♠ Posted by Kumaresan Rajendran in Tips at September 24, 2010
ஒரு சில வலைப்பக்கத்தை பார்வையிடும் போது, அது நமது கணினி திரையை விட மிகவும் பெரியதாக இருக்கும். இதுபோன்ற வலைபக்கத்தை பார்வையிட நாம் Scroll Tap னை நகர்த்தி பார்வையிடவேண்டும். இது சிலருக்கு எரிச்சலுட்டும் செயலாக அமையும். இதுமட்டும் அல்லாமல் நமது கண்னிதிரை (Monitor) சிறியதாக இருந்தாலும் நமக்கு வலைபக்கம் மட்டுமல்லாமல் நமது கணினியில் ஒப்பன் செய்யும் அனைத்து விதமான அப்ளிகேஷன்களும் கணிப்பொறி திரையில் மிகபெரியதாகவே இருக்கும்.
இது போன்ற நிலைகளில் நாம் நமது விருப்பத்திற்கு எற்றது போல் கணிப்பொறி திரையை மாற்றி கொள்ள முடியும். Zoom செய்து கொண்டு கணிபொறி திரையினை நமது விருப்பம் போல் மாற்றிக்கொள்ள முடியும். இது ஒரு சில அப்ளிகேஷனில் மட்டுமே சாத்தியம் ஆகும். சிலவற்றில் இது போன்ற ஆப்ஷன்கள் கொடுக்கபட்டு இருக்காது. இது போன்ற நிலைகளிலும் நமது விருப்பம் போலவே கணினிதிரையினை மாற்றியமைத்து கொள்ள முடியும், அதற்கு CTRL கீயை அழுத்தி கொண்டு Mouse உதவியுடன் Scroll செய்து விருப்பம் போல சிறியதாக அல்லது பெரிதாக்கி பார்த்து கொள்ள முடியும்.
இது உலவிகளுக்கு மட்டுமல்லாமல் Openoffice, Msoffice போன்ற அனைத்துவித அப்ளிகேஷன்களுக்கும் பொருந்தும்.
0 Comments:
Post a Comment