தமிழில் கணினி செய்திகள்

கணினியில் உள்ள பைல்களை தேட

♠ Posted by Kumaresan R in , at 11:02 PM
கணினியை நாம் தகவல்களை சேமித்து வைக்க பயன்படுத்தி வருகிறோம். இதில் ஆப்பிஸ் கோப்புகள் (வேர்ட்,எக்சல்,பவர்பாயிண்ட்), வீடியோ , ஆடியோ மற்றும் படங்கள் போன்றவற்றை கணினியில் கணினியில் சேமித்து வைத்திருப்போம். அதில் குறிப்பிட்ட கோப்பினை தேடி சென்றால் அதனை சரியாக தேடி பெற முடியாது. குறிப்பிட்ட கோப்புகளை தேடி பெறுவதற்கு விண்டோஸ் இயங்குதளத்திலேயே வழி உள்ளது. ஆனால் இந்த வசதியை பயன்படுத்தி முழுமையாக குறிப்பிட்ட அனைத்து கோப்புகளையும் சரியாக தேடி பெற முடியாது. கோப்புகளை முறையாக தேடி பெற ஒரு இலவச மென்பொருள் வழிவகை செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை இணையத்திலிருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் சர்ச் பாக்சில் குறிச்சொல்லை உள்ளிட்டு பின் Search பைல் மெனுவை அழுத்தவும். அடுத்து நீங்கள் உள்ளிட்ட குறிச்சொல்லுக்கு ஏற்றவாறு கணினியில் உள்ள கோப்புகள் பட்டியலிடப்படும். அதில் குறிப்பிட்ட கோப்பினை வழக்கம் போல் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

0 comments:

Post a Comment