தமிழில் கணினி செய்திகள்

போலிகளை அழிக்க

♠ Posted by Kumaresan R in ,
நேற்று கணினியில் உள்ள வெற்று கோப்பறைகளை எவ்வாறு நீக்குவது என்று பார்த்தோம். இன்று கணினியில் உள்ள தேவையற்ற போலி கோப்புகளை கண்டறிந்து அதனை எவ்வாறு நீக்குவது என்று பார்ப்போம். போலி கோப்புகள் என்றால் என்ன, ஒரே மாதிரியான பைல்களை மட்டுமே இதுபோல குறிப்பிடுவோம். நாம் சில நேரங்களில் தவறுதலாக ஒரே மாதிரியான பைல்களை மீண்டும், மீண்டும் காப்பி செய்து நம் கணினியில் வைத்திருப்போம். இவ்வாறு இருக்கும் கோப்புகளால் கணினியுடைய வேகம் குறையும். தேவையில்லாத கோப்புகளை அழிப்பதன் மூலமாகவும் கணினியுடைய வேகத்தை கூட்ட முடியும். 

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்து கொள்ளவும். இதில் எந்தெந்த கோப்புகளை சோதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு Search என்னும் பொத்தானை அழுத்தவும். சிறிது நேரம் நீங்கள் குறிப்பிட்ட கோப்புகள் சோதிக்கப்பட்டு முடிவுகள் தெரிவிக்கப்படும். அதில் உங்கள் விருப்பபடி போலி கோப்புகளை நீக்கி கொள்ள முடியும்.

கணினியின் நிலையை அறிய

♠ Posted by Kumaresan R in ,
கணினியில் இருக்கும் வன்பொருள்களை பொறுத்தே கணினியினுடைய வேகமும் அமையும். ஒரு சிலர் தனது கணினி ஆமை வேகத்தில் உள்ளது என்று கூறுவார்கள், ஒரு சிலரோ எனது கணினி என்னைவிட வேகமாக உள்ளது. என்று கூறுவார்கள் இதற்கு காரணம் கணினியில் இருக்கும் வன்பொருள்கள் ஆகும். மேலும் அதற்கேற்றார் போல் மென்பொருளும் சரியாக அமைய வேண்டும். சரி கணினி ஆமையோ முயலோ எதுவாக இருந்தாலும் இதை எப்படி நாம் சரியாக கணக்கிடுவது என்றால் இதற்கும் மென்பொருள்கள் உண்டு. அதில் ஒன்றுதான் NovaBench.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்து Start Benchmark Tests என்னும் பொத்தானை அழுத்தவும். சிறிது நேரம் உங்கள் கணினினுடைய RAM மற்றும் வன்பொருள்கள் சோதிக்கப்பட்டு முடிவுகள் தெரிவிக்கப்படும். மேலும் டிஸ்பிளே எந்த அளவு உள்ளது என துல்லியமாக பார்க்க முடியும். அதற்கான காட்சி படத்தையும் காண முடியும். இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள் மூலமாக நம் கணினியில் எதாவது குறையிருப்பின் அதையும் அறிந்து கொள்ள முடியும்.

கணினியில் உள்ள வெற்று போல்டர்களை நீக்க

♠ Posted by Kumaresan R in ,
வீடு என்றால் பூஜைஅறை, சமயல்அறை, படுக்கைஅறை, மற்றும் நம்முடைய வசதிக்கேற்ப தனித்தனி பகுதிகளாக வீட்டினை கட்டி வைத்திருப்போம். அதுபோல கணினியில் உள்ள தகவல்களை தனித்தனி பகுதிகளாக பிரித்து வைத்துகொள்ள நாம் பெரிதும் பயன்படுத்துவது கோப்பறை(Folder) ஆகும். இந்த கோப்பறைகளை நாம் எளிதில் உருவாக்க முடியும். புதிதாக கணினியை பற்றி கற்றுக்கொள்ளும் போது, இந்த கோப்பறை உருவாக்கத்தினை பற்றியும் தெரிந்து கொள்வோம். இவ்வாறு உருவாக்கும் போல்டர்களை நாம் முறையாக பராமரிப்பது இல்லை. எதற்காக உருவாக்கினோம் என்று கூட தெரியாமல் நம் கணினியில் பல்வேறு கோப்பறைகள் இருக்கும். ஆனால் அதைவிட பெரிய கொடுமை என்னவென்றால் வெற்றுகோப்பறைகள் பல நம்கணினியில் இருக்கும். இதனால் நம் கணினிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றாலும். நாம் எதாவது ஒரு கோப்பினை தேடும் போது, ஒவ்வொரு கோப்பறையாகதான் சென்று தேட வேண்டும், அவ்வாறு தேடும் போது இந்த வெற்றுகோப்பறைகள் நமக்கு எரிச்சலை உண்டாக்கும். வீட்டு பயன்பாடு என்றால் சரி ஆனால் அலுவலக பயன்பாடு என்றால் சொல்ல தேவையில்லை. சரி இவ்வாறு இருக்கும் வெற்று போல்டர்களை நாம் ஒவ்வொன்றாக தேடி நீக்க வேண்டும் என்றாலும் அதுவும் சலுப்பூட்ட கூடிய விஷயம்தான், ஆனால் இதுபோன்ற வெற்று கோப்பறைகளை அழிக்க ஒரு இலவச மென்பொருள் உள்ளது.

