தமிழில் கணினி செய்திகள்

மொசில்லா பயர்பாக்ஸ்யை பேக்கப் எடுப்பது எப்படி

♠ Posted by Kumaresan R in , at 7:55 PM
இன்றைய கால கட்டத்தில் இணையம் பயன்படுத்துபவர்கள் பலரும் பயன்படுத்தும் உலவியாக நெருப்புநரி உள்ளது. இண்டர்நெட்டில் உலவும் போது பல விதமான தளங்களுக்கு சென்றுவந்து இருப்போம். அந்த தளங்களின் முகவரியை நினைவில் வைக்க இயலாது எனவே அவற்றை Bookmarks செய்து வைத்துஇருப்போம்.
அது போல நெருப்புநரி உளவியில் உள்ள அனைத்து வித Bookmark,History மற்றும் பலவற்றை பேக்கப் எடுக்க MozBackup என்னும் மென்பொருள் உதவுகிறது.

மென்பொருளை தரவிறக்க:  MozBackup

இந்த தளத்திற்க்கு சென்று மென்பொருளை பதிவிறக்கி இண்ஸ்டால் செய்ய வேண்டும். பின் MozBackup பினை ஒப்பன் செய்யவும். அடுத்து தோன்றும் விண்டோவில் Backup a Profile என்பதனை தேர்வு செய்து Next பொத்தானை அழுத்தவும்.அடுத்து தோன்றும் விண்டோவில் எது வேண்டுமோ அதனை செலக்ட் செய்து Next பொத்தானை அழுத்தவும்.அடுத்து தோன்றும் விண்டோவில் Finish பொத்தானை அழுத்தவும். இப்போது நிங்கள் தேர்வு செய்த இடத்தில் Backup பைலானது இருக்கும். எதாவது தகவல் இழப்பு நேரிடும் போது Restore a Profile என்பதன் மூலம் நெருப்புநரியில் உள்ள தகவலை திரும்பவும் கொண்டுவந்து விடலாம்.


MozBackup is compatible with:
 • Firefox 1.0 – 3.6
 • Thunderbird 1.0 – 3.0
 • Sunbird 0.3 – 0.9
 • Flock 1.0 – 2.0
 • Postbox 1.0 – 1.1
 • SeaMonkey 1.0a – 2.0
 • Mozilla Suite 1.7 – 1.7.x
 • Spicebird 0.4 – 0.8
 • Songbird 1.0
 • Netscape 7.x, 9.x
 • Wyzo

  2 comments:

  Hi,
  இது மிகவும் பயனுள்ளது.
  www.dailypcnews.blogspot.com

  Post a Comment