எதாவது ஒரு பெரிய டாக்குமெண்டினை டைப் செய்வோம், மறதியாக caps lock னை ஆன் செய்திருப்போம், இதனால் அதை மாற்ற முடியாமல் தவிப்போம் ஒரு சில அப்ளிகேஷன்களில், பெரிய எழுத்தில் இருந்து சிறிய எழுத்தாகவும், சிறிய எழுத்திலிருந்து பெரிய எழுத்தாகவும் மாற்றும் வசதியானது இருப்பியல்பாகவே இருக்கும். ஆனால் பெரும்பான்மையான இடத்தில் இதுபோன்ற ஆப்ஷன்கள் இருக்காது. இதுபோன்ற சூழ்நிலைகளை சமாளிக்க Case changer என்ற மென்பொருள் உள்ளது, இதன் உதவிக்கொண்டு நீங்கள் விரும்பியவாறு lowercase, UPPERCASE, TitleCase, tOgGlEcAsE போன்ற எழுத்துக்களாக மாற்றிக்கொள்ள முடியும்.
மென்பொருளை தரவிறக்க: சுட்டி
மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும், பின் அந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பிறகு எதனை மாற்ற நினைக்கிறீர்களோ அந்த டெக்ஸ்ட்டினை பேஸ்ட் செய்து கொண்டு மாற்றிக்கொள்ள முடியும்.
சிறப்பம்சங்கள்:
இந்த மென்பொருளை பயன்படுத்தி கீழ்கண்ட பார்மெட்டுகளில் உங்களுடைய டெக்ஸ்டை மாற்றிக்கொள்ள முடியும்.
- Sentence case
- lower case
- UPPER CASE
- Title Case
- tOgGlE cAsE
இந்த மென்பொருளானது மிகவும் பயனுள்ளதாகும், முக்கியமான தருனங்களில் கைகொடுக்கும்.
2 Comments:
மிகவும் பயனுள்ள மென்பொருள்
பகிர்ந்தமைக்கு நன்றி
நட்புடன்
மாணவன்
good posting
Post a Comment