தமிழில் கணினி செய்திகள்

ஜிமெயிலை அணுக மற்றுமொரு வழி GeeMail

♠ Posted by Kumaresan Rajendran in , at May 16, 2011
மின்னஞ்சல் சேவையில் முடிசூடா மன்னன் என்று அழைக்கப்படும், கூகுள் நிறுவனத்தினுடைய மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் ஆகும். இந்த மின்னஞ்சல் சேவை தற்போது அதிகமான இணைய வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது, இதற்கு முக்கியாமான காரணமே ஜிமெயில் நிறுவனம் அளிக்கும் சேவை மட்டுமே ஆகும். இந்த ஜிமெயில் சேவையை நாம் பயன்படுத்த வேண்டுமெனில் அதற்கு உலவியின் துணையுடன் மட்டுமே சாத்தியம் ஆகும். அவ்வாறு இல்லாமல் ஜிமெயில் சேவையை மட்டும் பெற ஒரு மென்பொருள் உதவி செய்கிறது. இந்த மென்பொருள் மூலமாக நாம் பல்வேறு வசதிகளை பெற முடியும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். இந்த மென்பொருளை கணினியில் நிறுவ வேண்டுமெனில் அதற்கு Adobe air மென்பொருள் உங்கள் கணினியில் நிறுவி இருக்க வேண்டும். Adobe air மென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டி. பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். அதில் உங்களுடைய மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும். பின் உங்களுடைய கணக்கானது திறக்கப்படும். அதில் வழக்கம் போல் உங்கள் பணியை தொடரவும்.

இதை தான் சாதாரணமாகவே செய்ய முடியுமே, அப்புறம் எதற்கு இந்த மென்பொருள் என்று நினைக்க தோனும். அப்படிப்பட்டவர்களுக்கான பதில் இதோ, ஆன்லைனில் இருந்தால் மட்டுமே நாம் மின்னஞ்சல் அனுப்ப முடியும். ஆனால் இந்த மென்பொருளின் மூலமாக ஆப்லைனில் மின்னஞ்சலை உருவாக்கிவிட்டு பின் கடைசியாக Send பொத்தானை அழுத்தவும். இணைய இணைப்பு கிடைக்கும் நேரத்தில் மின்னஞ்சலானது குறிப்பிட்ட நபருக்கு சென்றடையும்.

நாம் வழக்கம் போலவே மின்னஞ்சல் சேவையை பயன்படுத்த முடியும். ஆனால் என்ன ஒன்று இதற்கு நாம் மென்பொருள்களை கணினியில் நிறுவ வேண்டி வரும். இந்த மென்பொருளானது விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் ஆகிய இயங்குதளங்களில் செயல்படக்கூடியது ஆகும். ஆனால் என்ன ஒன்று Adobe air துணையுடன் மட்டுமே இந்த மென்பொருளால் செயல்பட முடியும். இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும்.

0 Comments:

Post a Comment