தமிழில் கணினி செய்திகள்

எரர் ரிப்போர்ட்டை Disable செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in , at September 25, 2010
தீடிரென சிஸ்டம் ஹேங் ஆகும், அப்போது CTRL+ALT+DEL கீயை அழுத்தி டாஸ்க் மேனேஜரில் பார்த்தால் ஒருசில புரோகிராம்கள் மட்டும் Not Responding என்று இருக்கும் அதுபோன்ற புரோகிராமினை ENDTASK பொத்தானை அழுத்தி END செய்வோம் அப்போது  எரர் செய்தி தோன்றும். அல்லது ஏதாவது ஒரு புரோகிராம் கிராஸ் ஆகும்போது அனைது விதமான புரோகிராமும் முடக்கப்பட்டு எரர் செய்தி தோன்றும். இந்த எரர் செய்தியை send செய்யவா அல்லது வேண்டாமா என்று கேட்கும். இதனை நாம் விருப்படி மாற்றி அமைத்து கொள்ள முடியும். வேண்டுமென்றால் குறிப்பிட்ட சில அப்ளிகேஷன்களுக்கு மட்டும் எரர் செய்தி தோன்றுவது போலவும் மற்றவற்றுக்கு அதனை Disable செய்து கொள்ளலாம். அல்லது மொத்தமாகவே எரர் ரிப்போர்ட்டை Disable செய்து கொள்ள முடியும்.


 இதை செய்ய Mycomputer மீது வலதுகிளிக் செய்து தோன்றும் POP-UP விண்டோவில் Properties என்பதை தேர்வு செய்யவும்.


அதில் Advanced என்னும் டேப்பை கிளிக் செய்யவும், அதில் Error Reporting  என்னும் பொத்தானை அழுத்தி, தோன்றும் விண்டோவில் Disableerrorreporting என்ற ஆப்ஷன் பட்டனை கிளிக் செய்து ஒகே பொத்தானை அழுத்தவும். 




இதை போன்றே எரர் ரிப்போர்ட்டை Enable செய்து கொள்ள முடியும். வேண்டுமென்றால் குறிப்பிட்ட புரோகிராம்களுக்கு மட்டும் எரர் செய்தி தோன்றும்மாறு அமைத்து கொள்ள முடியும்.

0 Comments:

Post a Comment