தமிழில் கணினி செய்திகள்

Ashampoo Registry Cleaner முழுபதிப்பையும் இலவசமாக பதிவிறக்கம் செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in at March 21, 2011
நாம் கணினியில் பல மென்பொருள்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவோம். பின்  ஒருசில மென்பொருட்கள் தேவையில்லையெனில் அதனை அன்இன்ஸ்டால் செய்து விடுவோம். நாம் மென்பொருள்களை அன்இன்ஸ்டால்  செய்யும்போது ஒருசில மென்பொருள்கள் முழுமையாக  அன்இன்ஸ்டால் ஆகாமல் விண்டோஸ் ரிஸிஸ்டரியிலேயே தங்கிவிடும், அதுபோன்ற பைல்களை நீக்கினால் மட்டுமே கணினியானது விரைவாக செயல்படும். விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் விண்டோஸ் ரிஸிஸ்டரியானது முக்கிய பகுதியாகும். இந்த விண்டோஸ் ரிஸிஸ்டரியில் எதாவது மாற்றம் செய்ய வேண்டுமெனில் விண்டோஸ் ரிஸிஸ்டரியை முழுமையாக எடிட் செய்ய தெரிந்தவர்கள் மட்டுமே விண்டோஸ் ரிஸிஸ்டரியை எடிட் செய்ய வேண்டும். மாறாக கணினிக்கு புதியவர்கள் விண்டோஸ் ரிஸிஸ்டரியை எடிட் செய்ய வேண்டுமெனில் நாம் முதலில் விண்டோஸ் ரிஸிஸ்டரியை பேக்அப் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகே விண்டோஸ் ரிஸிஸ்டரியை எடிட் செய்ய வேண்டும். விண்டோஸ் ரிஸிஸ்டரியை பேக்அப் செய்யவும் கிளின் செய்யவும் இணையத்தில் பல மென்பொருட்கள் கிடைக்கிறன. ஆனால் எந்த ஒரு மென்பொருளும் இலவசமாக கிடைக்கவில்லை, இலவசமாக கிடைக்கும் மென்பொருள்கள் எதுவும் சிறப்புடையதாக இல்லை. தற்போது Ashampoo Registry Cleaner ரானது தற்போது லைசன்ஸ் கீயுடன் கிடைக்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி









மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். கீழே குறிப்பிடப்பட்டுள்ள முறையை பின்பற்றி லைசன்ஸ் கீயை பெற்று மென்பொருளை நிறுவிக்கொள்ளவும்.
லைசன்ஸ் கீயை இலவசமாக பெற சுட்டி

சுட்டியில் குறிப்பிட்ட வலைதளத்திற்கு சென்று உங்களுடைய ஈமெயில் முகவரியை உள்ளிட்டு Send என்னும் பொத்தானை அழுத்தவும். பின் உங்களுடைய ஈமெயிலை ஒப்பன் செய்யவும். புதியதாக ஒரு மெயிலானது உங்களுடைய கணக்கிற்கு வந்திருக்கும். அதை ஒப்பன் செய்து அதில் குறிப்பிட்டுள்ள லிங்கிற்கு செல்லவும். பின் ஒரு கணக்கை உங்களுக்கென தொடங்கி கொள்ளவும். கணக்கு உருவாக்கப்பட்ட பின் உங்களுக்கான லைசன்ஸ் கீயானது கிடைக்கும். லைசன்ஸ் கீயானது உங்களுடைய ஈமெயில் முகவரிக்கு அனுப்பபடும்.


இந்த லைசன்ஸ் கீயினை பயன்படுத்தி Ashampoo Registry Cleaner யை முழுமையாக பதிந்து கொள்ளவும். Ashampoo Registry Cleaner மென்பொருளின் சந்தை மதிப்பு $14.95 ஆகும். Ashampoo Registry Cleaner மென்பொருளை பயன்படுத்தி விண்டோஸ் ரிஸிஸ்டரியை பேக்அப் செய்து கொள்ள முடியும். விண்டோஸ் ரிஸிஸ்டரியை நாம் குறிப்பிட்ட தேதிக்கு பேக்அப் செய்து கொள்ள முடியும்.

4 Comments:

பயனுள்ள பதிவு.நன்றி.

நன்றி இராஜராஜேஸ்வரி,

நண்பா உபுண்டுவில் தாங்களின் வலைப்பூ font உடைந்து தெறிகிறது.
நன்றி!!!

விரைவில் சரி செய்து விடுகிறேன் நண்பரே,

Post a Comment