தமிழில் கணினி செய்திகள்

மைகம்ப்யூட்டரில் உள்ள டிரைவ் கோலன்களை மறைக்க

♠ Posted by Kumaresan Rajendran in at May 15, 2010
ம்ப்யூட்டரில் பைலை மறைப்பது, போல்டர்களை மறைப்பது திரும்ப கொண்டு வருவது போன்ற நடைமுறை செயல்களை அன்றாடம் செய்து பார்த்திருப்பீர்கள். அதற்கும் மேலாக மைகம்ப்யூட்டரில் உள்ள ஹார்டு டிஸ்க் டிரைவ் கோலன்களை அதாவது C: (or) D: (or) E:... இப்படி கோலன்கள் இருக்குமேயானால் அவற்றில் ஏதாவது ஒரு கோலனனை எங்ஙனம் மறைப்பது என்றும், மேலும் CD-Drive Colon மற்றும் Floppy Drive Colon இடம் பெற்றிருந்தால் அவற்றை எப்படி மறைப்பது என்றும் அதுவும் மற்ற மென்பொருள் துணையில்லாமால் நம் கம்ப்யூட்டரில் புகுத்தியுள்ள ஓஎஸ்மூலம் எளிய வழியில் மறைப்பது எப்படி என்றும் பார்க்கலாம்.

முதலில் Start -> Run - ல் diskpart என்று தட்டச்சு செய்து ஓகே கொடுக்கவும்.
படம்-1 யை பார்க்கவும்.

படம்-1


பின்னர் அங்கு தோற்றமளிக்கின்ற CUI மோடில் (அதாவது Dos WIndow)
DISKPART> என்று ஒரு விண்டோ காட்சியளிக்கும் அங்கு list Volumeஎன்று தட்டச்சு செய்யவும்.படம்2-யை பார்க்கவும்.



படம்-2

தட்டச்சு செய்து என்டர் தட்டியவுடன் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஹார்டு டிஸ்க் டிரைவின் கோலன்களின் வரிசை காண்பிக்கப்படும். அந்த வரிசைகைகளில் C, D, E,F ... முறையே Volume 0,1,2 .. என்று அட்டவணை போல் காட்சியளிக்கும்.படம்3-யை பார்க்கவும்



படம்-3



அவற்றில் எந்த கோலனை மறைக்க வேண்டுமோ அவற்றின் பெயரை அதாவது Volume நம்பரை 0 அல்லது 1 அல்லது 2 ... என்று கொடுக்கவும். சான்றாக E: கோலன் என்றால் நீங்கள் அந்த DISK - PART >ல் select volume 3 என்று கொடுக்கவும். படம் ௪-யை பார்க்கவும்.




படம்-4


அதன் பின் என்டர் கி தட்டியவுடன் DISKPART> கோலன் வந்து நிற்கும். அங்கு remove E என்று செய்வதற்கு பதில் "remove" (இரட்டை குறிக்குள்) என்று தட்டச்சு செய்து என்டர் கொடுக்கவும். படம் 5-யை பார்க்கவும்.
படம்-5


மைகம்ப்யூட்டரில் E:கோலன் மறைக்கப்பட்டிருக்கும்.

Remove செய்தவுடன் ஒரு சில ஆப்பரேட்டிங் (விண்டோஸ் விஸ்ட்டா ) சிஸ்டங்ககள் Reboot ஆகும். சிஸ்டம் ரீபூட் (Reboot ) ஆகாவிட்டால் சரி நீங்கள் சிஸ்டத்தை ரீபூட் செய்து விடவும்.


நீங்கள் மறைத்துவைத்துள்ள E: கோலன் List volume ல் தெரியாது. ஆனால் அந்த வால்யும் வம்பருக்கு முன்பு ஒரு ஸ்டார் குறி பூட்டப்பட்டிருக்கும். அவற்றை பார்த்தே நாம் தெரிந்து கொள்ளலாம். E: கோலன் மறைக்கப்பட்டிருக்கின்றது என்று. இப்போது மறைத்து வைத்துள்ள கோலனை எவ்வாறு திரும்ப கொண்டு வருவது அனைவருக்கும் புதிராக இருக்கலாம். இது மிகவும் எளிது.

முதலில் Start> Run> diskpart, பிறகு List volume என்று தட்டச்சு செய்யவும். இனிமேல்தான் கவனம் தேவை . "remove" என்று தட்டச்சு செய்வதற்கு பதில் "assign" என்று கொடுக்க வேண்டும். இபோதுதான் E: கோலன் மைகம்ப்யூட்டரில் காட்சியளிக்கும். மறைக்கப்பட்ட கோலனை வந்த வழியிலும் எடுக்க இயலாது. இப்படி மறைப்பதனால் அதில் சேமித்து வைத்துள்ள தகவல்களுக்கு எவ்வித பாதிப்பும் வராது.

படம்-6

இதேபோல் தான் சிடி டிரைவ் கோலன் மற்றும் ஃப்ளாப்பி டிரைவ் கோலனுக்கும் மேற்சொன்ன வழிமுறையை பின்பற்றலாம். மறைத்த கோலனை எடுக்க ஒரு சிலர் டாஸ் ப்ராம்ப்டுக்கு போய் எடுக்க முயல்வர். ஒரு சிலர் Start> Run - ல் E: கோலன் என்று தட்டச்சு செய்து ஓகே கொடுப்பர்.



படம்-7




படம்-8


அவர்களுக்கு Error Message தான் காட்சியளிக்கும். Diskpart கட்டளை Pendrive-க்கு பொருந்தாது . இந்த நுட்பத்தை விண்டோஸ் எக்ஸ்பீ மற்றும் விஸ்ட்டாவில் பயன்படுத்தி பயன் பெறலாம்.

2 Comments:

Please add Tamilish vote button.

சும்மா கலக்குறீங்க குமரேசன்,தொடருங்கள் உங்கள் சேவையை

Post a Comment