பொதுவாக ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களை நிறுவும் போது பெயரினை பதிவு செய்வது வழக்கம், பதிவு செய்து ஆகவேண்டும் என்ற ஒரு கட்டாயம் இல்லை, அப்படி பதிவு செய்தாலும் எந்த ஒரு தவறும் இல்லை, நீங்கள் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தினை நிறுவும் போது ஒனர் பெயர் ORGANISATION-னுடைய பெயர் ஆகியவற்றினை பதிவு செய்வோம். ஒருவேலை அதை நாம் தவறுதலாக பதிவு செய்து விட்டால் அதையும் நாம் மாற்றிக்கொள்ள முடியும்.
இதனை மாற்றம் செய்ய Registry Editor ரை ஒப்பன் செய்ய வேண்டும், இதனை ஓப்பன் செய்ய Start பொத்தானை அழுத்தி சர்ச் பாக்சில் Regedit.exe என்று தட்டச்சு செய்து ஒப்பன் செய்து கொள்ளவும், அல்லது WINKEY+R பொத்தானை அழுத்தி தோன்றும் விண்டோவில் regedit என தட்டச்சு செய்து Registry Editor ரை ஒப்பன் செய்து கொள்ளவும்.
Registry Editor ஒப்பன் செய்து கொள்ளவும் பின் HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows NT\Current Version என்பதை ஓப்பன் செய்யவும் . தோன்றும் விண்டோவில் RegisteredOwner and RegisteredOrganization என்பதை உங்கள் விருப்பபடி மாற்றி கொள்ளமுடியும்.
1 Comments:
மிக அருமை நண்பரே........
Post a Comment