தமிழில் கணினி செய்திகள்

ஜிமெயிலில் பெரிய ஈமெயில்களை கண்டறிய

♠ Posted by Kumaresan Rajendran in at October 18, 2010
கூகுள் நிறுவனத்தின் ஈ-மெயில் சேவை ஜிமெயில் ஆகும், இந்த ஜி-மெயில் சேவையினை பலரும் பயன்படுத்தி வருகிறோம். புதுமையான திட்டங்களின் மூலமாக ஜிமெயில் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. ஜிமெயிலில் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே சேமிப்பு சேவையினை வழங்குகிறது. சுமார் 7 ஜிபி வரை மட்டுமே நாம், ஆன்லைனில் சேமித்து வைத்துகொள்ள முடியும்.  
இதுபோன்ற நிலைகளில் நமது இன்பாக்சிலோ அல்லது நம்முடைய ஈ-மெயில் ஐடியில் உள்ள பெரிய ஈ-மெயில்களை அழிக்க வேண்டுமெனில் அதற்கு தனியே தேடவேண்டிய அவசியமில்லை.

இதற்கு  Find big mail என்னும்  தளம் உதவுகிறது,  இந்த தளத்தில் சென்றும் உங்கள் ஈ-மெயில் ஐடியினை உள்ளிடவும். பின் உங்களுடைய கடவுச்சொல்லை உள்ளிட்டு நுழையவும். உங்களிடைய ஈ-மெயில் முகவரிக்கு ஈ-மெயில் வந்து சேரும், அதனை கிளிக் செய்வதன் மூலமாக மூன்று விதமான LABEL-கள் உங்கள் ஈ-மெயில் முகவரியில் ADD ஆகும். ("My Big Mail", "My Really Big Mail" , "My Ultra Big Mail").



இந்த லேபிள்களை பயன்படுத்தி நமக்கு வந்திருக்கும் பெரிய ஈ-மெயில்களை கண்டறிவது மட்டுமில்லாமல், அவற்றை நமது இன்பாக்சிலோ அல்லது ஈ-மெயிலில் இருந்தோ நீக்கிவிட முடியும்.







இதன் மூலமாக உங்கள் ஈ-மெயிலில் உள்ள பெரிய ஈ-மெயில்களை எளிதாக கண்டுபிடித்து டெலிட் செய்து கொள்ள முடியும். நமது ஈ-மெயிலில் உள்ள பெரிய ஈ-மெயில்களை வகைபடுத்தி ("My Big Mail", "My Really Big Mail" , "My Ultra Big Mail"). வரைபடமாகவும் நமது முகவரிக்கே அனுப்பிவிடுவார்கள்.

தளத்தின் முகவரி: http://www.findbigmail.com/

3 Comments:

what if that site misuse my id. what is the guarantee. pls staYAWAY

மிக பயனுள்ள தகவல்!

Post a Comment