மென்பொருளை தரவிறக்க சுட்டிமென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் Open Folder என்னும் பொத்தானை அழுத்தி எந்த ட்ரைவினை (C: D: E: ) குறிப்பிட்டு ஒகே செய்யவும். சிறிது நேரத்தில் ஸ்கேன் செய்யப்பட்டு வெற்று கோப்பறைகள் பட்டியலிடப்படும். அதை தேர்வு செய்து Delete Checked From Disk என்னும் பொத்தானை அழுத்தி நீக்கி கொள்ளவும். இதே முறையை பின்பற்றி கணினியில் உள்ள அனைத்து வெற்று கோப்பறைகளையும் நீக்கி கொள்ள முடியும். இதன் மூலம் மேலும் உங்கள் கணினியை நீங்கல் அழகுபடுத்த முடியும்.

ஒரே நேரத்தில் மூன்று உலவிகளில் உலாவ

இணையதளங்களை வலம்வருவதற்கு அனைவராலும் பயன்படுத்தப்படுவது உலவிகள் மட்டுமே ஆகும். இதற்கு மாற்றாக எதுவும் இல்லை. எனினும் இணைய பயன்பாட்டு அப்ளிகேஷன்கள் ஒரு சில உண்டு. இவையும் உலவிகளில் வடிவிலேயேதான் இருக்கும். இவை இரண்டுக்கும் அதிக வித்தியாசம் ஒன்றும் பெரிதாக இல்லாவிட்டாலும், ஒருசில வசதிகள் இதுபோன்ற அப்ளிகேஷன்களில் உண்டு. அந்த வகையில் Multibrowser என்னும் மென்பொருள் வாயிலாக, ஒரே நேரத்தில் மூன்று உலவிகளில் பணியாற்ற முடியும். அவை இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 7.0, 8.0, 9.0, நெருப்புநரி உலவி மற்றும் கூகுள் குரோம் உலவி போன்றவை ஆகும். 

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். இதில் இருக்கும் அட்ரஸ்பாரில் இணையதள முகவரியினை உள்ளிடவும். பின் என்டர் கீயினை அழுத்தவும். தற்போது நீங்கள் குறிப்பிட்ட வலைத்தளத்தினை காணமுடியும். பின் நீங்கள் உலவிகளை தேர்வு செய்து அதற்கிடையேயுள்ள மாற்றத்தினை காண முடியும். மேலும் மூன்று உலவிகளிலும் நீங்கள் குறிப்பிட்ட வலைப்பக்கத்தினை ஒரேஇடத்தில் காண முடியும்.

வலைப்பக்கத்தினை சேமிக்க (பிடிஎப் மற்றும் இமேஜ்) பார்மெட்களில்

வலைப்பக்கங்கள் பொதுவாக HTML பைல் பார்மெட்டில் மட்டுமே இருக்கும். இதனை நாம் பிடிஎப் மற்றும் இமேஜ் பைல் பார்மெட்களில் சேமித்து வைத்துக்கொள்ள முடியும். இதனை நாம் நெருப்புநரி மற்றும் குரோம் உலவிகளில் செய்ய முடியும். பிடிஎப் மற்றும் இமேஜ் பைல்களாக மாற்றுவதால் நாம் இதனை உலவிகளின் துணை இல்லாமலே காண முடியும். இந்த நீட்சியில் மூலம் நாம் வலைப்பக்கத்தில் உள்ள எழுத்து, படம் போன்றவற்றை இணைத்தோ இல்லையெனில், வெறும் எழுத்துக்களை மட்டுமோ தனியாக சேமித்துக்கொள்ள முடியும். 

