தமிழில் கணினி செய்திகள்

விண்டோஸ் லைவ் & ஹாட் மெயில்களில் டெலிட் செய்யப்பட்ட Contact-களை ரீஸ்டோர் செய்வது எப்படி?

♠ Posted by Kumaresan Rajendran in , at October 25, 2010
மைக்ரோசாப்ட் நிறுவனத்தினுடைய ஈ-மெயில் சேவை ஹாட் மெயில் மற்றும் லைவ் மெயில் போன்றவை ஆகும். இந்த மெயில் சேவைகள் இலவச மெயில் சேவைகள் ஆகும். இந்த மெயில் சேவையில் நாம் பல்வேறு வித சிற்ப்பம்சங்கள் மூலமாக பயன்பெற்று வருகிறோம். மேலும் ஒரு சிறப்பு வசதியாக நாம் டெலிட் செய்த Contact முகவரிகளை மீண்டும் ரீஸ்டோர் செய்து கொள்ளும் வசதி உள்ளது. 

இந்த வசதியினை செயல்படுத்த நீங்கள் உங்களினுடைய ஈ-மெயில் முகவரியினை உள்ளிட்டு நுழைந்து கொள்ளவும், பின் CONTACTS என்னும் பட்டியினை தேர்வு செய்யவும். பின் MANAGE என்னும் இறங்குபட்டியினை கிளிக் செய்து கிடைக்கும் வரிசையில் Restore deleted contacts என்பதை தேர்வு செய்யவும்.



இனி நீங்கள் லைவ் & ஹாட் மெயில்களில் டெலிட் செய்ய Contactகளை எளிதில் ரீஸ்டோர் செய்து கொள்ள முடியும். 

குறிப்பு: ஒரு மாதத்திற்கு உள்ளாக டெலிட் செய்த Contact-களை மட்டுமே ரீஸ்டோர் செய்து கொள்ள முடியும்.

1 Comments:

எனக்கும் ஒரு ஹாட்மெயில் கணக்கு உள்ளது.. பெரிதா பாவிக்கிறதில்லை.. உங்கள் ஆக்கத்திற்கு நன்றி..

Post a Comment