தமிழில் கணினி செய்திகள்

பழைய ஆப்பிஸ் Format-களில் இருந்து OFFICE-2007 Formatக்கு மாற்றுவது எப்படி?

♠ Posted by Kumaresan Rajendran in at September 11, 2010
மைக்ரோசாப்டின் ஆப்பிஸ் தொகுப்பானது 2007 தற்போது பரவலாக பயன்படுத்தபட்டு வருகிறது. இந்த ஆப்பிஸ் தொகுப்பில் ,பழைய ஆப்பிஸ் தொகுப்பில்  உருவாகிய Document களை ஒப்பன் செய்து பார்க்க முடியும், வேண்டுமெனில் இதனை ஆப்பிஸ் 2007 தொகுப்பாக மாற்றி பயன்படுத்த முடியும். ஆப்பிஸ் 2003 ல் உருவாக்கிய ஆப்பிஸ் டாக்குமெண்ட்களை ஆப்பிஸ் 2007 தொக்குப்பாக மாற்றம் செய்வது, எப்படி என்று கீழே காண்போம்.


முதலில் ஆப்பிஸ்-2007 னை ஒப்பன் செய்து கொள்ளவும். உதாரணத்திற்கு வேர்ட்டினை ஒப்பன் செய்து கொண்டு, பழைய ஆப்பிஸ் தொகுப்பில் உருவாக்கிய பைலை ஒப்பன் செய்யவும், அப்பொழுது [Compatibility Mode] ல் பைலானது ஒப்பன் ஆகும்.


அதனை Convert செய்ய OFFICE பட்டனை அழுத்தி Convert என்ற பொத்தானை அழுத்தவும்.






இப்போது [Compatibility Mode] மறைந்து பைலானது எப்போதும் போல தோன்றும், இனி நீங்கள் பைலை SAVE செய்து கொள்ளவும்.

0 Comments:

Post a Comment