நெருப்புநரி உலவிக்கான நீட்சி

குரோம் உலவிக்கான நீட்சிஇந்த நீட்சிகளை குறிப்பிட்ட உலவிகளில் நிறுவிக்கொள்ளவும். பின் உலவிகளை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். தற்போது நீட்சிக்கான சுட்டி உங்கள் உலவியில் இணைக்கப்பட்டிருக்கும். அதை பயன்படுத்தி எந்த வலைப்பக்கத்திற்கு சென்றாலும், அந்த வலைப்பக்கத்தினை பிடிப் மற்றும் இமேஜ் பைல் பார்மெட்களில் சேமித்து வைத்துக்கொள்ள முடியும். இந்த நீட்சியின் மூலம், நாம் இமேஜ் பைல்களை JPEG, PNG, GIF, BMP மற்றும் பல்வேறு பைல் பார்மெட்களில் சேமித்துக்கொள்ள முடியும். பிடிஎப் பைல்களை A4, A3, Legal, B10 மற்றும் பல்வேறு பைல்பார்மெட்களில் சேமித்துக்கொள்ள முடியும். நெருப்புநரி உலவியில் நீட்சிக்கான ஐகான் தெரியவில்லையெனில் Ctrl + / கீகளை ஒருசேர அழுத்துவதன் மூலம் காணமுடியும். இல்லையெனில் View > Toolbars > Add-on Bar வழியாகவும் இந்த நீட்க்காண ஐகானை காண முடியும். இதில் உள்ள குறைபாடு என்னவெனில் ஒருசில தமிழ்வலைப்பக்கங்களை மட்டுமே சரியாக சேமிக்க முடியவில்லை. ஆனால் மற்ற அனைத்து வலைப்பக்கங்களையும் எளிமையாக சேமிக்க முடியும்.

லைவ் சீடி மற்றும் பூட்டபிள் பெண்ட்ரைவ்களை சோதிக்க

♠ Posted by Kumaresan R in ,,
இணையத்தில் இருந்து பதிவிறக்கப்படும் இயங்குதளங்கள் பலவும், ஐஎஸ்ஒ (ISO) பைல் பார்மெட்டில் மட்டுமே இருக்கும். இந்த ஐஎஸ்ஒ (ISO) பைல்களை நாம் போர்ட்டபிள் பைல்களாக மாற்றிய பின்புதான் பயன்படுத்த முடியும். இதனை எதாவது ஒரு பர்னிங் டூல் கொண்டு மட்டுமே போர்ட்டபிள் பைலாக மாற்ற வேண்டும். இவ்வாறு மாற்றிய பின்புதான் இவற்றில் உள்ள சிறப்பம்சங்கள் என்னவென்று நம்மால் பயன்படுத்த முடியும். குறிபிட்ட ஐஎஸ்ஒ பைலின் சிறப்பம்சங்களை முழுமையாக பயன்படுத்த வேண்டுமெனில் நாம் அதை பூட்டபிள் பைலாக மாற்றிய பின்புதான் முடியும். நேரடியாக ஐஎஸ்ஒ பைல்களை சோதிக்க Vmware, Virtual machine போன்ற எதாவது ஒரு மென்பொருளின் உதவியை நாடி பின்புதான் பயன்படுத்த முடியும். இவை அளவில் பெரியது ஆகும். மேலும் இவற்றை கணினியில் நிறுவிய பின்புதான் பயன்படுத்த முடியும். பூட்டபிள் பெண்ட்ரைவ், சீடி/டிவீடி மற்றும் ஐஎஸ்ஒ பைல்களை சோதிக்க ஒரு இலவ்ச போர்ட்டபிள் மென்பொருள் உள்ளது. இது அளவில் சிறியது ஆகும். லைவ் சீடிக்களை நேரடியாக விண்டோஸ் இயங்குதளத்தில் இருந்தபடியே பயன்படுத்த இந்த மென்பொருள் மிகவும் உதவியாக இருக்கும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி

மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கொள்ளவும். பின் அந்த போர்ட்டபிள் மென்பொருளின் மீது வலது கிளிக் செய்து தோன்றும் விண்டோவில் Run as administrator என்பதை தேர்வு செய்யவும்.


பின் தோன்றும் விண்டோவில் Right-Click menu என்பதை கிளிக் செய்யவும். தற்போது MobaLiveCD முழுமையாக நிறுவப்படும்.


பின் உங்கள் விருப்ப முறைகளை தெரிவு செய்யவும். Run the LiveCD அல்லது Run the LiveUSB என்பதை தெரிவு செய்யவும். 


பின் ஐஎஸ்ஒ பைலையோ அல்லது, லைவ் சீடியினையோ தேர்வு செய்யவும். தற்போது MobaLiveCD பைல் சேமிக்கப்படவேண்டிய இடத்தை தெரிவு செய்து கொள்ளவும்.அவ்வளவுதான் தற்போது நீங்கள் குறிப்பிட்ட பைல் இயங்க தொடங்கும். நீங்கள் சீடியில் உள்ள பைலை தேர்வு செய்வதே சிறந்தது.


