தமிழில் கணினி செய்திகள்

விண்டோசில் அதிக அளவுடைய வெற்று பைல்களை உருவாக்க

♠ Posted by Kumaresan R in , at 4:04 PM
கணினியை பயன்படுத்தும் அனைவருக்குமே புதிய,புதிய சந்தேகம் எழும், அப்படித்தான்  நேற்று எனக்கும் ஒரு சந்தேகம் எழுந்தது. ஒரு கணினியில் இருந்து மற்றொரு கணினிக்கு பெரிய அளவுடைய பைல்களை மாற்றினால் எவ்வளவு நேரத்தில் மாறும், அதுவும் மிகப்பெரிய அளவுடைய பைல்களாக இருந்தால் எவ்வளவு நேரம் பிடிக்கும், இதற்கு ஒரு போல்டரை உருவாக்கு அதில் அனைத்துவித பைல்கள்/போல்டர்கள் என அனைத்தையும் காப்பி செய்து உருவாக்க வேண்டும், அப்படி இல்லாமல் ஒரே போல்டர் அல்லது பைல்ளாக இருந்தால் எவ்வளவு நல்லதாக இருக்கும், அதை ஏன் நாம் வெற்று போல்டராக உருவாக்க கூடாது என நினைத்து, இதை பற்றி கூகிளாரிடம் கூறினேன் அவர் காட்டிய வழிபடி சென்றேன், அதில் கிடைத்ததுதான் File Filler என்னும் சிறிய அளவுடைய மென்பொருள் ஆகும். 

மென்பொருளை பதிவிறக்க: File filler மென்பொருளை பதிவிறக்கி அதை ஓப்பன் செய்யவும், பின் எந்த பாத்தில் வெற்று போல்டரை உருவாக்க நினைக்கிறிர்களோ அந்த இடத்தினை தேர்வு செய்யவும். பின் வேண்டுமெனில் எந்த பைல் பார்மெட்டோ அதை தேர்வு செய்யவும். அல்லது அதனை இருப்பியல்பாக விட்டுவிடவும். அடுத்து அளவினை குறிப்பிட்டு GO பொத்தானை அழுத்தினால் சிறிது நேரத்தில் வெற்று பைலானது உருவாகி விடும். இந்த மென்பொருளானது விண்டோஸ் 2000, NT, XP , VISTA, 7 ஆகியவற்றில் இயங்கும்.

1 comments:

நன்றி நல்ல தகவல்.....

Post a Comment