தமிழில் கணினி செய்திகள்

இணைய வேகத்தினை கண்டறிய

♠ Posted by Kumaresan R in at 5:26 PM
இணையம் பயன்பாடு ஒரு காலத்தில் குறைவாக இருந்து வந்தது. ஆனால் தற்போது இணைய அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் சமூக வலைத்தளங்களும். மொபைல் சாதனங்கள் மேலும் குறைந்த விலையில் இணைய சேவையினை வழங்கும் நெட்வொர்க் புரவைடர்கள் இதன் காரணமாகவே இணைய சந்தையின் பெருக்கம் அதிகமாகியுள்ளது. மேலும் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இவ்வாறு நாம் பயன்படுத்தப்படும் இணையத்தின் வேகம் என்னவென்று கண்டறிய விண்டோஸ் இயங்குதளத்திலேயே வழி உள்ளது. இருப்பினும் அது தெளிவாக இருப்பதில்லை. இணையத்தின் வேகத்தையும், நாம் பயன்படுத்தும் இணைய டேட்டாவின் அளவையும் கணக்கிட உதவும் மென்பொருள் ஒன்று உள்ளது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திலிருந்து மென்பொருளை பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். இந்த மென்பொருளை ஜிப் பைலாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். 

கணினியில் நிறுவிய மென்பொருளை பின் ஒப்பன் செய்யவும். தோன்றும் விண்டோவில் Run Test என்னும் ஐகானை அழுத்தவும். சிறிது நேரத்தில் சோதனை நடைபெற்று பின் முடிவு வரும். அதில் இணையத்தின் வேகம் எவ்வளவு என கண்டறிய முடியும். மேலும் இந்த மென்பொருளின் உதவியுடன் பதிவிறக்கத்தின் வேகத்தையும், பதிவேற்றத்தின் வேகத்தையும் கண்டறிய முடியும். மேலும் இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும்.

1 comments:

Nice,android smartphone'ku undana net speed app sollunga kumares Sir

Post a Comment