இனி நீங்கள் இதை எளிகையாக பயன்படுத்த முடியும். Ctrl + Alt கீகளை அழுத்துவதன் மூலம் QEMU விண்டோவில் உங்களால் பயணிக்க முடியும். பயன்படுத்தி பாருங்கள். எளிமையாக இருக்கும். இயங்குதளத்தை நிறுவ கற்றுகொள்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.

ஹார்ட்டிஸ்கினை தனித்தனி பகுதிகளாக பிரிக்க

♠ Posted by Kumaresan R in ,
கணினியில் இயங்குதளத்தினை நிறுவும்போதே தனித்தனி பகுதிகளாக வன்தட்டினை பிரித்திருப்போம். ஒரு சிலர் இயங்குதளத்தை நிறுவும் போது முறையாக வன்தட்டினை பிரிக்காமல் விட்டுவிடுவார்கள். அதாவது C: மட்டுமே பிரித்து வைத்திருப்பர், அதனால் ஒன்றும் பிரச்சினை இல்லை. எனினும் கோப்புகளை முறையாக கையாள முடியாது. எனவே வன்தட்டினை தனித்தனி பகுதிகளாக பிரித்து வைத்திருப்பதே சிறந்தது. வன்தட்டினை தனித்தனி பகுதிகளாக பிரிக்க நம்முடைய ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்திலேயே வழி உள்ளது. ஆனால் அதில் ஒரு சில வசதிகள் குறைவாக உள்ளது. வன்தட்டினை முறையாக பிரிக்கவும். பிரித்த வன்தட்டில் மாற்றங்கள் செய்யவும், இணையத்தில் பல்வேறு மென்பொருள்கள் கிடைக்கிறன. அதில் ஒன்றுதான் இந்த Aomei Dynamic Disk Manager.

மென்பொருளை தரவிறக்க சுட்டிஇந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் பதிந்து கொள்ளவும். பின் வேண்டியபடி வன்தட்டினை முறைப்படுத்தி கொள்ளவும். இந்த மென்பொருள் பீட்டா பதிப்பாகும். மேலும் இந்த மென்பொருள் மூலம் ஏற்கனவே பிரித்த பகுதியையும் மாற்றியமைத்துக்கொள்ள முடியும். இந்த பீட்டா வெர்சன் ஜீலை 31 வரை மட்டுமே. முழுபதிப்பும் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலைப்பூ மற்றும் வலைதளத்திற்கான கூகுள் + விட்ஜெடினை பெற

♠ Posted by Kumaresan R in ,
இணைய உலகில் தற்போது பரபரப்பாக பேசப்படும் செய்தி கூகுள்+ ஆகும். இதன் மூலம் மிக விரைவாக நம் நண்பர்களுடன் தகவல்களை பறிமாறிக்கொள்ள முடியும். இந்த வசதி முகநூல் சேவைக்கு எதிராக தொடங்கப்பட்டது ஆகும். இந்த வசதி இவ்வளவு பெரிய வளர்ச்சி பெறும் என்று கூகுள் நிறுவனமே எதிர்பார்த்திருக்காது. அந்த அளவிற்கு கூகுள்+ சேவை பிரபலம் அடைந்துள்ளது.  இந்த சேவையின் மூலம் நம்முடைய கருத்தினை நம்முடைய நண்பர்களுக்கு மிகவும் எளிதில் கொண்டு சேர்க்க முடியும். இதற்கு நாம் நம்முடைய நண்பர்களின் கூகுள்+ டன் இணைந்திருத்தல் அவசியம். நம்முடைய நண்பர்களையோ வாசர்களையோ விரைவாக நம்முடைய கூகுள்+ல் கணக்கில் இணைக்க ஒரு எளிமையான வழிதான் கூகுள்+ விட்ஜெட் ஆகும். கூளுள்+ விட்ஜெட் உங்களுடைய வலைப்பூ மற்றும் வலைத்தளத்தில் இணைக்க வேண்டும். 

கூகுள்+ விட்ஜெட்டை இணைக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று Get widget என்னும் பொத்தானை அழுத்தவும். பின் உங்களுடைய கூகுள்+ ஐடினை கொடுக்கவும். பின் வேண்டிய மாற்றங்களை செய்து கொள்ளவும். அகலம், உயரம், நிறம் போன்றவற்றை நம்முடைய விருப்பபடி மாற்றிக்கொள்ளவும். பின் Get Code என்னும் பொத்தானை அழுத்தவும்.

