தமிழில் கணினி செய்திகள்

RUN கட்டளையை பயன்படுத்தி புரோகிராமினை எளிதாக திறக்க

♠ Posted by Kumaresan R in at 9:05 AM
நமது கணினியில் நிறுவப்பட்டிருக்கும் ஒவ்வொரு புரோகிராமினையும் திறப்பதற்க்கு நாம் Start->All Programs வழியாக சென்று தான் ஒப்பன் செய்ய வேண்டும். இதனால் நேரம் விரயம் ஆகும்.

அதிகப்படியான புரோகிராம்கள் நிறுவப்பட்ட கணினியில் நமக்கு தேவையான புரோகிராமினை தேடி கண்டுபிடித்து திறக்க நேரம் ஆகும். இந்த அனுபவம் எரிச்சலுட்டும் வகையில் அமைந்துதிருக்கும். கணினியில் புதியவர்களுக்கு ஒருவிதமான வெறுப்பினை உருவாக்கும்.

இதனை தவிர்க்க நாம் Run புரோகிராம் மூலம், எளிதாக திறக்கலாம். Run பாக்சை திறக்க Winkey+R ஒரு சேர அழுத்தினால் Run Box ஒப்பன் ஆகும். நமக்கு ஒரு சில புரோகிராம்களுக்கு மட்டுமே shorcut தெரியும் உதாரணத்திற்க்கு Ms-Word க்கு winword, Paint க்கு mspaint இதை போல நாம் விரும்பும் ஒவ்வொரு புரோகிராம்க்கும் shorcut உருவாக்க முடியும்.

இதற்கு AddToRun என்ற புரோகிராம் உதவுகிறது.

மென்பொருளை பதிவிறக்க : AddToRun

மென்பொருளை பதிவிறக்கி இண்ஸ்டால் செய்ய வேண்டும். செய்தவுடன் படம் 1 ல் உள்ள விண்டோ போல் தோன்றும்.

படம்-1

அதில் Select the Program என்பதில் எந்த புரோகிராமினை திறக்க வேண்டுமோ அதனை தேர்ந்தெடுக்கவும். பின் Alias என்பதில் Keyword யை தேர்ந்தெடுக்கவும்.
இனி ரன் கமெண்டில் keyword னை கொடுத்து தேர்ந்தெடுத்த Program யை எளிதாக ஒப்பன் செய்ய முடியும்.

உதாரணத்திற்க்கு VlC player க்கு shortcut எப்படி உருவாக்குவது என்பதை பார்ப்போம். முதலில் AddToRun புரோகிராமினை ஒப்பன் செய்ய வேண்டும். அதில் Select The Program என்பதில் vlc player நிறுவப்பட்ட இடத்தை தேர்தெடுக்கவும்(C:,D:,E:) எங்கு நிறுவப்பட்டதோ அதனை தேர்ந்தெடுக்கவும். படம் 2 யை பார்க்கவும்.

படம்-2

பின் Alias என்பதில் Shortcut னை தேர்தெடுக்கவும். VLC (vl) என்பதற்க்கு vl என்று கொடுத்து ok. பட்டனை அழுத்தவும் Successfully என்ற செய்தி வரும். படம் 3 யை பார்க்கவும்.


படம்-3


பிறகு Start->Run அல்லது Winkey+R Run பாக்சை ஒப்பன் செய்து vl என்று கொடுத்து ok கொடுத்தவுடன் VLC player ஒப்பன் ஆகும். படம் 4 யை பார்க்கவும்.


படம்-4


இதை போல நாம் விரும்பும் ஒவ்வொரு புரோகிராமிற்க்கும் இதே வழியில் Shortcut னை உருவாக்க முடியும்.


1 comments:

இன்றைய டாப் ஐம்பது வலை பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

Post a Comment