேறு விதமான இலவச சேவைகளை பெற்று வருகிறோம் அந்த வகையில் புரோகிராம் மொழிகளையும் ஆன்லைனில் இருந்தப்படியே கம்பைல் செய்து வெளியீட்டை பெற முடியும். இந்த தளத்தில் சிறிய புரோகிராம்களும் உள்ளன. அவற்றையும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

நேரடியாக இந்த தளத்திற்கு சென்று உங்களுடைய லாங்வேஜ்யை தேர்வு செய்யவும். பின் கோடினை உள்ளீடு செய்து Submit செய்யவும் இப்போது உங்களுக்கான வெளியீடு திரையில் தோன்றும். இந்த தளமானது ஒருசில மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாய் இருக்கும்.

Bitmap - இமேஜ்களை ஐகானாக உருவாக்க்க எளிய மென்பொருள்

♠ Posted by Kumaresan R in ,
நமது கணினியில் பல்வேறு விதமான ஐகான்கள் உள்ளன, அவற்ற்றை கொண்டு நாம் நம்முடைய கணிப்பொறியை அழகு செய்ய முடியும். நாம் நம்முடைய டாக்குமெண்ட் போல்டருக்கு தனித்தனியே உரையினை இடுவோம். அவ்வாறு நமக்கு வேண்டிய உரைகளின் அடையாளம் அல்லது முழுஉரையினை வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ள முடியும். இவ்வாறு நமக்கு  வேண்டிய ஐகான்கள் எளிதில் கிடைக்காது, அதுபோன்ற சூழ்நிலைகளில் நமக்கு வேண்டிய ஐகானை நாமே உருவாக்கி கொள்ள முடியும். இதற்க்கென இணையத்தில் பல்வேறு விதமான மென்பொருட்கள் கிடைக்கிறன ஆனால் அவைகள் சிறப்பானதாக இருக்காது, மேலும் சில மென்பொருட்களால் நம்முடைய கணிப்பொறியே செயல் இழக்க நேரிடும். இது போன்ற சூழ்நிலைகள் ஏற்ப்படாமல் இருக்க நாம் மென்பொருளை  பணம் செலுத்தி பெற வேண்டும். அல்லது மென்பொருளுக்கு லைசன்ஸ் உரிமை இருக்க வேண்டும்.

இதுபோன்ற நிலை ஏற்பாடால் இணையத்தில் ஒரு அருமையான மென்பொருள் கிடைக்கிறது, அந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி நிறுவிக்கொண்டு உங்களுக்கு வேண்டிய ஐகானை நீங்களே உருவாக்கி கொள்ள முடியும்.

மென்பொருளை தரவிறக்க: சுட்டி


இந்த மென்பொருளின் மூலமாக .bmp படங்களை ஐகானாக உருவாக்கி கொள்ள முடியும். இதன் மூலம் உங்களுக்கு விருப்பமான படத்தினை ஐகானாக உருவாக்கி பயன்படுத்திக்கொள்ள முடியும். நீங்கள் உருவாக்க நினைக்கும் ஐகானானது .bmp பைலாக இருக்க வேண்டும்.

கூகுள்-குரோம் உலவியில் தேவையில்லாத வலைப்பக்கங்களை தடுக்க

கூகுள் குரோம் உலவி கூகுள் நிறுவனத்தின் உலவியாகும். இந்த உலவியானது அதிக நபர்களால் பயன்படுத்தப்படக்கூடியது ஆகும். மேலும் இந்த உலவியில் அதிகமான சிறப்பம்சங்கள் வாய்ந்த உலவியாகும். கூகுள் குரோம் உலவியில் தேவையில்லாத வலைப்பக்கங்களை தடுக்க முடியும். வீட்டு கணினியில் குழந்தைகள் இணையத்தில் உலாவரும் போது அவர்கள் பல்வேறு விதமான வலைப்பக்கங்களை பார்வையிடுவர். சில இணையதளங்கள் குழந்தைகளை அதிகமாக பாதிக்கும் அதுபோன்ற சூழ்நிலையில் தேவையில்லாத வலைப்பக்கங்களை தடுக்க முடியும்.

  • முதலில் நீங்கள் இந்த நீட்சியை உங்கள் கூகுள்-குரோம் உலவியில் நிறுவிக்கொள்ளவும் Blocker Extensions 
  • பின் Tools > Extensions என்பதை தேர்வு செய்யவும்.

பின் options என்பதை தேர்வு செய்யவும். அடுத்தாக தோன்றும் விண்டோவில்  Blocked URLs என்ற பாக்சில் வெப்சைட் முவரியை உள்ளிட்டு Save என்ற பொத்தானை அழுத்தவும் பின் Enable பட்டனை அழுத்தவும்.இப்போது நீங்கள் கூகுள்குரோம் உளவியில் நீங்கள் குறிப்பிட்ட அந்த வலைப்பக்கத்தை திறக்குபோது கீழே உள்ள விண்டோ போல தோன்றும்.


இதனை  டிசேபிள் செய்ய  Tools > Extensions என்பதை தேர்வு செய்யவும் தோன்றும் விண்டோவில் options என்பதை தேர்வு செய்து தோன்றும் விண்டோவில் Disable பட்டனை அழுத்தவும். அழுத்தியவுடன் தோன்றும் பாக்சில் கீழே தோன்றும் எழுத்தினை உள்ளிட்டு அந்த முகவரியை நீக்கி கொள்ளவும்.


நீங்கள் இனி உங்களுக்கு தேவையில்லாத வலைப்பக்கங்களை கூகுள்-குரோம் உளவியில் தடுக்க முடியும்.