தமிழில் கணினி செய்திகள்

முகநூலின் புதிய வசதி - அரட்டை பெட்டி மற்றும் பின்னூட்டத்தில் போட்டோவினை இணைக்கும் வசதி

♠ Posted by Kumaresan Rajendran in at June 30, 2013
முகநூல் தளம் தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவும் . இந்த தளம் மூலமாக எழுத்து வடிவிலான கோப்புகள், படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை பரிமாறிக்கொள்ள முடியும்.  முகநூல் தளத்திலிருந்தே முகநூல் நண்பர்களுடன் அரட்டை அடிக்கவும் முடியும். அதே போன்று நண்பர்கள் பதிவிடும் கட்டுரை, படங்கள், வீடியோக்களுக்கு பின்னூட்டம் கொடுக்க முடியும். இந்த பின்னூட்டம் மற்றும் அரட்டை அடிக்கும் போது படங்களையும் சேர்த்து பகிர்ந்து கொள்ள முடியும்.  

இதுவரை அரட்டை மற்றும் பின்னூட்டத்தின் போது எழுத்து மற்றும் ஐகானை மட்டுமே பகிர்ந்து கொள்ள முடியும். தற்போது படங்களை பகிர்ந்து கொள்ளும் வசதியை முகநூல் தளம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அரட்டையின் போது படத்தை இணைக்க

முதலில் உங்களுடைய  தளத்தில் உள்நுழையவும். பின் அரட்டை அடிக்கும் நண்பர்களை தேர்வு செய்யவும். அப்போது அரட்டை பெட்டியின் அடியில் உள்ள போட்டோ ஐகானை கிளிக் செய்து போட்டோவினை தேர்வு செய்யவும். சிறிது நேரத்தில் போட்டோ பதிவேற்றம் செய்யப்பட்டு போட்டோ அரட்டை பெட்டியினுள் போட்டோ தெரியும்.



பின்னூட்டத்தின் போது படத்தை இணைக்க

பின்னூட்டம் இடுகையில் பட ஐகானை கிளிக் படத்தினை தேர்வு செய்து, பின்னூட்டம் இடுகையில் படத்தை இணைக்க முடியும். 


இந்த வசதியின் மூலம் எளிதாக போட்டோவினை எளிதாக இணைக்க முடியும்.

1 Comments:

மிகவும் பயனுள்ள தகவல். உங்களின் தகவலை இன் வலை பக்கத்தில் நான் பகிர்ந்து உள்ளேன், நன்றி.

Post a Comment