உங்களுடைய கூகுள்+ ஐடியினை பெற சுட்டி


பின் உங்களுடைய கூகுள்+ கோடினை காப்பி செய்து, வலைதளம் அல்லது வலைப்பூவில் இணைத்துக்கொள்ளவும். வலைப்பூவில் சாதாரண விட்ஜெட்டை இணைப்பது போலவே இணைத்துக்கொள்ள முடியும். அதற்கு உங்களுடைய பிளாக்கர் கணக்கில் நுழைந்து கொள்ளவும். பின் Dashboard > Dashboard > Page Elements > Add a Gadget > HTML/JavaScript Add என்பதை அழுத்தி கோடினை பேஸ்ட் செய்து சேமித்துக்கொள்ளவும். தற்போது உங்களுடைய வலைப்பூவினை பார்க்கவும். 


உங்களுடைய கூகுள்+ இணைந்திருக்கும். அதை பயன்படுத்தி உங்கள் நண்பர்களோ, வாசகர்களோ உங்கள் கூகுள்+ல் எளிதில் சேர முடியும். இந்த பதிவு பதிவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என நினைக்கிறேன்.

கணினியை பற்றி துல்லியமாக முழுவிவரங்களை அறிய

♠ Posted by Kumaresan R in ,
கணினியை பயன்படுத்தும் அனைவருக்கும், கணினியை பற்றி முழுமையாக தெரிந்திடாது. ஒரு சிலருக்கு தன்னுடைய கணினியில் என்னென்ன ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர்கள் இருக்கின்றன என்று தெரியாது. ஒரு சில நேரங்களில் தன்னுடைய நண்பர்கள் அவர்களுடைய கணினியை பற்றி கேட்பார்கள் அப்போதுதான் அவசரம் அவசரமாக தன்னுடைய கணினியில் என்னென்ன ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர்கள் இருக்கின்றன என்று ஆராய்ந்து பார்ப்போம். இவற்றை நாம் தெளிவாகவும் காண முடியாது. விவரங்கள் அனைத்தும் ஒரே இடத்திலும் கிடைக்காது. இதுபோன்ற சிக்கல்களை தீர்க்கவும், கணினியை பற்றிய முழுவிவரங்களையும் அறிய ஒரு இலவச மென்பொருள் உதவி செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த மென்பொருளை ஒப்பன் செய்யவும். இதில் தனித்தனி பகுதிகள் உள்ளன. அதன்படி கணினியில் என்னென்ன ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர்கள் உள்ளன என்பதை மிகவும் தெளிவாக காண முடியும். மிகவும் துல்லியமாக கணினியின் விவரங்களை காண முடியும்.

அவாஸ்ட் இண்டர்நெட் செக்யூரிட்டி இலவசமாக

♠ Posted by Kumaresan R in ,
வைரஸ்களின் தொல்லைகளில் இருந்து நமது கணினியை காப்பாற்ற அனைவரும் எந்த நிறுவனத்துடைய ஆன்டிவைரஸ் மென்பொருளையாவது பயன்படுத்தி வருவோம். ஒருசிலர் மட்டுமே பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்துவோம் ஆனால் பெரும்பாலானோர் இணையத்தில் இருந்து ட்ரையல் ஆன்டிவைரஸ் மென்பொருள்களை பயன்படுத்தி வருவோம். அவ்வபோது ஒரு சில ஆன்டிவைரஸ் நிறுவனங்கள் தங்களுடைய மென்பொருளை மேன்மைபடுத்துவதற்காக ஒரு சில நாடுகளில் இலவசமாக தருகிறனர். அந்த வகையில் அவாஸ்ட் தற்போது இலவசமாக இண்டர்நெட் செக்யூரிட்டி மென்பொருளை அளிக்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளவும். லைசன்ஸ் கீயும் அதன்னுள்ளேயே இருக்கும். இன்ஸ்டால் செய்யும் போது லைசன்ஸ் கீக்கான பைலை உள்ளிட்டு மென்பொருளை முழுமையாக நிறுவிக்கொள்ளவும். சாதாரணமாக இந்த மென்பொருளின் சந்தை விலை $39.99 ஆகும். இந்த அவாஸ்ட் ஆன்டிவைரஸ் மென்பொருளானது நம்முடைய கணினியை வைரஸ்களிடம் இருந்து முழுமையாக காபாற்ற கூடியது ஆகும்.

