தமிழில் கணினி செய்திகள்

நெருப்புநரி உளவியில் Bookmark குகளை Backup எடுப்பது எப்படி?

♠ Posted by Kumaresan Rajendran in at June 06, 2010
நம்முடைய கணினியை பார்மெட் செய்ய நேர்ந்தாலோ அல்லது வேறு சில காரணத்திற்க்காக கணிப்பொறிக்கு ஒஎஸ் போட்டாலோ நமது கணிபொறியில் உள்ள தகவல்களை Backup எடுத்து வைத்து கொள்வோம்.

இண்டர்நெட்டை அதிகமாக பயன்படுத்துபவராக இருந்தால் Website முகவரிகளை Bookmark செய்து வைத்திருப்போம்.

அதனை பிற சாப்ட்வேர்களின் துணையில்லாமல் Backup எடுத்து Restore செய்வது எப்படி என்று நெருப்புநரி உளவியில் பார்ப்போம்.

முதலில் Bookmarks->Organize Bookmarks என்பதனை கிளிக் செய்ய வேண்டும். கிளிக் செய்தவுடன் Library விண்டோ ஒப்பன் ஆகும். அதில் Import and Backup என்ற டேப்பை கிளிக் செய்து Backup என்பதை கிளிக் செய்தவுடன் Backup செய்தவற்றை save செய்ய இடத்தை தேர்வு செய்து Save செய்ய வேண்டும்.
படம் 1 யை பார்க்கவும்.


படம்-1

அடுத்தாக Backup எடுத்த பைல்களை எப்படி Restore செய்வது என்று பார்ப்போம். முதலில் Bookmarks->Organize Bookmarks என்பதனை கிளிக் செய்ய வேண்டும். கிளிக் செய்தவுடன் Library விண்டோ ஒப்பன் ஆகும். அதில் Import and Backup என்ற டேப்பை கிளிக் செய்து Restore என்பதை கிளிக் செய்தவுடன் வரிசயாக Backup எடுத்த பைல்களை காட்டும். அதை தேர்வு செய்து Restore செய்யலாம் அல்லது கணினியில் வேறு எதாவது இடத்தில் இருந்தால் Choose File என்பதை தேர்வு செய்து Restore செய்து கொள்ள முடியும். படம் 2 யை பார்க்கவும்.


படம்-2

அவ்வளவு தான் இனி Website முகவரியை பற்றி எந்த பயமும் வேண்டியது இல்லை.


0 Comments:

Post a Comment