தமிழில் கணினி செய்திகள்

விண்டோஸ்-7ல் GUEST அக்கவுண்டை எவ்வாறு எனேபில் செய்வது?

♠ Posted by Kumaresan Rajendran in ,, at October 18, 2010
விண்டோஸ்-7ல் இரண்டு விதமான அக்கவுண்ட்கள் இருக்கும், ஒன்று Administrator மற்றொன்று GUEST அக்கவுண்ட்கள் ஆகும். இதில் Guest அக்கவுண்டானது Disable லாக இருக்கும். இதனை எனேபில் செய்ய கீழ்காணும் முறையினை பின்பற்றவும்.

Start பட்டனை அழுத்தி சர்ச் பாக்சில் User Accounts என டைப் செய்து, User Account விண்டோவினை ஒப்பன் செய்யவும். அல்லது Control Panel > User accounts  என்பதை ஒப்பன் செய்யவும். தோன்றும் விண்டோவில் manage another account என்பதை தேர்வு செய்யவும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Guest அக்கவுண்ட்  ஐகானை கிளிக் செய்யவும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Turn on என்பதை தேர்வு செய்யவும். இப்போது விண்டோஸ்-7ல்   Gust அக்கவுண்டானது எனேபில் செய்யப்பட்டு இருக்கும்.


Work group-ல் எவ்வாறு Guest அக்கவுண்டை எனேபில் செய்ய:
Start பட்டனை கிளிக் செய்து சர்ச் பாக்சில் lusrmgr.msc என டைப் செய்யவும். தோன்றும் விண்டோவில் Admin பாஸ்வேர்ட் கொடுத்து Guest அக்கவுண்ட் ஐகானை கிளிக் செய்து எனேபில் செய்து கொள்ளவும்.

0 Comments:

Post a Comment