விண்டோஸ்-7ல் கிளாசிக் ஸ்டார்ட் மெனு

♠ Posted by Kumaresan R in ,
விண்டோஸ்-7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டம் முன்பு இருந்த விஸ்டோஸ் விஸ்டா, எக்ஸ்பியினை  விட பன்மடங்கு மேம்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டது. இதில் இருக்கும் ஸ்டார்ட் மெனுகூட சற்று மேம்படுத்தப்பட்டு இருந்தது. இந்த மெனுவினை கணினிக்கு புதியவர்களால் எளிதில் பயன்படுத்த முடியாது. அவர்களால் வேகமாக விண்டோஸ் 7 இயங்குதளத்தில் பணியாற்றவும் முடியாது. இந்த குறைபாட்டினை தீர்க்க ஒரு மென்பொருள் உதவி செய்கிறது. இந்த மென்பொருள் மூலமாக கிளாசிக் மெனுவினை எளிதில் பெற முடியும். சாதாரணமாக உள்ள விண்டோஸ்7 மெனு.மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தில் உதவியுடன் பதிவிறக்கம் செய்யவும். பின் இந்த ஜிப் பைலை அன்ஜிப் செய்து கொள்ளவும். இது ஒரு போர்ட்டபிள் மென்பொருள் ஆகும். ஆகையால் இந்த மென்பொருளை ஒப்பன் செய்தாலே போதுமானது. ஆனால் கணினியை மறுதொடக்கம் செய்கையில் மீண்டும் பழைய நிலைக்கே வந்துவிடும் என்பது குறிப்பிடதக்கது. இது ஒரு இலவச மென்பொருள் ஆகும்.

வீடியோக்களை MP3 மற்றும் MP4 பார்மெட்களில் பதிவிறக்கம் செய்ய

வீடியோக்களை தரவிறக்கம் செய்ய வேண்டும் என்றால், நாம் அனைவரும் நாடிச்செல்வது யூடியூப் தளம் ஆகும். ஆனால் இந்த தளத்தில் உள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்ய எதாவது ஒரு மூன்றாம் தர மென்பொருளையோ அல்லது நீட்சிகளின் உதவியை நாடிச்செல்ல வேண்டும். அவ்வாறு இல்லாமல் சாதாரணமாக ஆன்லைனில் இருந்து நேரடியாகவே வீடியோவினை பதிவிறக்கம் செய்ய முடியும். இதற்கு Clip.Dj என்னும் தளம் உதவி செய்கிறது. இந்த தளத்தில் எந்தவித மூன்றாம்தர மென்பொருளின் உதவியும் இல்லாமல் நேரடியாகவே வீடியோவினை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

தளத்திற்கான சுட்டிபின் சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று குறிப்பிட்ட வீடியோவிற்கான குறிச்சொல்லை இட்டு தேடவும். பின் விருப்பமான வீடியோவை பதிவிறக்கம் செய்ய Download என்னும் பொத்தானை அழுத்தவும். இந்த வீடியோக்களை MP3 மற்றும் MP4 பார்மெட்களில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.


ஆன்லைனில் இருந்தபடியே பாடலை MP3 யாகவும், MP4கவும் கேட்க முடியும். மேலும் பதிவிறக்கிய வரிசைப்பட்டியலை நம்முடைய விருப்பபடி மாற்றியமைத்துக்கொள்ளவும் முடியும்.

படங்களை முன்னோட்டம் பார்க்க - Fast Preview

நம்முடைய கணினியில் என்னற்ற படங்களை வைத்திருப்போம் அவற்றை பற்றிய விவரங்கள் அறிய வேண்டுமெனில் நாம் அதன் ப்ராபட்டிஸ்யை பார்த்து மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். அதுவும் அவ்வளவாக தெரிந்து கொள்ள வாய்ப்பு இருக்காது.ஒரு குறிப்பிட்ட அளவு விவரங்களை மட்டுமே காண முடியும். படங்களை முன்னோட்டம் பார்க்க வேண்டுமென்றாலும் அதனை ஒப்பன் செய்து மட்டுமே பார்க்க வேண்டும். படங்களின் முழுவிவரங்களை அறிந்து கொள்ள் Fast Preview என்னும் மென்பொருள் உதவி செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒரு முறை கணினியை மறுதொடக்கம் செய்து கொண்டு, பின் வேண்டிய படத்தின் மீது வலது கிளிக் செய்து தோன்றும் விண்டோவில் போட்டோவினை ப்ரிவியூ பார்த்துக்கொள்ள முடியும். படத்தின் ப்ராபட்டிஸ்யை தேர்வு செய்து, பின் FastPreview என்னும் டேப்பினை அழுத்தி குறிப்பிட்ட படத்தினுடைய முழுவிவரங்களையும் அறிந்து கொள்ள முடியும்.


படங்களின் விவரங்களை முழுமையாக அறிந்து கொள்ள இந்த மென்பொருள் மிகவும் உதவியாக இருக்கும். இந்த மென்பொருள் அளவில் சிறியதாகும். மேலும் இது இலவச மென்பொருள் ஆகும்.

