YOUTUBE-ல் இருந்து வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய பல்வேறு விதமான வழிகள் இருப்பினும் நீங்கள் விரும்பினால் ஆன்லைனிலேயே வீடியோக்களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். அதுவும் உங்களுக்கு விருப்பமான பார்மெட்டுகளில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். நீங்கள் வேறு முறையில் YOUTUBE வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய வேண்டுமெனில் மூன்றாம் தர மென்பொருளை நாட வேண்டும். YouTube-ல் இருந்து பதிவிறக்கும் வீடியோக்கள் FLV பார்மெட்டில் இருக்கும் அதனை மாற்ற வேண்டுமெனில் அதற்கும் ஒரு மென்பொருள் தேவைப்படும்.
இதுபோல பலவேலைகள் இல்லாமல், ஆன்லைனிலேயே இருந்தபடி வீடியோவினை பதிவிறக்கி கொள்ள முடியும். அதுவும் உங்களுக்கு விருப்பமான பாமெட்டில் பதிவிறக்கி கொள்ள முடியும். உதாரணமாக நீங்கள் மொபைலில் வீடியோவை பார்க்க வேண்டுமெனில் 3gp பார்மெட் தேவைப்படும். வேண்டுமெனில் Audioவை மட்டும் தனியே டவுண்லோட் செய்து பயன்படுத்த முடியும்.
தளத்தின் முகவரி: Downloadtube
இந்த தளத்திற்கு சென்று URL யை உள்ளிட்டு விருப்பமான முறையில் வீடியோவினை பதிவிறக்கி பயன்படுத்த முடியும். நீங்கள் பயன்படுத்தும் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்திற்கு ஏற்றது போல் வீடியோவினை டவுண்லோட் செய்து பயன்படுத்தமுடியும்.
3 Comments:
பயனுள்ள தகவல் நண்பா. நன்றி
தகவலுக்கு நன்றி!
பகிர்வுக்கு நன்றி நண்பரே.
Post a Comment