தமிழில் கணினி செய்திகள்

ஆன்லைனில் போட்டோசாப் டாக்குமெண்டை கன்வெர்ட் செய்ய

♠ Posted by Kumaresan R in , at 10:19 PM
போட்டோசாப்ட் கோப்பினை திறக்க வேண்டுமெனில் போட்டோசாப் மென்பொருள் கணினியில் நிறுவியிருந்தால் மட்டுமே திறக்க முடியும். சாதரணமாக போட்டோ எடிட்டர் மென்பொருள்களில் திறக்க முடியாது. சாதாரண போட்டோ எடிட்டர் மென்பொருளில் போட்டோசாப் டாக்குமெண்டை திறக்க வேண்டுமெனில், அதனை வேறொரு பார்மெட்டாக கன்வெர்ட் செய்தால் மட்டுமே முடியும். இவ்வாறு கன்வெர்ட் செய்வதால் போட்டோசாப் மென்பொருள் துணை இல்லாமலையே அந்த போட்டோசாப் கோப்பினை திறக்க முடியும். இணையத்தின் உதவியுடன் இந்த கன்வெர்டை செய்ய முடியும்.

தளத்திற்கான சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, Upload local file என்னும் டேப்பினை தேர்வு குறிப்பிட்ட கோப்பினை தேர்வு செய்து பின் Upload Now என்னும் பொத்தானை அழுத்தவும். மேலும் நேரிடையாகவும் URL முகவரியை கொடுத்தும் படத்தினை தரவேற்றம் செய்து கொள்ள முடியும். இந்த தளத்தின் உதவியுடன் .psd கோப்பு மட்டுமல்லாது அனைத்து படங்களையும் கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். 


கோப்பானது தரவேற்றம் ஆனவுடன், அடுத்து தோன்றும் விண்டோவில் எந்த பார்மெட்டில் கன்வெர்ட் செய்யப்பட வேண்டுமோ அதை தேர்வு செய்து கொண்டு பின் அளவையும் தெரிவு செய்யவும். பின் Convert Now என்னும் பொத்தானை அழுத்தவும். சிறிது நேரத்தில் படமானது கன்வெர்ட் செய்யப்பட்டு தரவிறக்க சுட்டி கிடைக்கும்.


தரவிறக்க சுட்டியை பயன்படுத்தி படத்தினை தரவிறக்கம் செய்து, வழக்கம் போல பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும் இந்த தளம் பல்வேறு இமேஜ் பைல் பார்மெட்களை ஆதரிக்க கூடியது ஆகும்.

இந்த தளத்தின் உதவியுடன் மேலே குறிப்ப்ட்ட பைல் பார்மெட்களில் கன்வெர்ட் செய்து கொள்ள முடியும்.

0 comments:

Post a Comment