பிளாகரில் புதிய வசதி - Favicon யை மாற்றம் செய்ய

♠ Posted by Kumaresan R in
பிளாக்கரை மேம்படுத்தும் விதமாக கூகுள் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள வசதிதான் Favicon ஐகானை நமது விருப்பபடி மாற்றியமைத்துக்கொள்வது ஆகும். முன்பெல்லாம் Favicon யை மாற்றம் செய்யம் வேண்டுமெனில் HTML கோடில் எடிட் செய்து Faviconக்கான கோடினை உள்ளினைக்க வேண்டும். இதனால் பலர் Favicon யை மாற்றம் செய்யாமல் உள்ளதே போதும் என்று வைத்திருந்தனர். சிலருக்கு அலுப்பு ஏன் இதை மாற்றி என்ன ஆக போகிறது என்று. Favicon ஐகான் நம்முடைய தளத்திற்கான அடையாளம் ஆகும். இதனை மாற்றம் செய்ய முன்புபோல அவஸ்த்தை படவேண்டிய அவசியம் இல்லை. இதனை பிளாக்கரிலேயே மிகவும் எளிமையாக செய்ய முடியும். இதற்கு முதலில் நீங்கள் உங்களுடைய பிளாக்கர் கணக்கில் நுழையவும். பின் Design > Page Elements என்னும் வரிசையில் தேர்வு செய்யவும்.


பின் Favicon என்னும் தேர்வினை அழுத்தவும். தற்போது தோன்றும் விண்டோவில் உங்களுக்கு வேண்டிய படத்தை தேர்வு செய்யவும். படமானது 100 கே.பி க்குள் இருக்க வேண்டும். பின் Save என்னும் பொத்தானை அழுத்தி சேமித்துக்கொள்ளவும்.


பின் ஒரு முறை உங்களுடைய கணக்கை மூடிவிட்டு, உலவியினை ஒருமுறை மறுதொடக்கம் செய்துவிட்டு, தற்போது உங்களுடைய வலைப்பூவினை திறக்கவும். நீங்கள் குறிப்பிட்ட படமானது Favicon கானாக இருக்கும். 


இது ஏற்கனவே பலருக்கு தெரிந்திருக்கலாம். எனினும் இந்த பதிவு புதியவர்களுக்காக மட்டுமே ஆகும்.

பேஸ்புக்கில் உள்ள போட்டோக்களை பிகாசாவில் பதிவேற்ற - குரோம் நீட்சி

பேஸ்புக் தளமானது தற்போது உலகளவில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கூகுளை மிஞ்சும் அளவிற்கு இதில் வாடிக்கையாளர்கள் பெருகிவிட்டனர். பிகாசா தளம் தற்போது கூகுள் நிறுவனத்திடம் உள்ளது. இந்த தளம் மூலம் கூகுள் கணக்குடைவர்கள் இந்த தளத்தில் பதிவேற்றி கொள்ள முடியும். கூகுள் கணக்கில் பதிவேற்றும் போட்டோக்கள் அனைத்தும் பிகாசாவிலேயே பதிவேற்றப்படும். நம்முடைய போட்டோக்களை பெரும்பாலும் பேஸ்புக் தளத்திலேயே நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வோம். இவ்வாறு முகநூலில் பகிர்ந்து கொண்ட உங்களுடைய போட்டோக்களை வேண்டுமெனில் பிகாசாவில் பதிவேற்றம் செய்து கொள்ள முடியும். பேஸ்புக் கணக்கில் உள்ள போட்டோக்களை பிகாசா தளத்தில் பதிவேற்ற குரோம் நீட்சி ஒன்று உதவி செய்கிறது. 

Move2Picasa குரோம் நீட்சி சுட்டியில் குறிப்பிட்ட நீட்சியை குரோம் உலவியில் பதிந்து கொள்ளவும். பின் ஒருமுறை குரோம் உலவியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். தற்போது உங்களுடைய பேஸ்புக் கணக்கு மற்றும் கூகுள் கணக்கினை குரோம் உலவியில் திறந்து வைத்துக்கொள்ளவும். தற்போது Move2Picasa என்னும் ஐகானை அழுத்தவும். 


தற்போது தோன்றும் விண்டோவில் உங்களுடைய பேஸ்புக் கணக்கில் உள்ள போட்டோக்கள் வரிசைப்படுத்தப்படும். வேண்டிய போட்டோவினை தேர்வு செய்துவிட்டு பின் Upload என்னும் பொத்தானை அழுத்தவும். 


இணைய வேகத்தை பொறுத்து உங்களுடைய போட்டோக்கள் ஒன்றன்பின் ஒன்றாக பதிவேற்றப்படும். பின் சிலமணி நேரங்களில் உங்களுடைய போட்டோக்கள் அனைத்தும் பதிவேற்றப்பட்டுவிடும். தற்போது உங்களுடைய பிகாசா கணக்கில் பேஸ்புக் கணக்கில் நீங்கள் குறிப்பிட்ட போட்டோக்கள் அனைத்தும் பதிவேற்றப்பட்டுவிடும்.

ஆடியோ சீடியில் இருந்து பாடல்களை பிரித்தெடுக்க

♠ Posted by Kumaresan R in ,,
ஆடியோ சீடியில் உள்ள பாடல்களை தனியே பிரித்தெடுக்க வேண்டுமென்றால் அது முடியாத விஷயமாக இருக்கும். ஆடியோ சீடிக்களை ட்ரைவில் இட்டு பார்த்தால் 1,2 கேபி அளவுள்ள பைல்களை மட்டுமே நம்மால் காணமுடியும். அந்த பைல்களை மட்டுமே நம்மால் பிரித்தெடுக்கவும் முடியும். ஏன் இதற்கு வேறு வழியே இல்லையா, ஆடியோ சீடியில் இருந்து பாடல்களை பிரித்தெடுக்கவே முடியாத என்றால், கண்டிபாக பாடல்களை தனியே பிரித்தெடுக்க முடியும். இதற்கு பல்வேறு மென்பொருள் உதவி செய்கிறன. இவற்றில் பல பணம் கொடுத்து பெற வேண்டும். அந்த வகையில் ஆடியோ சீடியில் இருந்து பாடல்களை பிரித்தெடுக்க அதிகமாக பயன்படுத்தப்படும் மென்பொருள் Mp3 to Ringtone Gold. இந்த மென்பொருளை இலவசமாக நாம் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். ஆடியோ சீடியில் இருந்து பாடல்களை பிரித்தெடுக்க இலவசமாக ஒரு மென்பொருள் உள்ளது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒருமுறை கணினியை மறுதொடக்கம் செய்து கொண்டு பின் இந்த மென்பொருளை ஒப்பன் செய்யவும். இப்போது ட்ரைவில் சீடியினை உள்ளிடவும். தற்போது பாடல்களை இந்த மென்பொருள் வாயிலாக காண முடியும். இப்போது வேண்டிய பாடல்களை தேர்வு செய்துகொண்டு, பாடல்கள் சேமிக்கபடவேண்டிய இடத்தை குறிப்பிடவும். தற்போது வெளியீட்டு பார்மெட்டையும் தேர்வு செய்யவும். தற்போது Convert என்னும் பொத்தானை அழுத்தவும்.


சில மணி நேரங்களில் பாடல்களை கன்வெர்ட் செய்யப்பட்டு, நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் சேமிக்கப்பட்டிருக்கும். அதை நீங்கள் வழக்கம் போல் பயன்படுத்தி கொள்ள முடியும். இதனால் ஆடியோ சீடிக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது.

போட்டோக்களை மெறுகேற்ற - சிறந்த 10 தளங்கள்

வணக்கம் நண்பர்களே நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் உங்களை சந்திக்கிறேன். இன்று நாம் பார்க்க போவது படங்களுக்கு எவ்வாறு கூடுதல் அழகு சேர்ப்பது என்றுதான், படங்களை அழகூட்டுவது என்றவுடன் போட்டோசாப் அல்லது எதாவது மூன்றாம் தர போட்டோ எடிட்டிங் மென்பொருளை பயன்படுத்தபோவதில்லை. இதனை நாம் ஆன்லைன் உதவியுடன் செய்யப்போகிறோம். இணையத்தில் போட்டோக்களுக்கு அழகூட்ட பல்வேறு தளங்கள் உள்ளன. அவற்றில் சிறந்த பத்து தளங்களை தான் இங்கே வரிசை படுத்த போகிறேன்.  
சுட்டியில் குறிப்பிட்டுள்ள தளங்களுக்கு சென்று உங்களுக்கு வேண்டிய டிசைனை தேர்வு செய்யவும். பின் உங்களுடைய படத்தினை பதிவேற்றம் செய்யவும். தற்போது நீங்கள் குறிப்பிட்ட போட்டோ, நீங்கள் தேர்வு செய்த டிசைனோடு இணைந்து இருக்கும். அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். இதன் மூலம் எளிமையாக உங்களுடைய படத்திற்கு அழகூட்ட முடியும்.
இப்போது நீங்கள் குறிப்பிடும் அளவிலும் படத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். மேலும் இது போன்று உருவாக்கு படங்களை நாம் எளிதில் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். மணி கணக்கில் உட்கார்ந்து போட்டோசாப் அல்லது போட்டோ எடிட்டிங் மென்பொருளில் செய்யும் வேலை ஆன்லைனில் சிலமணி துளிகளில் செய்துவிட முடியும். இதனால் நமக்கு நேரம் மிச்சமாகும். மேலும் நாம் விரும்பிய வடிவங்களில் படத்தினை உருவாக்கி கொள்ள முடியும்.